Wednesday, April 08, 2015
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேலும், இதற்கு பயன்படுத்தப்பட்ட மின் மோட்டார், டீசல் என்ஜின்களை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணை நூற்றுக்கணக்கான கரையோர கிராமங் களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில் கோடைக் காலம் தொடங்கியதில் இருந்தே அமராவதி அணையின் நீர் இருப்பு அதல பாதாளத்திற்கு சென்றது. இதனால், பொதுமக்களுக்குத் தேவையான குடிநீரை விநியோகம் செய்ய முடியாமல் உள்ளாட்சி நிர்வாகங்கள் திணறி வருகின்றன.
இந்நிலையில், அமராவதி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் சட்டவிரோதமாக மின் மோட்டார்கள் மற்றும் டீசல் என்ஜின்கள் மூலமாக ஆங்காங்கு தண்ணீர் திருட்டு நடைபெறுவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் சென்றன. இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் உத்தரவின்பேரில், உடுமலை கோட்டாட்சியர் அ.சாதனைக்குறள் தலைமையில் வருவாய்த்துறை, பொதுப்பணித் துறை, மின்சாரம், காவல் ஆகிய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் அமராவதி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் திங்கள்கிழமை அதிகாலை திடீர் ஆய்வு நடத்தினர்.
இந்த ஆய்வில், கொழுமம், கொமரலிங்கம், ருத்ராபாபாளையம் ஆகிய கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் சட்டவிரோதமாக தண்ணீர் திருட்டில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தண்ணீர் உறிஞ்சுவதற்காக பயன்படுத்தப்பட்ட 8 மின் மோட்டார்கள், 9 டீசல் என்ஜின்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 8 விவசாயிகளுக்கு மின் இணைப்பையும் அதிகாரிகள் உடனடியாக துண்டித்தனர்.
தண்ணீர் திருட்டில் ஈடுபட்டதாக 17 விவசாயிகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நண்பரை கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. 10 நாட்களில் விசாரணை முடிக்கப...
-
காரைக்குடியில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியை செந்தில் நாதன் எம்.பி பார்வையிட்டபோது எடுத்த படம்.அருகில் பழனிச்சாமி எம்.எல்.ஏ,சேர...
-
மங்கள்யான் விண்கலம் அனுப்பிய முதல் புகைப்படம் பேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ளது. பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள...
-
போக்குவரத்து நெரிசலை மட்டும் காரணம் காட்டி மதுரை மாநகராட்சி பகுதிகளுக்குள் செய்து வரும் மாற்ற...
-
இலங்கையின் வடக்கே ரயில்வே கடவைப் பகுதிகளில் விபத்துக்கள் அதிகரித்து வருவது குறித்து கவலைகள் எழுந்துள்ளன. வட பகுதியில் புதிதாக ரயில் ...
-
தமிழுக்குச் செம்மொழி வாரம்கொண்டாட வேண்டும் என்றுஇந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுப்பிய கடிதத் திற்கான பதில் இதுவ...
-
கோவை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் ரேஷன் கடையை இடித்து சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அ...
-
இந்தியாவின் முதன்மை கட்சியாக பா.ஜ.க. திகழ்கிறது என கேரளாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். கோழிக்கோடு: கேரள மாநிலம் க...
-
அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில், சீன அதிபரின் பெயரை தவறாக வாசித்த செய்தி வாசிப்பாளர் பணி ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
.jpg)
0 comments:
Post a Comment