Thursday, October 16, 2014
நரைய்னியா கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் மாணவர்களிடம், மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். அப்போது 7-ம் வகுப்பு படித்துவந்த 13 வயது மாணவி 6 மாதம் கர்ப்பமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து மருத்துவ குழுவினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து, போலீசார் பாதிக்கப்பட்ட மாணவியை உடனடியாக அருகே இருந்த சர்தார் மருத்துவமனைக்கு கூடுதல் பரிசோதனைக்கு அழைத்து சென்றனர் என்று மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அனில் குமார் சிங் தெரிவித்துள்ளார். இதற்கிடையே மாணவியின் பெற்றோர்கள் அளித்துள்ள தகவலின்படி, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக ராம் பிரசாத் என்பவருக்கு எதிராக பெண்கள் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் தெரிக்கப்பட்டுள்ள நபர் கிராமத்தில் கடை ஒன்றை நடத்தி வருகிறார் என்றும் அவர் சிறுமியை ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரதம் திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...


0 comments:
Post a Comment