Showing posts with label ஜம்மு-காஷ்மீர். Show all posts
Showing posts with label ஜம்மு-காஷ்மீர். Show all posts
Thursday, September 04, 2014
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி உயிரிழந்த திருவண்ணாமலை ராணுவ வீரரின் உடலை இன்று அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
திருவண்ணாமலை பவித்ரம் கிராமத்தில் கரியான் செட்டித் தெருவைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் ராயர். அரசுப் போக்கு வரத்துக் கழகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் ரஞ்சித் (25). கடந்த 2010-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தவர் ஸ்ரீநகர் குப்வாரா பகுதியில் 41 ஆர்.ஆர்.பட்டாலியன் படைப் பிரிவில் வாகன ஓட்டுநராக பணிபுரிந்தார்.
இந்நிலையில், குப்வாரா மலைப் பிரதேசத்தில் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையில் நடந்த சண்டையின்போது, ரஞ்சித் சென்ற வாகனம் தீவிரவாதிகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி உள்ளது. இதில் ரஞ்சித் உட்பட சிலர் இறந்தனர். இந்த தகவல் ரஞ்சித்தின் பெற்றோருக்கு செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப் பட்டது.
ரஞ்சித்தின் உடல் புதன்கிழமை சொந்த ஊரில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அவரது உடல் சென்னை வந்து சேருவதில் சற்று தாமதம் ஏற்பட்டதால் இன்று (வியாழக் கிழமை) கொண்டுவரப்படுகிறது. ராயரின் சொந்த ஊரான வெறையூர் அடுத்த சு.கம்பம்பட்டு கிராமத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக ரஞ்சித் உடல் வைக்கப்படுகிறது.
பின்னர், அங்குள்ள மயானத்தில் ராணுவ மரியாதையுடன் ரஞ்சித்தின் உடல் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
தாராபுரம் அருகே விஷம் குடித்து விட்டதாக மனைவியிடம் செல்போனில் தகவல் கூறிய நிதி நிறுவன அதிபர் வயல்வெளியில் பிணமாக கிடந்தார். தாராபுரம் ...
-
திருச்சி உழவர் சந்தை பகுதியில் தமிழக தேவேந்திர குல வெளாளர்கள் பட்டியல் மாற்ற இயக்கம் சார்பாக மாநகர் மாவட்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில்...
-
உடுமலையில் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் நிரப்புவதற்காக கார்டு வழங்கி ஏமாற்றி மோசடி செய்ததாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். உடுமலை போடிபட...
-
சர்வதேச அளவில் மிகவும் மகிழ்ச்சியானவர்கள் ஃபிஜி நாட்டு மக்களே என்று உலகளவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டு...
