Friday, December 04, 2015
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் 10வது நாளாக 3.12.2015 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் முகாமிட்டு நிவாரணப்பணிகள் மற்றும் பொதுப்பணித்துறை மூலம் கால்வாய்கள், ஒடைகள், அடைப்புகளை சீரமைக்கும் பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்கள் வீரநாயக்கன்தட்டு மேல்நிலைப்பள்ளி மாநகராட்சி தொடக்கப்பள்ளி நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார்,ஆகியோர் நேரில் சந்தித்து உணவு வழங்கி ஆறுதல் கூறினார்.
பின்னர் கோரம்பள்ளம் மற்றும் காலங்கரை கிராமம் குளத்தில் ஏற்பட்டுள்ள உடைப்பை பொக்லைன் இயந்திரம் மூலம் சீரமைக்கப்படும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்து உடனடியாக முடிக்குமாறு உத்தரவிட்டார். மேலும், திருச்செந்தூர் மற்றும் உடன்குடி பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள பழுதடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்வுகளின் போது மாண்புமிகு மேயர் அ.பா.ரா.அந்தோணி கிரேஸ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் பி.டி.ஆர்.ராஜகோபால், மாவட்ட வருவாய் அலுவலர் சு.முருகையா, திருச்செந்தூர் கோட்டாட்சியர் தியாகராஜன், திருச்செந்தூர் பேரூராட்சித் தலைவர் ராஜநாளா, உடன்குடி பேரூராட்சித்தலைவர் ஆயிஸா உம்மாள், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் .தே.ராம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
TRIVANDRUM ACTIVITIES CBOA Trivandrum Region today donated 40 bottles of sanitizers and 1500 masks to Trivandrum District City ...
-
தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டி, பாரதிநகர், ராஜீவ்நகர், பொன்னான்டி நகர் உள்ளிட்ட 22 இடங்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் ச...
-
ஊத்துக்குளி அருகே கவுண்டம்பாளையம் கிராமத்தில் சாயக் கழிவுநீரை வெளியேற்றி வரும் பிரிண்டிங் ஆலைகளை மூட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் வல...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து பெங்களூர் தனிக்கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதைத்தொடர்ந்து தமிழகத்த...
-
திருச்சி கோ அபிஷேகபுரம் கோட்டத்தில் 75ஆவது சுதந்திர தின விழா உதவி ஆணையர் செல்வ பாலாஜி தலைமையில் கொடியேற்று விழா நடைபெற்றது திருச்சி 75 சுதந...
-
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் பிறந்த நாள் விழா ஒவ்வொரு ஆண்டும் அரசின் சார்பில் மே-23 ...
-
கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மாண்புமிகு நகராட்சி நிர்வா...
-
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் கல்லூரிகள் பயிற்சி நிலையங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் ம...
-
திருச்சி டெல்லியில் பெண் காவலர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்...

0 comments:
Post a Comment