Thursday, September 17, 2020
நீதிமன்ற விதிகளை மீறிய மாவட்ட நிர்வாகம் மற்றும் தாசில்தார் வழக்கறிஞர் சரமாரி புகார்
30 ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்த
7 ஏக்கர் நிலத்தை விதிமீறி மாவட்ட நிர்வாகம் கைப்பற்றியதாக புகார்
திருச்சி:
தனி நபருக்குச் சொந்தமான 7 ஏக்கர் நிலத்தை விதிமீறி மாவட்ட நிர்வாகம் கைப்பற்றியதாக புகார் எழுந்துள்ளது.
திருச்சி மாவட்டம் போலீஸ் காலனி அருகே அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேச பாண்டியன். இவர் அப்பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு குண்டூர்- போலீஸ் காலனி இடையிலான 100 அடி சாலையில் ஏழு ஏக்கர் நிலம் இருந்தது. கடந்த 30 ஆண்டுகளாக இந்த நிலத்தில் முருகேச பாண்டியன் விவசாயம் பார்த்து வந்தார். அதோடு கோழிப் பண்ணையும் அமைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் இந்த நிலம் அரசுக்கு சொந்தமானது என்று புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து இது தொடர்பாக திருச்சி மாவட்ட நீதிமன்றம் மற்றும் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நேற்று சம்பந்தப்பட்ட நிலம் ஆக்கிரமிப்பு என்று கூறி மாவட்ட நிர்வாகம் நிலத்தை கைப்பற்றியது. திருவெறும்பூர் தாசில்தார் தலைமையிலான அலுவலர்கள் நேற்று பொக்லைன் இயந்திரத்துடன் அங்கு சென்று, வயல் வரப்புகள் மற்றும் கட்டடங்களை இடித்துத் தள்ளினர். அவள் பட்ட காவல் நிலைய ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில் 20க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதுகுறித்து முருகேச பாண்டியன் வழக்கறிஞர் வடிவேலு கூறியதாவது: இந்த 7 ஏக்கர் நிலத்தை கடந்த 30 ஆண்டுகளாக முருகையா பாண்டியன் நிர்வகித்து வருகிறார். இதற்கான ஆவணங்கள் அனைத்தும் சரியாக உள்ளது. இந்நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் திருவெறும்பூர் தாசில்தார் மற்றும் அலுவலர்கள் அவசரஅவசரமாக ஆக்கிரமிப்பு என்று கூறி இதை அகற்றியுள்ளனர். இது சட்ட விரோதமாகும். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், தாசில்தார் ஆகியோருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். இது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். முதியவரான முருகேச பாண்டியனை மாவட்ட நிர்வாகம் மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். மேலும் நீதிமன்றத்தின் வாயிலாக இவர்களுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத் தருவேன் என்று வழக்கறிஞர் வடிவேல் பேட்டி அளித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment