Tuesday, December 30, 2014
திருப்பூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில் ராமலிங்க அடிகளாரின் 192–வது ஆண்டு விழா மற்றும் சன்மார்க்க சங்கத்தின் 77–வது ஆண்டு விழா திருப்பூரில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு சங்கத்தலைவர் சித்ரா ராமசாமி தலைமை தாங்கினார்.
ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணி முன்னிலை வகித்தார். பொருளாளர் ஜீவானந்தம் ஆண்டறிக்கை வாசித்தார். வடலூர் கருணை இல்ல நிர்வாகத் தலைவர் சுப்பிரமணியம், பேராசிரியர் ஆனந்தகுமார் ஆகியோர் பேசினார்கள்.
அதைத்தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி அளவில் மாணவ மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதில் பள்ளி அளவில் குளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் அமர்நாத், முத்தணம்பாளையம் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி மாணவி பூரணி, வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சவுந்தரியா ஆகியோர் முதல் 3 இடங்களை பெற்றனர்.
அதே போல கல்லூரி அளவில் நடைபெற்ற போட்டியில் கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர் சந்தோஷ்குமார், திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லூரி மாணவி வித்யா, திருப்பூர் ஏஞ்சல் பொறியியல் கல்லூரி மாணவர் ஆதித்யா விக்னேஷ் ஆகியோர் முதல் 3 இடங்களை பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு முறையே ரூ.2,000, ரூ.1,500, ரூ.1,000 ரொக்கப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
முடிவில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், யோகா, வாத்திய கருவிகள் இசைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட திருக்குறள், கம்பராமாயணம், சித்தர் பாடல்கள் ஆகியவை பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த விழாவில் பேராசிரியர் புருசோத்தமன், டிட்டோனி முத்துசாமி, பசுமை ராமசாமி, கே.எஸ்.சி. பள்ளி உதவி தலைமை ஆசிரியர் தங்கவேல் உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர்.
முடிவில் கந்தசாமி நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
காங்கயம் அருகே, எதுவும் எழுதப்படாத நிலையில் மைல் கல் காட்சி அளிக்கிறது. காங்கயம்-தாராபுரம் நெடுஞ்சாலையில், வட்டமலை கிராமத்துக்கு முன்பாக...
-
பத்திரிகை தலையங்கங்களில் இலக்கியம் அவசியம் இடம் பெறவேண்டும் என, அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். மதுரை மணியம...
-
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பூர் மாவட...
-
திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவர் அந்த பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் ஒப்பந்ததாரராக வேலை செய்து வருகிறார்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
மின் கட்டணத்தை நுகர்வோர் முன் பணமாக செலுத்தினால் 6 சதவீதம் வட்டி வழங்கப்படும் என்று, தமிழக மின் வாரியம் அறிவித்துள்ளது. தமிழக மின் ...
-
திருப்பூர் போயம்பாளையம் வடிவேல் நகரை சேர்ந்தவர் கலைவாணன் (வயது 38). சம்பவத்தன்று வேலைக்கு செல்ல ரோட்டை கடப்பதற்காக ரோட்டோரம் நின்றுகொண்டி...

0 comments:
Post a Comment