Sunday, June 04, 2017

On Sunday, June 04, 2017 by Tamilnewstv in    

திருச்சி             04.076.17

*புற்றுநோய் குறித்த பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவிதமாகவும்
நோய்யிலிருந்து குணமடைந்தவர்களுக்கான மறுவாழ்வு ஏற்படுத்தும் விதமாக
திருச்சியில் கருத்தரங்கு நடைபெற்றது.*

தமிழகத்தில் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பல முயற்சிகள்
நடைபெற்று கொண்டே இருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு கர்ப்ப பை
புற்றுநோய் மார்பக புற்றுநோய் என்பது அதிகளவில் பரவி வருகிறது. இன்றைய
சூழலில் இளைஞர்கள் சிகரெட் மற்றும் போதைபொருட்களுக்கு
அடிமையாகிவருகின்றனர். இதனை உபயோகிப்பவர் மட்டுமன்றி அருகில் இருப்பவரும்
பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். இதனால் குறைந்தவயதிலேயே புற்றுநோய்
உள்ளிட்ட பல்வேறு நோயினால் பிடிக்கப்பட்டு நாட்டில் இறப்புவிகிதம்
அதிகரித்து வருகிறது. ஆகவே புற்றுநோய் ஏற்படுவதை தவிர்க்க சிகரெட்
போதைப்பொருட்களை உபயோகிப்பதை குறைக்கவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்தும் விதமாகவும் புற்றுநோய்யிலிருந்து குணமானவர்களுக்காகவும்
இந்நிகழ்ச்சி திருச்சி இந்தியன் மருத்துவ சங்கம் கட்டித்தில் இன்று
நடைபெற்றது.

0 comments: