Saturday, November 29, 2014
திருப்பூர் மாநகராட்சியில் வேலை செய்யும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய பணப்பயனை நிலுவையைக் கணக்கிட்டுச் சொல்வதற்கே நிர்வாகத்தில் லஞ்சம் கேட்கும் அவலநிலை உள்ளது.
இதைக் கண்டித்தும், அந்த தொழிலாளர்களின் கோரிக்கையை வலியுறுத்தியும் வெள்ளியன்று திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாநகராட்சியில் 800க்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் ஏராளமானோருக்கு 2014 ஏப்ரல் மாதம் வழங்கப்பட்டிருக்க வேண்டிய ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு (சரண்டர்) ஊதியம் வழங்கப்படவில்லை. இத்தொழிலாளர்களின் பணிப்பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால் தகுதி படைத்த துப்புரவுத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தேர்வு நிலை ஊதிய நிர்ணய நிலுவைத் தொகை, சிறப்புநிலை ஊதிய நிர்ணய நிலுவைத் தொகை இதுவரை கணக்கிட்டு வழங்கப்படவில்லை.
இத்துடன் துப்புரவுத் தொழிலாளர்கள் வீடில்லாமலும், வசிக்கும் வீடுகளுக்கும் பட்டா இல்லாமலும், அடிப்படை வசதிகள் இல்லாமல் துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
எனவே மேற்கண்ட பணப்பயன் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், அரசு அறிவித்த அகவிலைப்படி உயர்வுகளைக் கணக்கிட்டு வழங்க வேண்டும், பணிப்பதிவேடுகளைப் பராமரிக்க தனி அலுவலர் நியமித்து முறையாகப் பராமரிக்க வேண்டும், தென்னம்பாளையம் காலனி, அரண்மனைப் புதூர், அனுப்பர்பாளையம் துப்புரவுத் தொழிலாளர்கள் குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க வேண்டும், அனைத்து துப்புரவுத் தொழிலாளர்களுக்கும் குடியிருப்பு வசதி செய்து தர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
துப்புரவுத் தொழிலாளர் சங்க திருப்பூர் கமிட்டித் தலைவர் ஈ.பி.ஜெயகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக மாநகராட்சி ஆணையர் எம்.அசோகனைச் சந்தித்து நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர். இதில் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியம் மற்றும் அகவிலைப்படி நிலுவை ஆகியவற்றை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் எம்.அசோகன் தெரிவித்தார். இதனால் உடனடியாக ரூ.25 லட்சம் இத் தொழிலாளர்களுக்கு பட்டுவாடா செய்யப்படுகிறது.
இதர கோரிக்கைகள் குறித்து டிசம்பர் முதல் வாரத்தில் சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட துறை அலுவலர்களைக் கொண்டு கூட்டம் நடத்தவும் ஆணையர் ஏற்பாடு செய்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
மாணவர்கள்-தொழில் நிறுவனங்களை இணைக்கும் புதிய மொபைல் ஆப் “ஹையர் மீ ” வேலைவாய்ப்பு தேர்வுக்கென மாணவர்களையும், தொழில் நிறுவனத்தைய...
-
திருச்சியில் மக்கள் அரசு கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம் உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது அப்போது தலைவர் வழக்கற...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பொதுக் கழிப்பிடத்தில் இருந்து பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தை புதன்கிழமை மீட்கப்பட்டது. திருப்பூ...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
பெங்களூரு: ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள பாரப்பன அக்ராஹரம் கோர்ட் வளாகத்திற்கு முன் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க,., த...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...

0 comments:
Post a Comment