Tuesday, December 08, 2020
திருச்சி ரயில்வே தொழிலாலர்கள்,விவசாயிகள் போராட்டத்தால் மத்திய மோடி அரசு கவிழம் - திருச்சியில் SRMU துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் பேட்டி
மத்திய மோடி அரசு கொண்டு வந்த
3வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ராஜஸ்தான், மத்தியபிரதேஷ், பஞ்சாப்
மாநிலத்தைச் சேர்ந்த 1 லட்சம் விவசாயிக டெல்லி முற்றுகையிட்டு கடந்த 12நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் இன்று இந்திய அளவிலான பாரத் பந்த்
அறிவிக்கப்பட்டது.
பல்வேறு மாநில கடைகள் அடைக்கப்படும் மறியலகளும், போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி எஸ்.ஆர்.எம்.யு ரயில்வே தொழிற்சங்கம் சார்பில் SRMU துணை பொதுச் செயலாளர்
வீரசேகரன் தலைமையில் பொன்மலை ஆர்மரிகேட் முன்பு விவசாயிகளுக்டு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மேலும்
ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், ஊட்டி மலை ரயிலை இயக்குவதை தனியாருக்கு தாரைவார்ப்பதை கண்டித்தும்,
மேலும் தொழிலாளர்களை பாதுகாத்துவரும் தொழிற்சங்கங்களுக்கு எதிரான தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தை கண்டித்தும், 8 மணி நேர வேலையை
12 மணி நேரமாக மாற்றுவதை கண்டித்தும் கோஷமிட்டனர்.
இதில் ரயில்வே தொழிலாளர்கள் 200க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு
விவசாயிகளுக்கு ஆதரவகவும் மத்திய, மாநில அரசை கண்டித்து
கோஷமிட்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த
SRMU துணை பொதுச் செயலாளர் வீரசேகரன்
சர்வாதிகாரம் போக்கில் செயல்படும் மோடிக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்திரா காந்தி காலத்தில் எப்படி இந்தியா ஆட்சியை இழந்தாரோ அதே போல் ரயில்வே தொழிலாளர்கள்,
பாமர மக்கள்
விவசாயிகள்
போராட்டத்தால் மத்திய மோடி அரசு கவிழம் என கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தையெட்டி ஆர்மரிகேட் முன்பு பாதுகாப்பு போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...

0 comments:
Post a Comment