Monday, March 30, 2015
உடுமலைபேட்டை அருகே பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராம்குமார் (31) மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் ஞாயிறன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உடுமலைபேட்டை பகுதியில் பள்ளி ஒன்றில்மூன்றாம் வகுப்பு படித்து வந்த சிறுமியிடம் அதே பள்ளியில் வேலை செய்துவந்த ஆசிரியர் ராம்குமார் என்பவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் மீது மாணவியின் பெற்றோர் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் புகார் கூறியுள்ளனர். இந்த தகவல் அறிந்தவுடன் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர் உடனடியாக காவல் துறைக்குத் தெரிவித்து குற்றம் செய்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் பேச்சுவார்த்தை நடத்தியது தவறு. மேலும்,கல்வித்துறை, காவல் துறைக்குத்தெரிவிக்காமல், நிர்வாகரீதியாக விசாரணை நடத்தி அந்த ஆசிரியரை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்ததும், குற்றவாளியைத் தப்புவதற்குச் செய்யக்கூடிய தவறான நடவடிக்கையாகும்.
ஆகவே காவல் துறைக்குத் தெரிவிக்காமல் சட்டத்துக்குப் புறம்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர்,மார்க்சிஸ்ட் கட்சியினருடன் சேர்ந்து காவல் துறையிடம் புகார் கொடுத்த பிறகே,சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் அவர் மீது குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் (பாக்சோ) சட்டப்பிரிவு 9 (எம்)-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது மட்டும் போதுமானதல்ல. பள்ளியின் ஆசிரியரே சிறுமியிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை தொடர்ந்து மோசமாக நடந்து கொண்டிருந்ததால் மேற்படி பாக்சோ சட்டப்பிரிவு 9 (எப்) மற்றும் 9 (எல்) ஆகிய இரு பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் இந்த வழக்கில் சட்ட நடைமுறைகளை சரியான முறையில் கடைப்பிடித்துக் குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத் தரவும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் அவரது பெற்றோருக்கும் உரிய கலந்தாலோசனை வழங்கி உளவியல் பாதிப்பைப் போக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
இப்படிக்கு
கே.காமராஜ்
மாவட்டச் செயலாளர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாவட்டம், முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை சுற்றுவட்டார விவசாயிகளின் தேங்காய், கொப்பரை தேங்காய், எ...
-
நண்பரை கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. 10 நாட்களில் விசாரணை முடிக்கப...
-
தமிழ் சினிமாவில் 90களில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற பூவே பூச்சூடவா படத்தின் உல்டா தான் இந்த மஞ்சப்பை. இன்றைய காலகட்டத்தி...
-
இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி திருப்பூரில் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். ஊத்துக்குளி செட்டிதோட்டம் அண்ணமார்நகர் பகுதியிலுள்ள ...
-
திருப்பூர்,செப்.25- திருப்பூர் கோ-ஆப்டெக்ஸ் குமரன் விற்பனை நிலையத்தில் மகாராணி பட்டுச் சேலையை கலெக்டர் கோவிந்தராஜ் அறிமுகம் செய்து வைத்...
-
கோவை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் ரேஷன் கடையை இடித்து சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அ...
-
சிவகங்கை: மணல் கடத்திய லாரியை பிடிக்கச் சென்ற எஸ்.ஐ.க்கு அடி, உதை விழுந்தது. இந்த சம்பவத்தால், மானாமதுரை அருகே பரபரப்பு தொற்றிக்கொண்டது. ...
-
திருச்சி 7.12.15 சபரிநாதன் 9443086297 திருச்சி சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் பொன்மலை பணிமனை கோட்டம் சார்பில் சிறப்பு வெ...
-
தமிழுக்குச் செம்மொழி வாரம்கொண்டாட வேண்டும் என்றுஇந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுப்பிய கடிதத் திற்கான பதில் இதுவ...
-
J.J. College of Engineering and Technology, Tiruchirappalli Graduation Day – 26.08.2018 J.J. College of Engineering and Technolog...

0 comments:
Post a Comment