Wednesday, April 15, 2015
அனுப்பர்பாளையம், : சேவூர் அருகே மளிகை கடை வியாபாரியிடம் மிளகாய் பொடிதூவி நூதனமுறையில் வழிப்பறி செய்த பள்ளி மாணவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவிநாசி ஒன்றியம் வேட்டுவபாளையம் ஊராட்சி அசநல்லிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி(35). இவர் சேவூர் அசநல்லிபாளையம் சாலையில் புற்றுக்கண் மாரியம்மன் கோயில் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல கடையை பூட்டி விட்டு, வீட்டுக்கு மனைவி சங்கீதாவுடன் டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே டூவீலரில் வந்த 2 நபர்கள் முத்துசாமியை வழிமறித்தனர். வண்டியை நிறுத்துவதற்குள் முத்துசாமி, சங்கீதா மீது பைக்கில் வந்தவர்கள் மிளகாய் பொடியைத் தூவினர். கண்ணில் எரிச்சலுடன் முத்துசாமியும், சங்கீதாவும் தங்கள் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டனர். ஆனாலும் முத்துசாமியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கலியை மர்ம நபர்கள் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர். சங்கீதா சத்தம் போட்டுக் கொண்டே நகைகளை கெட்டியாக கையில் பிடித்துக் கொண்டதால் 9 பவுன் தாலிக்கொடி தப்பியது. சேவூர் போலீசார் வழக்குபதிந்து தீவிர விசாரணை நடத்தினர். நகை பறிப்பில் ஈடுபட்டது சேவூரில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவன் மற்றும் அவினாசி காமராஜ் நகரை சேர்ந்த செல்வராஜ் மகன் மருதாசலம் (22) ஆகியோர் என்பது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாவட்டம், முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை சுற்றுவட்டார விவசாயிகளின் தேங்காய், கொப்பரை தேங்காய், எ...
-
தமிழ் சினிமாவில் 90களில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற பூவே பூச்சூடவா படத்தின் உல்டா தான் இந்த மஞ்சப்பை. இன்றைய காலகட்டத்தி...
-
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதா வது:– வருவாய்க்கு மீறி சொத்துக் குவித்த வழக்கில் அ.தி.மு.க. பொத...
-
இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி திருப்பூரில் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். ஊத்துக்குளி செட்டிதோட்டம் அண்ணமார்நகர் பகுதியிலுள்ள ...
-
* மங்கள்யான் விண்கலம் செலுத்தப்பட்டதன் முக்கிய நோக்கமே, செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் உள்ளதா என்பதை கண்டுபிடிப்பதுதான். ...
-
திருப்பூர்,செப்.25- திருப்பூர் கோ-ஆப்டெக்ஸ் குமரன் விற்பனை நிலையத்தில் மகாராணி பட்டுச் சேலையை கலெக்டர் கோவிந்தராஜ் அறிமுகம் செய்து வைத்...
-
சிவகங்கை: மணல் கடத்திய லாரியை பிடிக்கச் சென்ற எஸ்.ஐ.க்கு அடி, உதை விழுந்தது. இந்த சம்பவத்தால், மானாமதுரை அருகே பரபரப்பு தொற்றிக்கொண்டது. ...
-
இந்தியாவின் முதன்மை கட்சியாக பா.ஜ.க. திகழ்கிறது என கேரளாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். கோழிக்கோடு: கேரள மாநிலம் க...
0 comments:
Post a Comment