Tuesday, May 17, 2016
தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள 15-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் சு மார் மூவாயிரத்திற்கும் அதிகமான மலைவாழ் மக்கள் உள்ளனர். மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட இந்த மலைவாழ் மக்களுக்காக மாவடப்பு மலைக்
கிராமத்தில் இந்த முறை ஒரு வாக்குச் சாவடி அமைக்கப்பட்டிருந்தது.
மாவடப்பு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் மலைவாழ் மக்கள் வாக்களித்தனர். மேலும், கோடந்தூர் மலைக் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் கோடந்தூர், ஆட்டுமலை, பொறுப்பாறு ஆகிய செட்டில்மெண்ட் கிராமங்களைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் வாக்களித்தனர்.
அமராவதி வனச்சரகத்துக்கு உள்பட்ட தளிஞ்சி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடியில் தளிஞ்சி, தளிஞ்சி வயல் ஆகிய செட்டில்மெண்டுகளைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் வாக்களித்தனர்.
மேலும், குருமலை, திருமூர்த்தி மலை, ஈசல் திட்டு ஆகிய செட்டில்மெண்ட்டுகளுக்கு கீழே திருமூர்த்தி நகரில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியிலும் மலைவாழ் மக்கள் தங்களது வாக்குகளைச் செலுத்தினர். கரட்டுப்பதி செட்டில்மெண்ட்டைச் சேர்ந்த வாக்காளர்கள் அமராவதி நகரில் வாக்களித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...

0 comments:
Post a Comment