Monday, December 01, 2014
குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது பூளவாடி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பூளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. குடியிருப்பு அதிகம் உள்ள இந்த பகுதியில் பஸ் நிலையம், வாரச்சந்தை உள்ளதால் தினமும் ஏராளமான பொதுமக்கள் இந்த டாஸ்மாக் கடையை கடந்து செல்ல வேண்டியநிலை உள்ளது. இந்த டாஸ்மாக் கடையில் மதுஅருந்தும் குடிமகன்கள் சிலர் போதையில் சாலையோரம் கிடப்பதும், தகாத வார்த்தைகளில் பேசுவதும் தொடர்கதையாகி வருகிறது.
இதனால் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இந்த டாஸ்மாக் கடையை இந்த பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இருப்பினும் டாஸ்மாக் கடை அகற்றப்படாத நிலையில் அதனை அகற்றக்கோரி அரசியல் கட்சியினர், பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரியும், பூளவாடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இரவு காவலர் நியமிக்கக்கோரியும் பூளவாடி நால்ரோட்டில் பா.ஜ.க.வினர் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பூளவாடி கிளை செயலாளர் தங்கவேல் தலைமை தாங்கினார். குடிமங்கலம் ஒன்றிய தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க நிர்வாகிகள் குருசாமி, நாகராஜன், சோமசுந்தரம், ரமேஷ் உள்ளிட்ட 50–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
மாணவர்கள்-தொழில் நிறுவனங்களை இணைக்கும் புதிய மொபைல் ஆப் “ஹையர் மீ ” வேலைவாய்ப்பு தேர்வுக்கென மாணவர்களையும், தொழில் நிறுவனத்தைய...
-
திருச்சியில் மக்கள் அரசு கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம் உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது அப்போது தலைவர் வழக்கற...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பொதுக் கழிப்பிடத்தில் இருந்து பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தை புதன்கிழமை மீட்கப்பட்டது. திருப்பூ...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
பெங்களூரு: ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள பாரப்பன அக்ராஹரம் கோர்ட் வளாகத்திற்கு முன் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க,., த...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...

0 comments:
Post a Comment