Wednesday, September 24, 2014
நண்பர்போலவும், திறந்த மனதோடும் பழகும் கணவர் தேவை என்று 80 சதவீத பெண்கள் தெரிவித்திருக்கிறார்கள். கணவரிடம் அதிகபட்ச அன்பு, செக்ஸ், ஆண்மை நிரம்பிய குணம் போன்றவைகளை எதிர்பார்க்கும் பெண்கள் 5 சதவீதம் மட்டுமே!
மனதிற்குள் இருக்கும் எல்லாவற்றையும் பேசும் அளவுக்கு கணவர் நடந்துகொள்ளவேண்டும். சுதந்திரம்தர வேண்டும். எதற்கும் கட்டுப்பாடு விதிக்காதவராக இருக்கவேண்டும் என்று கிட்டத்தட்ட எல்லா இளம் பெண்களுமே எதிர்பார்க்கிறார்கள்.
ஐந்து நிமிடம் பார்த்து, அடுத்த மாதமே திருமணம் செய்துகொண்டு, அவரோடு அவசர அவசரமாக தேனிலவுக்கு புறப்பட்டு செல்லும் மனநிலை தங்களுக்கு இல்லை. குறைந்தது 6 மாதமாவது பழகிய பின்பே அவர் தங்களுக்கு தகுதியானவரா என்று கண்டுபிடிக்க முடியும்.
அதற்கான வாய்ப்பை தங்களுக்கு ஏற்படுத்தித்தர வேண்டும் என்று 90 சதவீத பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். எவ்வளவு நல்லவரனாக இருந்தாலும், ‘நாங்கள் பார்த்து பேசி முடிவு செய்துவிட்டோம்.
நீ ஒத்துக்கொள் என்பதுபோல் பெற்றோர் சொன்னால் அதை ஏற்றுக் கொள்ளமாட்டோம்’ என்று, 68 சதவீத பெண்கள் அதிரடியாக சொல்கிறார்கள். பத்து சதவீத பெண்கள், வாழ்க்கையில் திருமணம் அவ்வளவு முக்கியமில்லை என்கிறார்கள்.
அவர்கள் பெரும்பாலும் வட இந்திய நகரங்களில் போய் தனியாக வேலை பார்த்த அனுபவம் பெற்றவர்கள். ‘அங்கு நிறைய பெண்கள் கல்யாணமே செய்துகொள்ளாமல் சந்தோஷமாக வாழ்கிறார்கள்.
அப்படி தம்மாலும் வாழ முடியும் என்று நம்புவதாக’ அவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். திருமணம் முடிந்த பின்பும் தங்கள் வருங்கால கணவரின் சுதந்திரத்தில் தலையிடமாட்டோம் என்று 40 சத வீத பெண்கள் சொல்கிறார்கள்.
ஆனால் தாங்கள் கொடுக்கும் சுதந்திரத்தை கணவர் தங்களுக்கு தரவேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். 30 வயதிற்கு பிறகு அது போதுமே என்கிறார்கள். 40 சதவீத பெண்கள் திருமணத்தில் ஆடம்பர அலங்காரங்கள் அவசியம் என்கிறார்கள்.
காரணம், ‘வாழ்க்கையில் ஒருமுறைதான் திருமணம் செய்கிறோம். அதனால் அலங்காரத்திற்கு நிறைய பணம் செலவிடலாம்’ என்ற ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
கல்யாணத்தை ஆடம்பரமாக நடத்தவேண்டியதில்லை என்று 58 சதவீத பெண்கள் சொல்லும்போது, 42 சதவீத பெண்கள் ‘அந்த விஷயத்தில் பெற்றோர் எடுக்கும் இறுதி முடிவை ஏற்றுக்கொள்கிறோம்’ என்றுகூறி, ஆடம்பரத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களாக இருக்கிறார்கள்.
மது அருந்தும் பழக்கம் கொண்டவர்கள் தங்களுக்கு வேண்டாம் என்றுதான் பெரும்பாலான பெண்கள் கூறியிருக்கிறார்கள். காரணம், மது அருந்துபவர்கள் அளவுக்குள் அடங்கிக் கொள்ளமாட்டார்கள்.
எல்லை மீறிப்போய்விடுவார்கள் என்ற பயம் பெண்களிடம் இருக்கிறது. டீன்ஏஜ் பெண்களில் 58 சதவீதம் பேர் தங்களுக்கு சமையல் தெரியும் என்றிருக்கிறார்கள். ஆனால் தங்களை சமையல் அறைக்குள்ளே போட்டுவிடக்கூடாது என்ற பயத்தில், ‘சமையல் அவ்வளவாக தெரியாது’ என்று கூறி விடுகிறார்களாம்!
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
0 comments:
Post a Comment