Monday, April 24, 2017
On Monday, April 24, 2017 by Unknown in Tiruppur
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோயில் தேரோட்டம் நேற்று மாலை கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
உடுமலையில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 28ம்தேதி துவங்கியது. கம்பம் நடுதல், கொடியேற்றம், பூவோடு ஏந்துதல், திருக்கல்யாண நிகழ்ச்சி என திருவிழா களைகட்டியது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. காலை 6.30 மணிக்கு மாரியம்மன் சூலதேவருடன் திருத்தேருக்கு எழுந்தருளினார். பக்தர்கள் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர். மதியம் பரிவேட்டை நடந்தது. தைத்தொடர்ந்து மாலை 4.15 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வடம் பிடித்து துவக்கிவைத்தார். பரம்பரை அறங்காவலர் ஸ்ரீதர், மகேந்திரன் எம்பி, மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்ன ராமசாமி, கோட்டாட்சியர் சாதனை குறள், டிஎஸ்பி விவேகானந்தன், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சாந்தி, இந்து சமய அறநிலைய துறை ஆய்வாளர் சண்முகசுந்தரம், செயல் அலுவலர் சங்கர சுந்தரேஸ்வரன், மாவட்ட வன அலுவலர் பெரியசாமி, நகராட்சி ஆணையர் சரவணகுமார், தாசில்தார் தயானந்தன் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் வடம் பிடித்தனர். தேரோட்டத்தை காண காலை முதலே சுற்று வட்டார கிராமங்களில் இருந்து பக்தர்கள் உடுமலையில் குவிய துவங்கினர். பக்தர்களுக்கு தேரோட்டம் நடைபெறும் வீதிகளில் நீர்மோர், குளிர்பானம், அன்னதானம் வழங்கப்பட்டது. தேர் மாரியம்மன் கோயிலில் புறப்பட்டு பொள்ளாச்சி ரோடு, தளி ரோடு, வடக்கு குட்டை வீதி, பெரியகடை வீதி, சதாசிவம் வீதி, தங்கம்மாள் ஓடை வழியாக மீண்டும் பொள்ளாச்சி ரோட்டை அடைந்து மாலை 6.30 மணிக்கு நிலைக்கு வந்து சேர்ந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க, பாலக்காடு கேசவன் என்ற யானை தேரை தள்ளியது. இன்று (24ம் தேதி) காலை குங்கும அபிசேகம், மாலையில் சாந்தி பூஜை, இரவு 8 மணிக்கு அம்மன் பரிவேட்டை நிகழ்ச்சியும், இரவு குட்டை திடலில் வாணவேடிக்கையும் நடக்கிறது. நாளை மகா அபிஷேகம், முத்துப்பல்லக்கு ஊர்வலத்துடன் திருவிழா நிறைவடைகிறது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
J.J. College of Engineering and Technology, Tiruchirappalli Graduation Day – 26.08.2018 J.J. College of Engineering and Technolog...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
-
த மிழகத்தில் எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாய் இருக்கிறது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், கோயில் நகரம், கொலை நக...
-
மாணவியர்க்கு வனத்துறை .எம்.எஸ்.எம்.ஆனந்தன் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் திருப்பூர் கலெக்...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
சபரிநாதன் 9443086297 தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பாக திருச்சியில் வேலை...

0 comments:
Post a Comment