Saturday, November 29, 2014
திருப்பூர் அனுப்பர்பாளையத்தை அடுத்துள்ள ஆத்துப்பாளையம் ஐ.ஜி.தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் புஷ்பராஜ் (42). இவர் இதே பகுதியில் சாயப்பட்டறை வைத்து நடத்தி வருகிறார். திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் இருந்து ஆர்டரின் பேரில் பெற்று பனியன் ரோல்களுக்கு சாயப்பட்டறையில் சாயமேற்றி கொடுத்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பனியன் ரோல்களுக்கு சாயமிட்டு சாயப்பட்டறையின் முன்புறம் காலி இடத்தில் உள்ள கம்பிகளில் 48 பனியன் ரோல்களை காய போட்டிருந்தார்.
நேற்றுக்காலை வந்து பார்த்தபோது 40 பனியன் ரோல்கள் மட்டுமே இருந்தது. இரவில் யாரோ மர்ம மனிதர்கள் 8 பனியன் ரோல்களை திருடிச்சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.50 ஆயிரமாகும். சாயப்பட்டறையில் பொருத்தி இருந்த சி.சி.டிவி.கேமராவில் பார்த்தபோது மர்ம நபர்கள் ஒரு காரில் வந்து சென்றது பதிவாகி இருந்தது. இது குறித்து 15.வேலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து சாயப்பட்டறையில் காயப்போட்டிருந்த பனியன் ரோல்களை திருடிச்சென்ற மர்ம மனிதர்களை தேடி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...

0 comments:
Post a Comment