Thursday, November 27, 2014
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி பாரிவேல் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.
திருப்பூர் காலேஜ் ரோடு 1–வது குறுக்குதெருவை சேர்ந்த செல்வராஜ் என்பவர் தனது மகளுக்கு இருதய அறுவை சிகிச்சைக்கு நிதிஉதவி வழங்க கோரி மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது;–
நான் பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறேன். எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். முதல் குழந்தை ரம்யா(வயது 6). கணியம்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில் 1–ம் வகுப்பு படித்து வருகிறாள். கடந்த சில மாதங்களுக்கு முன் அவளுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. அவளை பரிசோதித்த டாக்டர்கள் அவளுக்கு இருதயத்தில் துவாரம் இருப்பதாகவும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்யும் படியும் அறிவுறுத்தினார்கள். ஆனால் மருத்துவ செலவுக்காக போதிய வருமானம் இல்லாததால் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியவில்லை. இதனால் அரசு சார்பில் அறுவை சிகிச்சை செய்ய போதிய நிதி அளித்து உதவ வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சி மற்றும் ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை சார்பில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–
திருப்பூர் மாவட்டத்தில் அரசால் அறிவிக்கப்பட்ட உபரிநிலங்கள் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த குடும்பங்களுக்கு பிரித்து வழங்குவதாக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி காங்கயம் தாலுக்கா பழைய கோட்டை, குட்டப்பாளையம் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இந்த நிலங்களை வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
ஆதித்தமிழர் பேரவை சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:–
திருப்பூர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்களை திருப்பூர் மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் மனித கழிவுகளை கையால் அள்ளும் பணிகளில் ஈடுபடுத்தி வருகின்றனர். சட்டப்படி இது தடை செய்யப்பட்டதாகும். இதனால் மாவட்ட மற்றும் மாநகர நிர்வாகம், கண்காணிப்பாளர்கள் இந்த தடை சட்டத்தை அமல் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
பாரத் மக்கள் கட்சி சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:–
திருப்பூர் மாவட்டம் முழுவதும் ஆவின்பால் மற்றும் தனியார் பால்விற்பனை முகவர்கள் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு பால் விற்பனை செய்து வருகின்றனர். ஏழைகள் மற்றும் குழந்தைகளின் பாதிப்பை கருத்தில் கொண்டு பால் விற்பனையாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
-
திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
-
மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் மதுரை தல்லாகுளத்தில் உள்ள பி.டி.ஆர். திருமண மகாலில் நேற்று மாலை நடந்தது. மதுரை ம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
ஊராட்சி செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளருக்கு இணையான காலமுறை ஊதியத்தை அரசு கருவூலத்தில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அ...
-
மதுரை: மக்களின் முதல்வர் ஜெயலலிதா என்பதற்கு மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் அமைச்சர் நத்தம் விசுவநாதன் புது விளக்கம் அளித்தார்.முல்லை ...
-
அரசு அனுமதியளித்த பின்னர், கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் மாவட்ட ஆட்சியர் சகாயம் தலைமையில் விசாரணை துவக்கப்படும் என, மத...
-
திருச்சி ராமகிருஷ்ணா மேம்பாளம் அருகில் பாமக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றத்து அதில் பாமக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...

0 comments:
Post a Comment