Saturday, August 05, 2017
தொழில் முனைவோருக்கான வழிகாட்டுதல் விழா
யுனைடெட் எக்கனாமிக் போரம் மற்றும் எம்.ஏ.எம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியும் இணைந்து “தொழில் முனைவோருக்கான வழிகாட்டுதல் விழா – ஐபுNஐவுநு -2017” என்கின்ற தலைப்பில் 05.08.2017 அன்று கல்லூரியிலுள்ள நியூட்டன் அரங்கத்தில் சிறப்பாக நடைப்பெற்றது. இவ்விழாவினை கல்லூரியின் தாளாளர் முனைவர் எம்.ஏ. மாலுக் முகமது மாஸ்டர் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஸன்ஸ் அவர்கள் வரவேற்புரையுடன் விழாவை துவக்கி வைத்தார். இவ்விழா மூன்று பிரிவுகளாக பிரித்து தொகுத்து வழங்கப்பட்டது. முதல் பிரிவில் முனைவர் லோகேஷ் போரிக்கௌடா – சாம்ஸங் ஆர் ரூ டி இன்ஸ்டிடியூட் இந்தியாவின் மூத்த தலைவர் தொழில் முனைவோருக்கான புதிய கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவத்தை பற்றி பேசினார். மேலும் அவர் மற்றவர்களிடம் இருந்து தனித்து சிறப்பாக செயல்படுவதை பற்றியும் தனித்துவத்தின் அவசியத்தை பற்றியும் கூறினார். இவரை தொடர்ந்து திரு. அல்தஃப் ஹ{ஸைன் - சார்டீஸ் மற்றும் ஹோம்ஸ் இயக்குனர் மற்றும் மெஜஸ்டிக் பவுன்டேஸன்ஸ்-ன் தாளாளர்தொ ழில் யுத்திகள் மற்றும் தொழில் தர்மங்கள் குறித்தும்வி ளம்பரங்கள் சந்தைபடுத்துதல் பற்றியும் எடுத்துரைத்தார். இவரின் உரையை தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களை கல்லூரியின் தாளாளர் முனைவர் எம்.ஏ. மாலுக் முகமதுää மாஸ்டர் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஸன்ஸ் அவர்கள் கௌரவித்து நினைவு பரிசுகளை வழங்கினார்.
மேலும் திரு. ஷாஜித் ஷதாக் - ப்ராஜக்ட் இன்வஸ்மெண்ட் அட்வைசரி இயக்குனர் இன்னோ அட்வைசரி இந்தியா லிமிடெட்-ன் நிர்வாக இயக்குனர் தொழில் முனைவோருக்கான புதிய போக்குகளின் நடைமுறையையும் அதற்கான வழிகளையும் எடுத்துரைத்தார். தொழில் முனைவோர்கள் நிதிமேலாண்மையை திறம்பட எவ்வாறு செயல்படுத்துவது என்பதையும் நிதி திறட்டுவதற்கான வழிமுறைகளையும் எடுத்துக்கூறினார். இவர்களை தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வரும் தொழிலதிபர்கள் தங்களின் கருத்துக்களை வருங்கால தொழில் முனைவோர்களிடம் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியானது கலந்து கொண்ட ஒவ்வொருவரையும் தொழிலதிபர்களாக செயல்பட ஊக்குவிக்கும் வகையில் இருந்தது. இறுதியாக நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மாணவர்கள்-தொழில் நிறுவனங்களை இணைக்கும் புதிய மொபைல் ஆப் “ஹையர் மீ ” வேலைவாய்ப்பு தேர்வுக்கென மாணவர்களையும், தொழில் நிறுவனத்தைய...
-
திருச்சியில் மக்கள் அரசு கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம் உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது அப்போது தலைவர் வழக்கற...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருச்சி 7.7.16 சபரிநாதன் 9443086297 திருச்சி தமிழ் ;; நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் மார்க்கெட் ப...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பொதுக் கழிப்பிடத்தில் இருந்து பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தை புதன்கிழமை மீட்கப்பட்டது. திருப்பூ...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
பெங்களூரு: ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள பாரப்பன அக்ராஹரம் கோர்ட் வளாகத்திற்கு முன் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க,., த...
0 comments:
Post a Comment