Monday, March 02, 2020

On Monday, March 02, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி

+2 தேர்வு நடைபெறும் மையத்தை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு இன்று 2ம் தேதி ஆரம்பித்து
வரும் மார்ச் 24ம் தேதி முடிவடைகிறது. இத்தேர்வில் 250 பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள்
17823 பேர், மாணவர்கள் 14,482 பேர் என மொத்தம் 32,305 பேர் தேர்வெழுதுகிறார்கள்.
இதற்காக 124 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


இதே போல்
11 ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் மார்ச் 4ஆம் தேதி ஆரம்பித்து மார்ச் 26ம் தேதி
முடிவடைகிறது. இத்தேர்வை மாணவிகள் 18,049 பேர், மாணவர்கள் 15,798 பேர் என
மொத்தம் 33,847 பேர் எழுதுகின்றனர். இதற்காக 126 தேர்வு மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன. 11 ம் வகுப்பு/12 ம் வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வு
எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்காக 4 தேர்வு மையங்கள், பழைய பாடத்திட்டத்தில்
பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்காக 2 தேர்வு மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன.
இத்தேர்வுகளுக்கான வினாத்தாட்கள் 10 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில்
போலீஸ் பாதுகாப்போடு வைக்கப்பட்டுள்ளன.
10 ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மார்ச்
14ம் தேதி ஆரம்பித்து மார்ச் 29ம் தேதி
முடிவடைகிறது. இத்தேர்வை 457 பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் 17,886 பேர் ,
மாணவர்கள் 17,798 பேர் என மொத்தம் 35,684 பேர் எழுதுகின்றனர். இத்தேர்வுக்காக 164
தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பழைய பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வு
எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்காக 5 தேர்வு மையங்களும், இத்துடன் சிறைக்கைதிகள்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிட திருச்சி மத்திய சிறைச்சாலையில் ஒரு தேர்வு
மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

இன்று +2 தேர்வு நடைபெறும் புனித ஜான் வெஸ்டரி பள்ளியில் உள்ள தேர்வு  மையத்தை  மாவட்ட ஆட்சியர் சிவராசு பார்வையட்டார்.

பேட்டி : சிவராசு,
மாவட்ட ஆட்சியர்


Sunday, March 01, 2020

On Sunday, March 01, 2020 by Tamilnewstv in    

திருச்சி மன்னார்புரம் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் எல்பின் எம்எல்எம் நிதிநிறுவனம். இந்நிறுவனத்தின் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சமீபத்தில் தஞ்சையில் இந்நிறுவன லீடர்கள் இரண்டு பேர் தஞ்சை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். எல்பின் சகோதரர்கள் அழகர்சாமி என்னும் ராஜா, எஸ், ஆர், கே (எ) ரமேஷ் குமார் இருவரும் நிறுவன ரகசியம் வெளியில் கசிந்து விடும் என்பதற்காக  பல கோடி ரூபாய் செலவு செய்து கைதான இருவரையும் ஜாமினில் எடுத்து உள்ளனர்.
கிங்ஸ்லி என்பவர் கைது ஆன அன்று அழகர்சாமி என்னும் ராஜா காவல்துறையினரை மிரட்டும் வகையில் வாட்ஸ் அப்பில் ஆடியோ வெளியிட்டார். இதை காவல் துறையினர் கண்டுக் கொள்ளவே இல்லை. தனது லீடர்களிடம் நம்மிடம் வாலாட்டும் அனைவரையும் பணத்தால் அடக்கி விட்டோம் என வீராப்பாக பேசி வருகிறார்களாம். இதற்கு காரணம் என்ன  என்று விசாரித்ததில் ஓர் உயர்  அதிகாரி அவரது மனைவி சமூக சேவையாற்றி வருகிறாராம் அதற்கு மாதம் பல கோடி ரூபாய் ELFIN சகோதரர்கள் வழங்கி வருகிறார்களாம். அந்த நன்றி விசுவாசத்தால் அந்த  உயர் அதிகாரி இவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறாராம். மேலும் எல்ஃபின்  நிறுவனத்தின் முக்கிய கோப்புகள் அனைத்தும் அந்த உயர் அதிகாரி தனது கட்டுப்பாட்டில் உள்ள சில நண்பர்களிடம் கூறி சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள தங்களது விசுவாசிகளிடம் மறைத்து வைக்க ஐடியா கொடுத்துள்ளதாகவும் அதன்படி சென்னையில் மற்றும் பல இடங்களில் அந்த கோப்புகள் மறைத்து வைக்கப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவுகிறது. இவற்றை மத்திய புலனாய்வு காவல்துறை அதிகாரிகள் வந்து தேடினாலும் கோப்புகள் யார் கையிலும் மாட்டாது என உறுதியாக அந்த உயர்  அதிகாரி எல்பின் சகோதரர்களுக்கு உறுதி கூறியுள்ளாராம். மக்களின் பணத்தில் ஏமாற்றி வாழும் இவர்களை நேர்மையான காவல்துறை அதிகாரிகள் நேரடியாக விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். நீதி வெல்லுமா ? நிதி வெல்லுமா ? பொறுத்திருந்து பார்ப்போம்.


பின்குறிப்பு :-

 *ELFIN நிதி நிறுவன சகோதரர்கள் பல அடியாட்கள் மற்றும் கொலை சம்பவங்களில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு மாதாமாதம் பணம் கொடுத்து உதவி வருவதாகவும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் எல்பின்  நிறுவனத்திற்கு எதிராக செய்தி வெளியிடுவோர்  மீதும் அதற்கு உறுதுணையாக இருக்கும் நபர்கள் மீதும் ராமஜெயம் கொலை வழக்கு போன்று ஆகிவிடும் என்று அவர்கள் சுற்றுவட்டாரத்தில் கூறி வருவதாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.*


 *தொடர்ச்சியாக ELFIN செய்தி வெளியிட்டதால் மர்ம நபர்களால் தாக்கப்பட்டேன் ஆனால் இதுநாள் வரை காவல்துறை அதிகாரிகள் தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது பொதுநலன் கருதி செய்தி வெளியிடுவோர் மீது இப்படி தாக்குதல் நடத்தினால் மக்களின் நிலை என்ன ஆவது*

Saturday, February 29, 2020

On Saturday, February 29, 2020 by Tamilnewstv in    
திருச்சி பிப் 29


அகில இந்திய ரயில்வே AIOBC தொழிலாளர் சங்கத்தின் உரிமை மீட்பு மாநாடு 


திருச்சி ரயில்வே திருமண  மண்டபத்தில் தென்மண்டல ரயில்வே பொதுச்செயலாளர் முனைவர் அப்சல் தலைமையில் நடைபெற்றது.




இம்மாநாட்டில் ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் அசோக்சித்தார்த்தன், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்மாநில தலைவர் வழக்குரைஞர் ஆம்ஸ்ட்ராங் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் மத்திய சங்க நிர்வாகிகள். கோட்ட செயலாளர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
மாநாட்டில் ரயில்வே பணி புரியும் AIOBC ஊழியர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தர போராடுவது,  வேலைக்கான உத்திரவாதத்தை பெற்றுத்தர தருவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 800க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
On Saturday, February 29, 2020 by Tamilnewstv in    
திருச்சி பிப் 28 
                              

திருச்சியில் பொதுமக்களுக்கு  அச்சுறுத்தி வந்த
10அடிநீள முதலை  பிடிபட்டது
                  

திருச்சி உய்யகொண்டான் திருமலை
கல்லாங்காடு 
குழுமாயி அம்மன் கோவில் அருகே 
முதலை ஒன்று கோயிலுக்கு செல்லும் பக்தர்களை அச்சுறுத்தி வந்தது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர்
மற்றும் காவல்துறையினர் பத்தடிநீள முதலையை நீண்ட போராட்டத்திற்கு பிடித்து பாதுகாப்புடன் தஞ்சை மாவட்டம் கல்லணை அருகே உள்ள காவிரி  ஆற்றுப்பகுதியில்  பாதுகாப்புடன் விட்டனர்.
நாளை திருவிழா நடைபெற உள்ள நிலையில் குழுமாயி அம்மன் கோவிலுக்கு செல்லும் 
பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
பிடிபட்ட இந்த முதலை  நன்னீர் வகையைச் சேர்ந்த முதலை என வனத்துறையினர் கூறினர்.
On Saturday, February 29, 2020 by Tamilnewstv in ,    
டெல்லி கலவரத்திற்கு பொறுப்பேற்று அமித்ஷா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் -  லோக் தந்திரிக்  ஜனதா தளம் தலைவர் ராஜகோபால்.
                   

மறைந்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் 124 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று லோக் தந்திரிக் ஜனதா  தளம் கட்சியின் சார்பில் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் ஹோட்டலில்
அவரது உருவப்படத்திற்கு மாநில தலைவர் ராஜகோபால். மாநில பொதுச்செயலாளர்கள் ராஜசேகரன், ஹேமநாதன், வையாபுரி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
                  

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநில தலைவர் ராஜகோபால் தமிழக அரசு NPR, NRC எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், மேலும் டெல்லியில் ஏற்பட்ட கலவரத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பொறுப்பேற்று தார்மீக முறையில் ராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
On Saturday, February 29, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி 
                
   
திருச்சியில் 
அங்கீகாரம் இல்லாத குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைத்த நிலத்தடி நீர் பிரிவு அதிகாரிகள்
                 

சட்டவிரோதமாக இயங்கும்  குடிநீர் ஆலைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், குடிநீர் எடுக்க அரசு அனுமதியளிக்கக் கோரி, குடிநீர் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் திருச்சி பொன்மலை ஜி கார்னர் இன் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

தமிழகத்தில் இயங்கிவரும் அனுமதியற்ற குடிநீர் ஆலைகள் தொடர்பான வழக்கில் 
உரிமம் பெறாத 
132ஆலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுளதாக அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

எனினும் சட்டவிரோத குடிநீர் ஆலைகளை மூட ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றி மார்ச் 3ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் இல்லை என்றால், மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

இதையடுத்து இன்று காலை திருச்சி மாவட்டத்தில் 
அனுமதி பெறாமல் இயங்கிய 23 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு திருச்சி பொதுப்பணித்துறை நிலத்தடி நீர் பிரிவு 
அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர்.
நான்கு குழுக்களாகப் பிரிந்து திருச்சி மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் 
23குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைத்து வருகின்றனர்.
திருச்சி வயலூர் சாலையில் செயல்பட்டு வரும் பெஸ்ட் ஆக்குவா நாளைக்கு நிலத்தடி நீர் பிரிவு துணை இயக்குனர் பாலமுருகன் தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர்.

பேட்டி: ஹேமநாதன்
செயலாளர் 
அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனையாளர்கள் நலச் சங்கம்.

Friday, February 28, 2020

On Friday, February 28, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி மாவட்ட ஜேசிபி உரிமையாளர்கள் சங்க தொடக்க விழா நடைபெற்றது.

 திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஜேசிபி உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த தொடக்க விழாவில் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

 இதைத்தொடர்ந்து சங்கத்தின் ஆலோசகர் மனோகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் இச்சங்கம் முதல்முறையாக தொடங்கப்பட்டுள்ளது. தற்போது ஜேசிபி எந்திரங்களுக்கு வாடகை குறைவாக வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் சங்க உறுப்பினர்கள், காண்ட்ராக்டர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். படகு உரிமையாளர்கள் எந்திரங்களுகாண கடன் கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். 


இந்த குறையை தீர்க்கும் வகையில் இச்சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. இச்சங்கத்தின் மூலம் உறுப்பினர்கள் இனி குறைந்த வாடகைக்கு ஜேசிபி எந்திரங்களை பயன்படுத்த கூடாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் இரண்டு மணி நேரத்திற்கு 2,500 ரூபாய் வசூலிக்க வேண்டும் என சங்கத்தில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அதற்கு மேல் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் தலா 900 ரூபாய் வாடகை என்ற அடிப்படையில் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஜேசிபி எந்திர தொழில் மிகவும் நலிவடைந்து வருகிறது. இந்த தொழிலை காப்பாற்றுவதற்காகவும், உரிமையாளர்களை பாதுகாக்கும் நோக்கத்தோடு தான் இந்த வாடகை உயர்வு செய்யப்பட்டுள்ளது.
 எனவே ஒப்பந்ததாரர்கள், வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றார்.

பேட்டி: மனோகரன். திருச்சி மாவட்ட ஜேசிபி உரிமையாளர் சங்க ஆலோசகர்.
On Friday, February 28, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி தினமலர் பங்குதாரர் மறைந்த ராகவன் அவர்களின் மனைவி சுப்புலெட்சுமி உடல் நல குறைவால் காலமானார்.அவரது உடலுக்கு தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
                   

தமிழ்நாட்டில் முக்கால்வாசி இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

                  


தே.மு.தி.க விற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தொடர்ந்து கேட்டு வருகிறோம்.எல்லா   கட்சிகளிலும் மூத்த உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.அ.தி.மு.க தலைமை கழகம் நல்ல முடிவை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.
தே.மு.தி.க விற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என கூட்டணி அமைக்கும் போதே பேசியுள்ளோம்.

சி.ஏ.ஏ,என்.ஆர்.சி யால் இஸ்லாமியர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பிற்காக தான் இத்தகைய சட்டங்கள் என்பதனைவரும் உணர வேண்டும்.இஸ்லாமியர்களுக்கு இந்த சட்டத்தால் பாதிப்பு என்றால் அவர்களுக்காக களத்தில் இறங்கும் முதல் கட்சியாக தே.மு.தி.க இருக்கும்


தி.மு.க,அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளும் தமிழகத்தின் கடன் சுமையை மாறி மாறி ஏற்றுவதை நிறுத்தி விட்டு வேலைவாய்ப்பிற்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றார்
On Friday, February 28, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி மாவட்டம், காஜாமலையில்
ஓம் ஹரிஸ் மருத்துவமனையை

 மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்,

சுற்றுலாத்துறை அமைச்சர்
திரு.வெல்லமண்டி நடராஜன்,

 பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்
திருமதி.வளர்மதி

மாவட்ட கழக செயலாளர்கள்,
திரு.பா.குமார் Ex.MP, திரு.ரெத்தினவேல் Ex.MP

ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தார்கள்.