Friday, May 13, 2016
காங்கயம் தொகுதியில் போட்டியிடும் திமுக,காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பி.கோபியை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளரான நடிகை குஷ்பு காங்கயத்தில் வியாழக்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்றால் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வருவாராம். 2011-இல் ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்கும்போது தமிழகத்தில் 1,800 டாஸ்மாக் கடைகள் இருந்தன. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் ஆண்டு தோறும் 1,000 கடைகள் அதிகரிக்கப்பட்டு, தற்போது 6,800 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதுதான் ஜெயலலிதா அரசின் சாதனை. திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன் தள்ளுபடி, கல்விக் கடன் தள்ளுபடி, நெசவாளர்களுக்கு 750 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பாக முதியோர் உதவித் தொகையை ஆயிரத்திலிருந்து ரூ. 2 ஆயிரமாக உயர்த்தித் தரப்படும். 100 நாள் வேலைத் திட்டம் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்தத் திட்டம் 100 நாளிகளில் இருந்து 150 வேலை நாள்களாக உயர்த்தப்படும். திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட 501 திட்டங்களில் 81 திட்டங்கள் விவசாயிகளின் மேம்பாட்டுக்கு ஆனது. மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். அந்த மாற்றம் மே 16-இல் நிகழ இருக்கிறது என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...
-
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் கடந்த 20 நாட்களாக சுற்றித்திரியும் ஒற்றை குரங்கு பார்ப்போரையும் பள்ளி மற்றும் கல்ல...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...

0 comments:
Post a Comment