Saturday, September 28, 2019

28.09.2019 சனிக்கிழமை

திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப்பள்ளியில் தமிழரின் பாரம்பரிய தற்காப்புக்கலையான சிலம்பக் கலையை மீட்டெடுக்கும் முயற்சியாக மாநில அளவிலான சிலம்ப போட்டியை உலக சிலம்ப இளைஞர் சம்மேளனம் மற்றும் சுருளி ஆண்டவர் தற்காப்புக் கலைக்கூடம் இணைந்து நடத்தியது.

இந்த போட்டியில் ஆண்கள், பெண்கள் என தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து 400-க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள், சிலம்ப பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் பார்வையாளர்கள் கலந்துகொண்டனர். இப்போட்டியானது மழலையர் (2-ம் வகுப்புவரை), மினி சப்ஜூனியர் (3 முதல் 5ம் வகுப்புவரை), சப்ஜூனியர் (6 முதல் 8ம் வகுப்புவரை), ஜூனியர் (9 மற்றும் 10ம் வகுப்பு), சீனியர் (11 மற்றும் 12ம் வகுப்பு) மற்றும் சூப்பர் சீனியர் (கல்லூரி மாணவ மாணவியர்கள்) ஆகிய பல பிரிவுகளில் நடைபெற்றது.

இதில் குத்து வரிசை, நெடுங்கம்பு வீச்சு, நடுக்கம்பு வீச்சு, இரட்டைக்கம்பு வீச்சு மற்றும் கம்பு சண்டை ஆகிய பிரிவுகளில் நடைபெற்றது. மேலும் இப்போட்டியில் தேர்வாகியிருக்கும் சுகித்தா, சுஜீத், ஸ்ரீ மாலன் ஆகிய சிலம்ப வீரர்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் தேதியில் சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் சர்வதேச சிலம்பப் போட்டிக்கு சிலம்பப் பயிற்சியாளர் திரு.அரவிந்த் மற்றும் சுருளி ஆண்டவர் சிலம்பக்கூடத் தலைவர் திரு.மோகன் ஆகியோர் அழைத்துச்செல்வர்.

இன்றைய போட்டிக்கு சிறப்பு விருந்தினராக டால்மியா சிமென்ட் வாழ்நாள் இயக்குனர் திரு. Er. N. கோபால்சுவாமி மற்றும் தலைவர் கி.ஆ.பெ. விசுவநாதம்பள்ளி டாக்டர்.V.ஜெயபால்,  அவர்கள் கலந்துகொண்டு வெற்றிபெற்றவர்களைப் பாராட்டி பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்தினார்.

மேலும் இப்போட்டியை திரு. தமிழ்மகன் (எ) கண்ணன் (தலைவர், உலக சிலம்ப இளைஞர் சம்மேளனம்) அவர்கள் துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார்.

காலை 9:30 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு சுருளி ஆண்டவர் தற்காப்புக் கலைக்கூடத்தின் தலைவர் திரு. மோகன் அவர்களின் நன்றியுரையுடன் நிறைவுபெற்றது.

இந்நிகழ்ச்சியை திருச்சி தில்லைநகரிலுள்ள சகுந்தலா மெட்ரிகுலேஷன் பள்ளியின் நிர்வாகத்தினர் வெகு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Friday, August 23, 2019

On Friday, August 23, 2019 by Tamilnewstv in ,    



.திருச்சியில்  கியூ மெட் மருத்துவமனையில் இலவச ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை ..


கியூ மெட் மருத்துவமனை அளவே பல்நோக்கு மருத்துவமனையாக கடந்த இரண்டரை வருடமாக திருச்சி யில் மையப்பகுதியான புத்தூரில் செயல்பட்டு வருகிறது ,முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் பல மருத்துவத் துறைகளில் கீழ் ஏழை எளிய மக்களுக்கு கட்டணமில்லா இலவச மருத்துவம் அறுவை சிகிச்சைகளை வழங்கிக் கொண்டிருக்கிறது இதற்கு அடுத்தபடியாக சில நேரங்களில் அந்த ஏழை நோயாளிகளுக்கு இலவசமாக ரத்த சுத்திகரிப்பு (டயாலிஸிஸ்) செய்வதற்கு ஆவணம் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய சேவையை ஏழை நோயாளிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கியூ மெட்  மருத்துவமனையின் சார்பாக தெரிவிக்கப்பட்டது.

சிறுநீரக செயலிழப்பு குறித்த விழிப்புணர்வு மக்களிடையே இன்னும் சரியாக சென்றடையவில்லை எனவும் சிறுநீரக செயலிழப்பு என்பது சாதாரண விஷயம் எனவும் அதனை குணப்படுத்தி விடலாம் எனவும் முறையாக சிகிச்சை பெற்றால் அதனை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம் எனவும்
கியூ மெட் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்
.

Saturday, August 10, 2019

On Saturday, August 10, 2019 by Tamilnewstv   
திருச்சி: தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் நடந்த அமெரிக்க-இந்திய அரசியலமைப்பு ஒப்பீடு விவாத நிகழ்ச்சியில் நான்கு பேர் வெற்றிபெற்றனர்.


இந்திய - அமெரிக்க அரசியலமைப்புச் சட்ட ஒப்பீடு விவாதப்போட்டி திருச்சியில் உள்ள தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்றது


இதில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 73 மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர். இந்தப் போட்டியில் திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தைச் சேர்ந்த மாணவர் பாலா, சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் ஜமுனா, தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தேவ்திப்ஸா தாஸ் ஆகிய 4 பேர் வெற்றி பெற்றனர்

சட்ட ஒப்பீடு விவாதப்போட்டிஇவர்கள் செப்டம்பர் 14ஆம் தேதி சென்னையில் நடைபெறும் இறுதிப்போட்டியில் கலந்துகொள்ள இருக்கின்றனர். முன்னதாக இப்போட்டி கொச்சி,பெங்களூரு ஆகிய இரு நகரங்களில் நடத்தப்பட்டது. இந்த விவாத நிகழ்ச்சியின் மூலம் இரு நாடுகளின் அரசியலமைப்பு சட்டங்கள் குறித்து மாணவர்கள் புரிந்துகொள்ள முடியும். விமர்சனப் பார்வையில் அணுக வழிவகுக்கும். பொது மக்களின் உரிமைகள், சுதந்திரங்கள், சொத்துரிமை குறித்த விழிப்புணர்வு மாணவர்களிடம் ஏற்படுத்தும் வகையில் இந்த விவாத நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Tuesday, July 30, 2019

திருச்சி ஜூலை 30

தொண்டர்கள் பலமுறை வற்புறுத்தியும் நேரில் சென்று முறையிட்டும் கட்சிப் பணிகளை மேற்கொள்ளாத தீபாவை கண்டித்து திருச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் ஆர் சி கோபி தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைய முடிவு?

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை முன்னாள் மாவட்ட செயலாளர் ஆர்.சி. கோபி பேட்டி


மறைந்த முன்னாள் அமைச்சர் ஜெயலலிதாவின் உறவினரான தீபா ஜெயலிதா மறைந்த பின்னர் தனியாக
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என இயக்கம் ஆரம்பித்து அதில் மாநிலம் முழுவதும் நிர்வாகிகள் நியமித்து  நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவை ஆதரிப்பதாக தெரிவித்தார். தேர்தல் முடிந்த பின்னர் தொடர்ந்து தீபாவின் செயல்பாடுகள் ஒன்றும் இல்லாமல் இருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில்தான் திருச்சி மாவட்ட செயலாளர் கோபி தீபாவை  தொடர்புகொண்டு கட்சியின் நடவடிக்கையை செயல்படுத்த வேண்டும், கட்சி வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று கூறியதாகவும் இதன் காரணமாக அவரை கட்சியை விட்டு நீக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று
செய்தியாளர்களை
சந்தித்த ஆர்.சி.கோபி

திபாவை சந்தித்து இயக்கத்தை செயல்படுத்த பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கை எடுக்காததால் கட்சியை விட்டு வெளியேறினேன்.  மேலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த  மாவட்டச் செயலாளர்களும், நிர்வாகிகளும் அதிருப்தியில் உள்ளனர், அவர்களுடைய கருத்தை அறிந்து புதிய அமைப்பை துவங்குவது அல்லது அனைவரும் ஒன்றிணைந்து முதல்வர் எடப்பாடி தலைமையில்  அதிமுகவில் இணைய உள்ளதாகவும், தங்களுக்கு நல்ல ஒரு பதவி கிடைத்தால் செயல்பட தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.

Monday, July 29, 2019

On Monday, July 29, 2019 by Tamilnewstv   
பாரதியின் எண்ண தூரிகையின் வண்ணத் துளிகள்

திருச்சியில் மாபெரும் ஓவியக் கண்காட்சி துவங்கியது


தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரை போல – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !
என்றபாரதியின் வைர வரிகளுக்கேற்ப

பாரதியின் எண்ண தூரிகையின் வண்ண துளிகள் தலைப்பில் மேஜிக்கல் எக்ஸ்பிரஷன்ஸ் ஓவியக் கண்காட்சியை டிசைன் ஓவியப் பள்ளி திருச்சி ரம்யாஸ் ஹோட்டல் செளபாக்யா குளிர் அரங்கில் ஜூலை 27, 28, 29 மூன்று நாட்கள் காலை 10-00 மணி முதல் இரவு 7-30 மணி வரை நடத்துகிறது



கண்காட்சியில் பத்திரிக்கை ஓவியர் ஷாம் ,விஜய் தொலைக்காட்சி புகழ் திவாகர் உள்ளிட்டோர் கண்காட்சியினை துவங்கி வைத்தார்கள்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ,கவிஞர் நந்தலாலா, திரைப்பட கவிஞர் சினேகன் உள்ளிட்டோர் பரிசளிப்பு விழாவில் பங்கேற்கிறார்கள்

ஓவியப் பள்ளி இயக்குனர் நஸ்ரத் பேகம் பேசுகையில், ஓவியங்களானது இயற்கையானவையாகவோ, ஒரு பொருளைப்போல வரையப்பட்டவையாகவோ, நிழற்படத்தை ஒத்தவையாகவோ, பண்பியல் (abstract) தன்மை கொண்டனவாகவோ ஓவிய பள்ளி மாணவர்கள் வரைந்துள்ளார்கள்

அதில் ஒரு கருத்தை விளக்கும் உள்ளடக்கம் கொண்டவையாக, குறியீட்டுத் தன்மை கொண்டனவாக, உணர்ச்சி பூர்வமானவையாக எண்ணக்கருக்களும், அழகூட்டல்களுடன் ஒவ்வொரு மாணவர்களும் நான்கு ஓவியங்கள் வரைந்துள்ளார்கள்

நான்கு ஓவியங்களில் பாரதியின் எண்ணத் தூரிகையின் வண்ணத் துளிகள் ஓவியக் கண்காட்சியில் ஞானப் பாடல்கள் ,தோத்திரப் பாடல்கள், புதிய ஆத்திச்சூடி, சான்றோர், சமூகம், தனிப்பாடல்கள், நீதி, காணி நிலம் வேண்டும், யாரையும் மதித்து வாழ், வேதம் புதுமை செய், பாப்பா பாட்டு, பெண்கள் விடுதலைக் கும்மி தலைப்பில் அச்சமில்லை, மஹாசக்திக்கு விண்ணப்பம், வையத் தலைமை கொள், ஓவியர் மணி, ரவிவர்மா, தொழில், கவிதைத் தலைவி, நிவேதிதா, போர்த்தொழில் பழகு, புதிய கோணங்கி, வருவதை மகிழ்ந்துண், உடலினை உறுதி செய், ஈகை திறன், ரேகையில் கனிகொள், தவத்தினை நிதம்புரி, காலம் அழியேல், ஞாயிறு வணக்கம், சேர்க்கை அழியேல் என்ற பொருள்களில் ஓவியம் வரைந்து காட்சி படுத்தியுள்ளார்கள்.

பள்ளி மாணவர்கள்
நிறமிகளைக் கொண்டு தீட்டிப் பின் ஒருவகை நெய் அல்லது எண்ணெய் கொண்டு காயவைக்கும் எண்ணெய் வர்ணத்தை ஓவியத்தில் oil painting கையாண்டுள்ளார்கள்அவை ஓவியத்திற்கு மெருகூட்டவும் பளபளப்பாக்கவும் வெவ்வேறு வித விளைவுகளை ஏற்படுத்தவும், வெவ்வேறு நிறமிகளைப் பயன்படுத்தவும், ஒன்றிற்கும் மேற்பட்ட எண்ணெய்களை ஒரே ஓவியத்தில் ஓவியர்கள் பயன்படுத்தியுள்ளார்கள்.

வண்ண நிறமித் தூள்கள் மற்றும் ஒட்டும் பொருளாலான குச்சி வடிவிலான ஓவிய ஊடகத்தை பயன்படுத்தி எண்ணெய் வண்ணப்பூச்சுகள் உட்பட அனைத்து நிற கலை ஊடகங்களின் பூச்சுகளைப் போலவே ஓவியங்களில் பயன்படுத்தப்படும் நிறங்களை சமப்படுத்தவும், மங்கலான குறைந்த செறிவு பகுதிகளை காட்டவும் வண்ணக்கோல் (Pastel painting) பயன்படுத்தியும்
ஓவியத்தை காட்சி படுத்தியுள்ளனர்.

செயற்கை வண்ணக் கூழ்மமானது விரைவாக உலரக்கூடிய வண்ண நிறமிகளைக் கொண்ட கூழ்ம வடிவிலான வண்ணமாகும். தண்ணீர் கொண்டு நீர்க்கப்பட்டு செயற்கை வண்ணக் கூழ்மங்கள் (Acrylic painting) பயன்படுத்தப்பட்ட ஓவியமும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.

நீரைக் கரைப்பானாகக் பயன்படுத்தி வண்ணம் தீட்டப்படும் ஒருவகை வண்ண நிறமிகளடங்கிய ஊடகமாக்கி மிகவும் பாரம்பரியமாக Water Colour painting நீர் வர்ண ஓவியங்களை காட்சிப்படுத்தியிருந்தார்கள்

சில நிறமிகள் மற்றும் சாயங்கள் போன்றவற்றாலான திரவம் கொண்டு ஒரு படிமம், எழுத்துவடிவம், வடிவமைப்பு என்பவற்றைத் தீட்டி மை ஓவியங்களை (Ink Painting) எழுதுகோல், தூரிகை, இறகு எழுதுகோல் கொண்டு செய்துள்ளனர்.

மேலும் பூச்சு ஓவியங்கள் (Enamel painting)
நீரில் கரையும் எண்ணெய் ஓவியங்கள் (Water miscible oil painting)
மெழுகு ஓவியங்கள்(wax painting) நவீன ஓவியங்கள் என பல்வேறு நுட்பங்களை மேற்கொண்டு 160 ஓவியங்களை 40 ஓவிய மாணவர்கள் காட்சிப்படுத்தியுள்ளார்கள் என்றார்.
ஓவியக்கலைஞர் பாரதிபாலன், யோகாசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

 டிசைன் ஓவியப் பள்ளி தாளாளர் மதன் அதன் இயக்குனர் நஸ்ரத் பேகம்,  ஓவியக் கண்காட்சிக்கான ஏற்பாட்டினை செய்துள்ளார்கள்
On Monday, July 29, 2019 by Tamilnewstv   
திருச்சி தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது



அப்போது  விளக்க உரையாற்றிய முருகானந்தம் மாநில செயலாளர் கூறுகையில் இன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது இந்த ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டமானது ஐந்து ரூபாய் பத்து ரூபாய் கூட விற்கிறார்கள் என்ற ஒரு காரணத்தை வைத்து கொண்டு உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்கள்  ஒரு மாவட்ட மேலாளர்களை அடுத்த மாவட்டத்திற்கு அனுப்பி அவர்களை ஆய்வு செய்ய சொல்வது அநாகரீகமான முறையாக இருக்கிறது இந்த முறையை மாற்ற வேண்டும் என்பதை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்று தெரிவித்தார்

நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கண்ணன் மாநிலச் செயலாளர் தலைமை வகித்தார் பிச்சைமுத்து செல்வம் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர் சாகுல் அமீது  தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் மாநில பொருளாளர் சிறப்புரையாற்றினார் முருகானந்தம் மாநிலச் செயலாளர் விளக்கவுரையாற்றினார்



பேட்டி முருகானந்தம் மாநில செயலாளர் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம்

Friday, July 19, 2019

On Friday, July 19, 2019 by Tamilnewstv   
திருச்சி காவேரி மருத்துவமனையில் தீப்புண் தீவிர சிகிச்சை பிரிவு தொடக்கம்



                
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள காவேரி மருத்துவமனையில் தீக்காய தீவிர சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவை ஒட்டறுவை, உறுப்பு மறுசீரமைப்பு மற்றும் முக எலும்பியல் அறுவை மருத்துவ துறை தலைவர் பேராசிரியர் ஜெகன்மோகன் திறந்து வைத்தார்


                 
. இந்நிகழ்ச்சியில் காவேரி மருத்துவமனை செயல் இயக்குனர் டாக்டர் செங்குட்டுவன், சென்னை தமிழ்நாடு அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை நுண் அறுவைத்துறை கை மற்றும் உறுப்பு மறுசீரமைப்பு பேராசிரியர் டாக்டர் கார்த்திகேயன், காவேரி மருத்துவமனையின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் ஸ்கந்தா, டாக்டர்கள் செந்தில்குமார், அன்புச்செழியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து டாக்டர்கள் செங்குட்டுவன், ஸ்கந்தா ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில், : -- தீக்காயங்களால் பாதிக்கப்படும் போது உயிர் இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அவ்வாறு தீக்காயத்துடன் வருபவர்களை காப்பாற்றும் வகையில் காவிரி மருத்துவமனையில் தீக்காய தீவிர சிகிச்சை பிரிவு தொடங்கியுள்ளோம். தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  உயர்தர சிகிச்சை தேவைப்படுகிறது. தீக்காயம் பட்ட இடத்தில் மாவு, இங்க் போன்றவற்றை போடக்கூடாது. உடலில் தீக்காயம் ஏற்பட்டால் அந்த இடத்தில் தண்ணீர் ஊற்றினாலே சிறந்த முதலுதவி சிகிச்சையாக இருக்கும். தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காயத்தின் ஆழம், தன்மை ஆகியவற்றைக் கண்டறிந்து  சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். காவேரி மருத்துவமனையில் தீக்காயங்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் வகையில் இரண்டு பிரத்யேக அலகுகளை தென்னூர் மற்றும் கண்டோன்மென்ட் (குழந்தை தீப்புண்
On Friday, July 19, 2019 by Tamilnewstv   
திருச்சி 

திருச்சியில் கவிதை மலர்கள் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.


திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் க.பத்மநாதனின் கவிதை மலர்கள் என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பாவலர் உப்பை.தமிழகிறுக்கன் கவிதை மலர்கள் நூலை வெளியிட்டார். இதன் முதல் பிரதியை கவிஞர் ஆதி சரவணன் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கவிதை நூலின் ஆசிராயர் பத்மநாதன் மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள், எழுத்தாளர்கள் கவிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில் இம்தியாஸ் நன்றி கூறினார்.

Monday, June 24, 2019

On Monday, June 24, 2019 by Tamilnewstv in ,    

திருச்சியில் ஜிஎஸ்டி ஆலோசகர்களின் மாநில முகவரி மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது

நடைபெற்ற விழாவில் ஜிஎஸ்டி சம்பந்தமான டைரி குறிப்பேடு வெளியிடப்பட்டது ஜிஎஸ்டி கமிஷனர் கென்னடி அவர்கள் வெளியிட்டார்  துரைராஜா அவர்கள் பெற்றுக்கொண்டார்
இங்கு குறிப்பேட்டில் தமிழ்நாட்டில் உள்ள ஜிஎஸ்டி ஆலோசகர்கள் கூடிய மின்னஞ்சல் எண்கள்  ஆகியவை இடம் பெற்றுள்ளன என்று முஹம்மது அஸ்கர் தலைவர் டி என் ஜி எஸ் டி பி ஏ எனத் தெரிவித்தார்



இந்நிகழ்ச்சியில் பஷீர் அலி பொதுச் செயலாளர் ராஜேந்திரன் இணை பொருளாளர் பார்த்திபன் குமார் முசார் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்


பேட்டி முஹம்மத் அஸ் கார்