Monday, December 07, 2015
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் அளிக்க தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தூத்துக்குடி வந்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட திரு.வி.க நகரில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆறுமுகநயினார் தலைமையில் நிவாரண உதவிகளை தேமுதிக தலைவர் விஜகாந்த் வழங்கினார். பின்னர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து குறிஞ்சிநகர், முத்தையாபுரம், முள்ளக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், வெள்ள நிவாரணப்பணிகளில் அரசியாக்கக்கூடாது. கடந்த அக்டோபர் மாதத்திலே மத்திய அரசு, மழை வெள்ளம் வருவது குறித்து எச்சரிக்கை செய்தது. மாநில அரசு அதனை உதாசீனப்படுத்தியது. தூத்துக்குடியில் மழை வெள்ளத்த்திற்கு காரணம் உப்பாற்று ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகள் தான். வைகுண்டராஜன் போன்ற பெரிய மனிதர்கள் அந்த ஓடையை ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளனர். அதிமுக - திமுகவினர் ராஜா வீட்டு கன்றுகுட்டி போல உலா வருகின்றனர். அவர்கள் உண்மையிலே, ஊழல் வீட்டு கன்று குட்டிகள் தான் என்று கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தாராபுரம் (தனி), அவினாசி (தனி), பல்லடம், உடுமலை, மடத்துக்குளம், கா...
-
திருமங்கலம் தாலுகா கள்ளிக்குடியில் கல்லுப்பட்டி மற்றும் காரியாபட்டி செல்லும் நெடுஞ்சாலைகள் உள்ளது. இந்த சாலைகள் மதுரை – தூத்துக்குடி மற்ற...
-
அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி மடத்துக்குளம் பகுதியில் அ.தி.மு.க.வினர் சிறப்பு வழிபாடுகள் நடத்தி வருகின்றனர். அதன்...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– இலங்கை அகதி ஊஞ்சலூர் அருகே ஈஞ்சம்பள்ளியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இதில் வசித்து வந்தவர்...
-
சென்னையில் மாபெரும் கூட்டம் ? புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நமக்கு அனுப்பிய அடுத்த வீடியோவில் கூறியிருப்பது. நேற்று நம...
-
கவுந்தப்பாடி அருகே ஆழ்துளை கிணறு குழாய் அடைப்பை சரிசெய்தபோது தலையில் கம்பிகுத்தியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். தொழிலாளி கவுந்தப்பாடி அர...
0 comments:
Post a Comment