Saturday, August 29, 2015
விருதுநகர் மாவட்டத்தில், நாட்டுக்கோழிப்பண்ணைகள்
அமைக்க தொழில்முனைவோர், விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் வே.ராஜாராமன் வெள்ளிக்கிழமை
வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசு இறைச்சிக் கோழிப்பண்ணைத் தொழிலை
ஊக்குவிக்கும் வகையில் நிகழாண்டில் நாட்டுக் கோழிகள் வளர்ப்புத் திட்டத்தை
செயல்படுத்த அனுமதி அளித்துள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் 107
நாட்டுக் கோழிப்பண்ணைகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் குறைந்த மூலதனமான ரூ.1.29 லட்சம்
செலவில் 250 நாட்டுக்கோழிகள் கொண்ட பண்ணைகள் அமைக்கலாம். அதிலும் விருப்பம்
உள்ளவர்களுக்கு அரசின் சார்பில் கொட்டகை அமைக்க 25 சதவீதம் மானியம்
அளிக்கப்படும். இதை பயனாளிகள் சுய மூலதனமாகவோ அல்லது வங்கி நிதி உதவியுடனோ
பண்ணை அமைத்து பயனடையலாம். ஏற்கனவே, இத்திட்டத்தில் கறிக்கோழி வளர்ப்பில்
பண்ணைகள் அமைத்துள்ள பயனாளிகள் பயன்பெற இயலாது.
இதில், விவசாயிகள், தனிநபர், தொழில் முனைவோர் ஆகியோர்
விண்ணப்பிக்கலாம். இவர்களிடம் கோழிப்பண்ணை அமைக்க போதிய நிலம் தங்கள்
பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தமிழ்நாடு கால்நடை
மருத்துவம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பயிற்சி
மையங்களில் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படும்.
இது தொடர்பான விவரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை
மருந்தகங்கள், கோட்ட அலுவலகம் அல்லது மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தை
தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
Share on facebook Share on twitter More Sharing Services வாட்ஸ் அப் அப்ளிகேஷனை இனி இணையத் த...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
0 comments:
Post a Comment