Tuesday, June 09, 2020
On Tuesday, June 09, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி நாடாளுமன்றத் உறுப்பினர் திரு நாவுக்கரசர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 20 லட்சம் ரூபாய் செலவில் 35 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமை வகித்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்களை நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் வழங்கினார். அதன் பின்னர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கொரோனா வைரஸ் உண்மையாக பாதித்தவர்களுக்கு இன்னும் பரிசோதனை செய்யப்படவில்லை.
உண்மையாக பாதித்தவர்களுக்கு எல்லாம் பரிசோதனை செய்து இருந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் இடம் இருந்திருக்காது. அதனால் தான் தற்போது தனியார் மருத்துவமனைகள் வசமுள்ள 25 சதவீத படுக்கைகளை கையகப்படுத்த தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.
ஆனால் இது போதுமானது கிடையாது. 50 சதவீத படுக்களை கையகப்படுத்த வேண்டும். அதேபோல் அனைவரிடமும் தமிழக முதலமைச்சரின் காப்பீட்டு திட்ட அட்டை இருக்க வாய்ப்பு இல்லை. மேலும் தனியார் மருத்துவமனைகளில் 15 நாட்கள் வரை ஒருவர் அனுமதிக்கப்பட்டு இருந்தால் பல ஆயிரம் ரூபாய் செலவாகும். இதனால் கொரோனா மேலும் தீவிரமடையும். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும். ஆகையால் கரோனா சிகிச்சைக்கான முழு செலவையும் அரசே ஏற்க வேண்டும். மக்களுக்கு உடனடியாக ரொக்கம் தேவைப்படுகிறது. அதனால் மாநில அரசு 7,500 ரூபாய், மத்திய அரசு 5,000 ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும். பெட்ரோல் டீசல் விலை உயர்வை கைவிட வேண்டும். வீட்டு இணைப்புக்கான மின் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது போதுமானதாக இல்லை.
அரசு உத்தரவை மக்கள் பின்பற்றி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தனியார் நிறுவனங்களும் மூன்று மாதமாக மூடிக் கிடப்பதால் அவர்களால் சம்பளம் கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆட்குறைப்பு செய்கிறார்கள். ஆகையால் நலிந்துள்ள தொழில் நிறுவனங்களுக்கு அரசு உதவி செய்யவேண்டும். சலுகைகளை அறிவிக்க வேண்டும். கடன் கொடுக்க வேண்டும். கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். கரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் திருப்தி இல்லை. குறைந்தபட்சம் மாவட்டத்திற்கு இரண்டு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மையம் ஏற்படுத்த வேண்டும். அரசின் உத்தரவை தனியார் மருத்துவமனைகளும் பின்பற்ற வேண்டும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திண்டுக்கல் அருகே சின்னாளபட்டியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் பேரூராட்சி நிர்வாகம் சார்பாக சுமார் 4500–க்கு மேல் குடி தண்ணீர் இணைப்புகள் ...
-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திருப்பூர் புறநகர் மாவட்டம் சார்பில் மக்களின் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 6...
-
திருச்சியிலிருந்து 773வெளிமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் அவரவர் ஊர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மேற்பார்வையில் அனுப்பி வைக்கப்பட்ட...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் மாநகரில் வருகின்ற 08.09.216 அன்று நடக்க விருக்கும் விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு போக்குவரத்துக்கு இடையுறு இல்லாதவாறு திருப்பூர் ம...
-
*ஜி - கார்னரில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.* *தியாகி வ.உ.சி. ஒர்க்கர்ஸ் யூனியன் கோரிக்கை* ...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...

0 comments:
Post a Comment