Friday, May 13, 2016
.
திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு நினைவுகூறும் வகையிலான பிரசார வாகனத்தை வனத் துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து திருப்பூர் தெற்குத் தொகுதி கருவம்பாளையம் பகுதியில் அதிமுக வேட்பாளர் சு.குணசேகரனுக்கு ஆதரவு திரட்டி அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது:
கடந்த 5 ஆண்டுகளில் விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 6 லட்சத்து 3,662 குடும்பங்கள் பயன்பெற்றுள்ளன. விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டத்தில் 3 லட்சத்து 59,278 பயனாளிகளுக்கு ரூ.168 கோடியே 92 லட்சம் செலவில் இப்பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.
திருமணத்துக்குத் தாலிக்குத் தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கும் திட்டத்தில் இதுவரை 12,109 பயனாளிகளுக்கு ரூ.57.12 கோடி மதிப்பீட்டில் உதவி வழங்கப்பட்டுள்ளது. மாநில அளவில் திருமண உதவி தொகையுடன் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்திற்காக மட்டும் இந்த ஆண்டு ரூ.6,870 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் முதல்வர் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 6,730 பெண் குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர். கல்வித் துறைக்கு இந்த ஆண்டு ரூ.21,000 கோடியை தமிழக முதல்வர் ஒதுக்கியுள்ளார் என்றார்.
அதிமுக நிர்வாகிகள், தம்பி மனோகரன், அன்பகம் திருப்பதி, ஷாஜகான், சடையப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...

0 comments:
Post a Comment