Monday, August 17, 2015
தமிழ் சினிமா உலகில் நாட்டுப்புற பாடல்களுக்கு என்று தனித்த ஒரு பாதையை தொடங்கி வைத்தவர் பரவை முனியம்மா "மதுரை வீரன் தானே " என்ற பாடல் பட்டி தொட்டிகள் எல்லாம் பட்டையை கிளப்பியதுஅத்தகைய குரலுக்கு சொந்தக்காரர் தற்போது மதுரை காளவாசல் தனியார் மருத்துவமனையில் மூச்சு திணறலு க்காக சிகிச்சை பெற்றார் தமிழ் நியூஸ் டிவி பிரத்யேக பேட்டிக்காக அவரை சந்தித்தோம்தமிழ்த் திரைப்படங்களில் தூள் எனும் படத்தில் திரைப்படப் பாடகராகவும், நடிகராகவும் அறிமுகமானார்காதல் சடுகுடு, பூ, தேவதையைக் கண்டேன் என இருபத்தியைந்து திரைப்படங்களுக்கும் மேல் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். கலைஞர் தொலைக்காட்சியில் கிராமத்துச் சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்மேடை நிகழ்ச்சிகள் உள்ளூரிலும் லண்டன், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் இடம்பெற்றுள்ளன தற்போது 76 வயதாகும் இவரால் முன்னைப் போல பாடுவதற்கு உடல் நலம் ஒத்துழைக்கவில்லை என்றும் ஆனால் தொடர்ந்து நடிப்பேன் என்றார்
கடந்த 30 வருடங்களாக நாட்டுப்புற பாடல்களில் கோலோச்சிய இவர் திரை உலகிலும் முத்திரை பதித்தார் தற்போதோ உடல் நிலை சரியில்லாததால் பாட முடியாத சூழலிலும் பல்வேறு நினைவுகளை நம்மிடையே பகிர்ந்து கொண்டார்
எண்ணற்ற நாட்டுப்புற பாடல்களை தாம் பாடி உள்ளதாகவும் தற்போது பல புதிய பாடகர்கள் திரையில் நாட்டுப்புற பாடல்களை பாடி அசத்தி வருவதாகவும் அவர்களை தாம் வாழ்த்தி வரவேற்பதாகவும் கூறினார்
1988 -90 களில் பாட வந்த தம்மால் 76 படங்களுக்கு மேல் நடித்து இருப்பதகவும் தம்முடைய ஆசான் பெருமாள் கோனாரின் உதவியால் நாட்டுப்புற பாடல்களை கற்று தேர்ந்ததாகவும் குறிப்பிட்டார்
கணவர் வெள்ளைச்சாமி மறைந்ததற்கு பிறகு மதுரையிலே இருப்பதால் மாரி படத்திற்கு வந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை இருந்ததாக குறிப்பிட்டார் 1 மணி நேரம் கூட இடைவெளி விடாமல் பாட முடிந்த தம்மால் தற்போது மருத்துவரின் ஆலோசனைப் படி பப்ட முடியாத நிலை உள்ளதாக குறிப்பிட்டார்
நடிகர்கள் விஷால் ,சிவகர்த்திகேயன் ,தனுஷ் ஆகியோர் தமக்கு உதவிகள் செய்து வருவதாக குறிப்பிட்டார்
விரைவில் அவர் நலம் பெற்று திரும்ப வேண்டும் என நமது விருப்பத்தை தெரிவித்து நெகிழ்ச்சியோடு அவரிடம் இருந்து விடை பெற்றோம்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
Share on facebook Share on twitter More Sharing Services வாட்ஸ் அப் அப்ளிகேஷனை இனி இணையத் த...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
0 comments:
Post a Comment