Saturday, November 01, 2014
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அடுத்துள்ள குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி மற்றும் மிதிவண்டிகளை திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வ.ஜெயராமன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன், மாவட்ட ஊராட்சித்தலைவர் வி.எம்.சண்முகம் ஆகியோர் வழங்கினர். விழாவில் மேலும் பூளவாடி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 163 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளும், 104 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளும், குடிமங்கலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 45 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளும், 111 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளும், பெதப்பம்பட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 190 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளும், 177 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளும், அனிக்கடவு, ராமச்சந்திராபுரம், அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 35 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளும், 35 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளும், ஏ.நாகூர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 116 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளும், 71 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளும் ஆக மொத்தம் 1012 பேருக்கு வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் குடிமங்கலம் ஒன்றியச்செயலாளர் சுந்தரசாமி, தொகுதிச்செயலாளர் பாண்டியன், ஒன்றியக்குழுதலைவர் முருகன், உடுமலை நகரமன்றத்துணைத் தலைவர் எம்.கண்ணாயிரம், வட்டாட்சியர் சைபுதீன், செயல் அலுவலர் செல்வராஜ், ஒன்றியக்குழு துணைத்தலைவர் முரளி, பூளவாடி ஊராட்சி மன்றத்தலைவர் முருகானந்தன், குடிமங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் ஜனார்த்தனன், மாவட்ட கவுன்சிலர் ராதாமணி, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குனர்கள், மாவட்ட, நகர, ஒன்றிய அண்ணா தி.மு.க.நிர்வாகிகள், பள்ளி தலைமை ஆசிரியர் பங்கஜம் மற்றும் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூர், : திருப்பூர் மாநகர பகுதியில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுத்து, அட்டை வழங்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று பொதுமக...
-
திருச்சி மாவட்ட ஜேசிபி உரிமையாளர்கள் சங்க தொடக்க விழா நடைபெற்றது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நட...
-
மதுரை மாநகரில் மையப்பகுதியில் எம் ஜி ஆர் விளையாட்டு மைதானம் பல்வேறு விளையாட்டுகளின் மையமாக உள்ளது .மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்ல முயலும் குடியேற்றக்காரர்கள் கடலில் மூழ்குவதை தடுப்பதற்காக மேலும் பெரிய முயற்சிகள் மேற்க...
-
திருச்சி கனரா வங்கி மண்டல அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் கனரா வங்கி அதிகாரிகள் சங்க பொ...
-
*திருச்சியில் 36 பேருக்கு* கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை இன்று 5 பேர் பாதிப்பு மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தகவல் திருச்சி...

0 comments:
Post a Comment