Thursday, October 15, 2015
பல்லடத்தை அடுத்த சித்தம்பலத்தில் கூடுதல் பேருந்து வசதி வேண்டி அரசுப் பேருந்தை மாணவர்கள், கிராம மக்கள் புதன்கிழமை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்லடம் ஒன்றியம் சித்தம்பலம் கிராமத்தைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பல்லடத்திலிருந்து சித்தம்பலம் வழியாக குள்ளம்பாளையம் வரை செல்லும் 7 ஏ நகரப் பேருந்தில் கேத்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
இப்பேருந்தில் பல்லடம் வடுகபாளையத்திலேயே அதிகப்படியான பயணிகள் ஏறி விடுவதால் சித்தம்பலத்திற்கு பேருந்து வரும்போது பேருந்தில் ஏறமுடியாமல் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் சிரமப்படுகின்றனர். பேருந்தில் ஏற முடியாதவர்கள் ஆட்டோ, வேன் மூலமாக கூடுதல் கட்டணம் செலுத்தி கேத்தனூரில் உள்ள பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.
கூட்டத்தைக் கருத்தில் கொண்டு இவ்வழித்தடத்தில் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர், பல்லடம் எம்.எல்.ஏ. பரமசிவம், அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் பலமுறை சித்தம்பல கிராம மக்கள் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த அக்கிராம மக்கள், புதன்கிழமை காலை, சித்தம்பலத்திற்கு வந்த அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடைபெற்றதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்...
-
தனியார் வங்கியின் பெயரில் கூடுதலாக சில எழுத்துகளைச் சேர்த்துக் கொண்டு, போலி வங்கி நடத்திய 4 பேரை தருமபுரி குற்றப் பிரிவு காவல் துறையினர் திங...

0 comments:
Post a Comment