Tuesday, October 07, 2014
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் காலந்தாழ்த்தாது உடனடியாக தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வலியுறுத்தி சிஐடியு சார்பில் திருப்பூரில் வாகனப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
திருப்பூர் பெருமாநல்லூரில் திங்களன்று காலை 8 மணிக்கு இந்த பிரச்சார இயக்கத்தை சிஐடியு பனியன் சங்கத் தலைவர் கே.காமராஜ் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து பாண்டியன் நகர், போயம்பாளையம் பிரிவு, எஸ்.ஏ.பி.பின்புறம், சிட்கோ, கருவம்பாளையம், பல்லடம் சாலை, காங்கயம் சாலை, ஊத்துக்குளி சாலை உள்பட நகரின் அனைத்துப் பகுதிகளிலும் பனியன் தொழிற்சாலைகள் நிரம்பிய பகுதிகளில் தொழிலாளர்கள் மத்தியில் போனஸ் உரிமையை வலியுறுத்தி பிரச்சாரம் செய்யப்பட்டது.
இதில் சிஐடியு பனியன் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் சி.மூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் டி.குமார், மாவட்ட நி்ர்வாகிகள் பி.முருகேசன், பி.பாலன், ஜி.சம்பத் மற்றும் பனியன் சங்க நிர்வாகிகள் எம்.என்.நடராஜ், கே.நாகராஜ் ஆகியோர் உரையாற்றினர்.
இந்த பிரச்சார இயக்கத்தின் தொடர்ச்சியாக செவ்வாயன்று மாலை குமரன் சிலை அருகில் அனைத்து தொழில் சார்ந்த சிஐடியு சங்கங்கள் சார்பில் போனஸ் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
காமநாயக்கன்பாளையத்தில் இருந்து கரடிவாவி செல்லும் சாலையில் புளியம்பட்டி பிரிவு உள்ளது. இங்கு நேற்று காலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிண...
-
காங்கயம் அருகேயுள்ள வீணம்பாளையம் என்ற ஊரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது40). கட்டிட தொழிலாளியான இவரும், இவரது மனைவி மணிமேகலை (35) ஆகிய இருவரும...
0 comments:
Post a Comment