Wednesday, October 15, 2014
திருமங்கலம் தாலுகா கள்ளிக்குடியில் கல்லுப்பட்டி மற்றும் காரியாபட்டி செல்லும் நெடுஞ்சாலைகள் உள்ளது. இந்த சாலைகள் மதுரை – தூத்துக்குடி மற்றும் மதுரை – கன்னியாகுமரி – கொல்லம் செல்லும் தேசிய சாலைகளை இணைக்கும் சாலையாக உள்ளது.
இதில் காரியாபட்டி செல்லும் சாலையில் ரெயில்வே கேட் இருந்தது. அதிக வாகனங்கள் சென்றதால் ரயில்வே கேட்டை அகற்றி விட்டு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. மழை பெய்யும் போது மழைநீர் தேங்காமல் இருக்க பக்கவாட்டில் துளை அமைக்கப்பட்டு அதன் வழியே மழைநீர் செல்லும் வகையில் அமைக்கப்பட்டது. சரியான பராமரிப்பு இல்லாமல் மண் தேங்கி துளையை அடைத்துவிட்டது.
தற்போது கடந்த சில தினங்களாக மழை பெய்து முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி உள்ளது. அதில் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது தடுமாறி விழும் நிலை ஏற்படுகிறது. பள்ளம் இருப்பதை தெரிந்தவர்கள் ஓரமாக செல்கின்றனர். தண்ணீர் சற்று அதிகமாக இருக்கும் போது வாகனங்களின் புகை போக்கி வழியாக தண்ணீர் சென்று விடுகிறது. இதனால் வாகனம் ஓடாமல் நின்றுவிடுகிறது.
அப்போது இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் வாகனத்தை விட்டு இறங்கி தள்ளி செல்கின்றனர். சிலர் தண்ணீரீல் விழுந்து விடுகின்றனர். இந்த நிலையை போக்க ரெயில்வே நிர்வாகம் சுரங்கப்பாதையின் கீழ் உள்ள சாலையை சீரமைத்து தர வேண்டும் என பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி பல்லடம் உடுமலை தாராபுரம் மற்றும் காங்கயம் உட்கோட்டங்களில் விநாயகர் 2014.சதுர்த்தி விழாவினை முன்னிட்ட...
-
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– இலங்கை அகதி ஊஞ்சலூர் அருகே ஈஞ்சம்பள்ளியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இதில் வசித்து வந்தவர்...
-
சென்னையில் மாபெரும் கூட்டம் ? புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நமக்கு அனுப்பிய அடுத்த வீடியோவில் கூறியிருப்பது. நேற்று நம...
-
கவுந்தப்பாடி அருகே ஆழ்துளை கிணறு குழாய் அடைப்பை சரிசெய்தபோது தலையில் கம்பிகுத்தியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். தொழிலாளி கவுந்தப்பாடி அர...
-
அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி மடத்துக்குளம் பகுதியில் அ.தி.மு.க.வினர் சிறப்பு வழிபாடுகள் நடத்தி வருகின்றனர். அதன்...
-
மதுரை மாநகராட்சி உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் 85 வது வார்டு கிருஷ்ணராயர் தெப்பகுளம் அதிமுக வேட்பாளர் லதாகுமார் ,4 வது வார்டு ஆல...
-
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தாராபுரம் (தனி), அவினாசி (தனி), பல்லடம், உடுமலை, மடத்துக்குளம், கா...
-
திருமங்கலம் தாலுகா கள்ளிக்குடியில் கல்லுப்பட்டி மற்றும் காரியாபட்டி செல்லும் நெடுஞ்சாலைகள் உள்ளது. இந்த சாலைகள் மதுரை – தூத்துக்குடி மற்ற...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
0 comments:
Post a Comment