Wednesday, April 08, 2015
திருப்பூர், தென்னம்பாளையம் செல்வபுரம் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட மக்கள் பொது பயன்பாட்டுக்கான ரூ. 2 கோடி மதிப்பு உடைய நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மீட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி, 50-ஆவது வார்டு தென்னம்பாளையம், செல்வபுரம் பகுதியில் பொது பயன்பாட்டுக்கான 18 சென்ட் நிலம் உள்ளது. இதை அப்பகுதியை சேர்ந்த சில நபர்கள் ஆக்கிரமித்து விற்பனை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, செல்வபுரம் பகுதி மக்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த ஜூலை மாதம் நிலத்தை பராமரிக்க மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சி ஆணையர் அசோகன் உத்தரவின் பேரில், 4-ஆவது மண்டல உதவி ஆணையர் செல்வநாயகம் தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள், திருப்பூர் தெற்கு போலீஸார் செவ்வாய்க்கிழமை சம்பவ இடத்திற்கு சென்றனர்.
நிலத்தை மீட்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டபோது, அந்தப் பகுதியை சேர்ந்த சிலர் அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவு, ஆவணங்கள் காண்பிக்கப்பட்டு நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர்.
மேலும் மீட்கப்பட்ட இடத்தில் மாநகராட்சியினர் கம்பி வேலி அமைத்து, அந்த இடத்திற்குள் அத்துமீறி யாரும் நுழையக்கூடாது என எச்சரிக்கை பலகை வைத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நண்பரை கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. 10 நாட்களில் விசாரணை முடிக்கப...
-
காரைக்குடியில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியை செந்தில் நாதன் எம்.பி பார்வையிட்டபோது எடுத்த படம்.அருகில் பழனிச்சாமி எம்.எல்.ஏ,சேர...
-
அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில், சீன அதிபரின் பெயரை தவறாக வாசித்த செய்தி வாசிப்பாளர் பணி ...
-
இலங்கையின் வடக்கே ரயில்வே கடவைப் பகுதிகளில் விபத்துக்கள் அதிகரித்து வருவது குறித்து கவலைகள் எழுந்துள்ளன. வட பகுதியில் புதிதாக ரயில் ...
-
மங்கள்யான் விண்கலம் அனுப்பிய முதல் புகைப்படம் பேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ளது. பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள...
-
இந்தியாவின் முதன்மை கட்சியாக பா.ஜ.க. திகழ்கிறது என கேரளாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். கோழிக்கோடு: கேரள மாநிலம் க...
-
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியம், கச்சைகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக, சிறப்பு தாய்...
-
போக்குவரத்து நெரிசலை மட்டும் காரணம் காட்டி மதுரை மாநகராட்சி பகுதிகளுக்குள் செய்து வரும் மாற்ற...
-
ஈரோடு, : வேலைவாங்கி தருவதாக கூறி பலரிடம் 9 லட்சம் ரூபாய் வரை பணத்தை வாங்கி மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்ப...
-
கோவை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் ரேஷன் கடையை இடித்து சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அ...
0 comments:
Post a Comment