Thursday, March 05, 2020

On Thursday, March 05, 2020 by Tamilnewstv in    
இன்பச் சுற்றுலாவில்  கைதானவர்கள். ஜாமீனில்  வந்தாலும் ஜாமீன் ரத்து செய்தாலும் கவலையில்லை.

திருச்சி மன்னார்புரத்தில் தலைமை இடம் அமைத்து பொதுமக்களை ஏமாற்றி வரும் நிறுவனம் எல்பின்.
இந்நிறுவனத்தின் சார்பில் கடந்த மாதம் தஞ்சாவூரில் பிரசன்னா வெங்கடேஷ் என்பவர் தலைமையில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அனுமதியில்லாத இக்கூட்டத்தை தஞ்சை போலீசார் தடுத்து நிறுத்தி கூட்டத்தை ஏற்பாடு செய்த பிரசன்ன வெங்கடேஷ் உடனடியாக கைது செய்யப்பட்டார், கிங்ஸ்லி சில நாட்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார். காவல்துறை  இருவரையும் கைது செய்தது.



பல நாட்களாக சிறையில் இருந்த இருவரையும் எல்பின் சகோதரர்கள் ராஜா மற்றும் ரமேஷ் இருவரும் பல கோடி ரூபாய் பணம் கட்டி ஜாமீனில் வெளியே எடுத்தனர். இவர்களுடன் சத்யபிரியா என்ற பெண்மணி தேடப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் அழகர்சாமி என்கிற ராஜா எஸ்ஆர்கே ரமேஷ் குமார் என்கிற ரமேஷ் ஆகியோர் துபாயில்  இருந்துகொண்டே அழகர்சாமி என்கிற ராஜா தமிழக காவல்துறையே  வியக்கும் வகைபில் தஞ்சை காவல்துறை அதிகாரிகளை மிரட்டும் ஆடியோ வெளியிட்டிருந்தார்

இந்நிலையில் எல்பின் குடும்பத்தினர் என கூறி 800க்கும் மேற்பட்டோர் துபாய்க்கு  இன்பச் சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பல நூறு பவுன் வரை பரிசளிக்க உள்ளனர் எல்பின்  நிறுவனர்கள்  அழகர்சாமி என்கிற ராஜா மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்

இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் ஜாமினில் வெளிவந்துள்ள பிரசன்னா வெங்கடேஷ் மற்றும் கிங்ஸ்லி இருவரும் இவர்களுடன் இன்பச்சுற்றுலா துபாய் சென்றுள்ளனர்


இப்படி சென்றதற்கு  முறையாக நீதிமன்றம் மற்றும் காவல்துறையினரிடம் அனுமதி பெற்றார்களா ? அல்லது எந்த அனுமதி பெறாமல் நீதிமன்றத்திற்கும் காவல்துறைக்கும் தெரியாமல்  அறிவிக்காமல் துபாய் சென்று உள்ளார்களா அவர்களது பாஸ்போர்ட்டில் சென்றார்களா அல்லது போலி பாஸ்போர்ட்டில் சென்றார்களா என தெரியவில்லை. முறைப்படி அனுமதி வாங்காமல் எப்படி ஜாமினில் வெளியில் வந்தவர்கள் வெளிநாடு உடனடியாக எப்படி சென்றார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது?
இப்படி பட்ட சம்பவங்கள் தமிழகத்தையே ஆட்டிப்படைக்கும் வகையில் உள்ளது. இதற்கு மத்திய புலனாய்வுத்துறை மற்றும் காவல்துறை தான் உடனடி ஆக்சன் எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து மற்றும் எதிர்பார்ப்பாக உள்ளது
On Thursday, March 05, 2020 by Tamilnewstv in    
திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் திருவிழா, 1500 ஆடுகளின் ரத்தத்தை குடித்து மருளாளி அருள்வாக்கு கூறினார்.

திருச்சி புத்தூரில் பிரசித்தி பெற்ற குழுமாயி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெறும் குட்டிக்குடி திருவிழா சிறப்பு வாய்ந்தது, இந்த ஆண்டு மாசித் திருவிழாவை முன்னிட்டு கடந்த 18ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது, அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரண்டாம் தேதி மறு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது நேற்று முன்தினம் இரவு நிகழ்ச்சி நடைபெற்றது.


நேற்று ஓலை பிடாரி அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது, விழாவின் முக்கிய நிகழ்வான குட்டி குடித்தல் இன்று காலை புத்தூர் மந்தையில் கோலாகலமாக  துவங்கியது.
ஓலை சப்பரத்தில் அம்மன் புத்தூர் மந்தைக்கு கொண்டுவரப்பட்டது, இதைத்தொடர்ந்து குட்டிக்குடி துவங்கியது முதல் மரியாதையாக மாவட்ட நிர்வாகம் சார்பில் முதல் ஆட்டுக்கிடா வழங்கப்பட்டது, கழுத்தைக் கடித்து ரத்தத்தை மருளாளி சிவக்குமார் குடித்து பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார், இதில் சுமார் 1500 கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர், இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
On Thursday, March 05, 2020 by Tamilnewstv in    
அத்துமீறி அண்ணன்  வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளால் கிராமம் காலணி தெருவைச் சேர்ந்தவர்  முரளிராஜாவின் மகன் முரளி(32). இவருக்கு வெற்றிச்செல்வி என்ற மனைவியும்,10 வயதிற்க்குள் 2 மகன் களும்,ஒரு மகளும் உள்ளனர். சொந்தமாக வீடு இல்லாத நிலையில் கூலி வேலை செய்து பிழைப்புபிழைப்பு நடத்தி வருகிறார்.அதேபோல சற்று அருகே இவருடைய அண்ணன் பிரபு(35) தன் மனைவி சுதாவுடன் தனியாக வசித்து வருகிறார். பிரபு வீட்டிற்கு நேர் எதிரே வசிக்கும்  கலியமூர்த்தி மகன் வசந்தகுமார் (24).இவரும் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இதில் பிரவு,,முரளியின்  மனைவிகள் அக் கா,தங்கைகளாவார்கள்


இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்க்கு முன் குடிபோதையில் பிரபுவின் வீட்டிற்கு இரவில்  தவறான நோக்கத்துடன்   அத்துமீறி உள்ளே புகுந்துள்ளார். இதை கண்ட பிரபு வசந்தகுமாரை பிடித்து விசாரிக்கையில் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். வசந்தகுமார் இங்கிருந்தால் பிரச்சனையாகிவிடும் எண்ணி அவனது பெற்றோர் உறவினர் வீட்டிற்கு சென்று மறைந்து கொள்ளும்படி  அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஊர் தலைவரிடம் முரளி குடும்பத்தினர்  புகார் கூறியுள்ளனர். ஊர் பெரியவர்களும் வசந்தகுமாரின் பெற் றோரிடம் அவனை ஊருக்கு வரச்சொல்லியுள்ளனர். ஆனால் கிராமத்தின் விசாரணைக்கு முன் வசந்தகுமார் முரளி கண்முன் மோட்டார் சைக்கிளில்  போக்கு காட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முரளி தன் அண்ணன் பிரபுவை கூட்டிக் கொண்டு வசந்தகுமாரிடம் கேட்க வீட்டிற்கு சென்றுள்ளார்.பிரபு தூங்கிக் கொண் டிருந்நதால் திரும்பிய  முரளியை வசந்தகுமார் அம்மா புஷ்பா திட்டியதால் இதைக் தட்டி கேட்ட முரளியை வசந்தகுமார், தந்தை கலியமூர்த்தி, தாய் புஷ்பா,வசந்தகுமாரின் அக்கா கணவர் நாகராஜ் மற்றும் உறவினர்கள் என 6 பேர் கொண்ட கும்பல் முரளியை தாக்கியுள்ளனர். ஏற்கனவே கொலைத் திட்டத்தோடு  மதுபோதையில் இருந்த வசந்தகுமார் அன் கோ  கத்தியால் சரமாரியா குத்தியுள்ளனர். 9 க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில்  துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவத்தை பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த லோகநாதன் (60) என்பவர் தடுக்க முயன்ற போது அவருக்கு கத்திகுத்து விழுந்ததில் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளார்.


தகவலறிந்த கல்லக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக லால்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். வசந்நகுமார்,அவரது அக்கா கணவர் நாகராஜ்,தந்தை கலியமூர்த்தி, தாய் புஷ்பா  ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து ்வருகின்றனர்.

Wednesday, March 04, 2020

On Wednesday, March 04, 2020 by Tamilnewstv in    
தவளை தன் வாயால் கெடும் அதிர்ச்சியில் ELFIN சகோதரர்கள்
தொடர்ச்சியாக காவல்துறைக்கு எதிராக ஆடியோ வெளியிட்டதால் இவர்களுடைய பல பழைய வழக்குகளை காவல்துறை அதிகாரிகள் தூசு தட்டுகிறார்கள்

( RMWC  ஓரியண்ட் ஹைபர் மார்க்கெட் பார்ட்னர்கள் பாதுஷா மற்றும் இரண்டு நபர்கள் டின் நம்பர் 0002927268 அடுத்தது  வராக மணி பார்ட்னர்கள் ரமேஷ்குமார் விஸ்வநாதன் செட்டியார் டின்  நம்பர் 0003161010 & 0006833411 அடுத்தது 2017 எல்ஃபின் பார்ட்னர்கள் ரமேஷ்குமார்  & பாதுஷா    டின் நம்பர் 0003161010 & 0002927268 அடுத்தது 2019 ஸ்பேரோ  குளோபல் டிரேடிங் பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு பார்ட்னர்கள்  ஜிஎஸ்டி பின் நம்பர் 33ADSFS9169BIZN
 என்ற நிறுவனம் நடத்தி மக்களை ஏமாற்றி இதற்குரிய வழக்குகள் இன்னும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது )

இவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என காவல் துறை வட்டாரங்களில் பேசப்படுகின்றன


ஆனால் இவர்கள் எதையும் பற்றிக் கவலைப்பட வில்லை ஏனென்றால் தங்களுடைய பினாமியாக ராஜப்பா

தலைமையில் 60 நபர்களை நியமித்து தங்கள் கொள்ளை அடித்த பணம் அனைத்தும் தாங்கள் பிரித்து கொடுத்துள்ளதாகவும் காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்தாலும் அஞ்சப் போவதில்லை  மத்திய புலனாய்வுத்துறை வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்றும் தங்களுடைய வட்டாரங்களுக்கு எல்பின் சகோதரர்கள் தைரியம் அளித்து உள்ளனர்.


காவல் துறைக்கு இறுதி எச்சரிக்கை தரும் எல்பின் ராஜா.

திருச்சி மன்னார்புரம் அருகே தலைமையிடமாக கொண்டு தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் போலி நிறுவனம் தான் எல்பின் . இந்நிறுவனத்தின் சார்பில் அழகர்சாமி ( எ ) ராஜா மற்றும் SRK (எ) ரமேஷ் குமார் தலைமையில் சுமார் 800 பேர் துபாய் இன்பச் சுற்றுலா என கூறி சென்று உள்ளனர். அங்குள்ள உயரமான கட்டிடத்தில் வரும் 6-ஆம் தேதி அழகர்சாமி ( எ ) ராஜா சிறப்புரையாற்றி சிறப்பாக செயலாற்றிய அந்த 800 பேருக்கும் பல கோடி ரூபாய் செலவு செய்து தங்க நாணயம், செயின், மோதிரம் போன்ற விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் தர உள்ளாராம். இந்த அண்ணன் தம்பி இருவர் மீதும் பல மாவட்டங்களில் பண மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால் இவர்களது பாஸ்போர்ட்கள் இன்னும் அரசு முடக்காதது வியப்பாக இருக்கிறது. மொத்தமாக பணத்தை சுருட்டிக்கொண்டு விஜய் மல்லையா போல் இவர்களும் ஒருநாள் வெளிநாடு ஓடுவதற்கு வசதியாக இன்னும் பாஸ்போர்ட்களை  நமது அரசு முடக்க வில்லை போல் தெரிகிறது. மேலும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுப் பொருட்களை இந்தியாவிலிருந்து வெளிநாடு கொண்டு சென்றார்களா ? அல்லது பல கோடி ரூபாய் பணத்தை துபாய் எடுத்துச் சென்று அங்கு தங்கங்களை வாங்கினார்களா ?


 நேற்று  வாட்ஸ்அப்பில் வாய்ஸ் மெசேஜ்  அனுப்பி உள்ளார். இதில் காவல்துறையை எச்சரிக்கும் வண்ணம் பேசியுள்ளார். அதில் தஞ்சையில் கைது செய்த இருவரையும் நாம் ஜாமீனில் வெளியே எடுத்து விட்டோம்.

 தற்போது  சத்யபிரியா வெளிநாட்டிற்கு பயணம் செய்யப்போவதாக தகவல்


ஆனால் தொடர்ந்து காவல்துறையினர் என்னையும்(ராஜா) ரமேஷையும் பொய் வழக்கில் கைது செய்ய பல வழிகளில் முயற்சி செய்து வருகிறார்கள். அது நடக்கவே நடக்காது. தற்போது பல டீம் லீடர் களிம்  சென்று எங்கள்மீது  பொய் புகார் தருமாறு மிரட்டி வருகிறார்கள் . நீங்கள் யாரும் பயப்படாதீர்கள் காவல்துறையால் நம்மை ஒன்றும் செய்யமுடியாது. தங்களைத் தேடி யாராவது காவல்துறையினர் தங்களை சந்திக்க மப்டியில் வந்தால்கூட போட்டோ மற்றும்  வீடியோ எடுங்கள். போனில் அழைத்தால் கால் ரெக்கார்ட் செய்யுங்கள். நம் மீது பொய் வழக்கு பதிவு செய்தால் காவல்துறையினர் அதற்கான பதிலை சொல்லியே ஆகவேண்டும். யாரும் கவலைப்பட வேண்டாம் எல்பின் குடும்பத்தினரை காவல்துறையினரால் ஒன்றும் செய்ய முடியாது. அதற்கு வாய்ப்பே இல்லை என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து எல்பின் ராஜா காவல்துறையினரே எச்சரிக்கும் வகையில் பேசி வாய்ஸ் மெசேஜ் அனுப்புவது எந்த தைரியத்தில் இப்படி பேசுகிறார் என தெரியவில்லை காவல்துறையினர் அனைவரும் பணத்தை வாங்கிக்கொண்டு அமைதியாக இருப்பார்கள் என நினைத்தாரா என தெரியவில்லை. மற்ற மாவட்டங்களில்  துரித நடவடிக்கை இல்லை என்றாலும்  தஞ்சை மாவட்ட காவல்துறையினர் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள் என சமூக ஆர்வலர்கள் நம்பிக்கை..
On Wednesday, March 04, 2020 by Tamilnewstv in    
தஞ்சாவூரில், சாலை விபத்தில் படுகாயமடைந்து மூளைச்சாவு அடைந்த,


தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியை கனிமொழி என்பவரின் உடல் உறுப்புகள், 7 பேருக்கு தானம் செய்யப்பட்ட நிலையில் கல்லீரல், இதயம், நுரையீரல் ஆகிய உறுப்புகள் சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. `சின்ன வயசிலிருந்தே எல்லோருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர், இன்று தன் உடல் உறுப்புகளையும் தானமாகக் கொடுத்துவிட்டு, எங்களை விட்டுச் சென்றுவிட்டார்’ என்று கண்ணீரில் குடும்பத்தினர், .

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கெளரவப் பேராசிரியையாகப் பணியாற்றி வந்தார்.இந்த நிலையில், கடந்த 27-ம் தேதி, தமிழ்ப் பல்கலைக்கழகம் எதிரே உள்ள தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது ஏற்பட்ட விபத்தில், கார் மோதி பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக கனிமொழியை மீட்டு, தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி கனிமொழி மூளைச்சாவு அடைந்ததை டாக்டர்கள் உறுதிசெய்து, அவரின் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதையடுத்து, கனிமொழியின் உடல் உறுப்புகளைத் தானமளிக்க, அவரது பெற்றோர்கள் முன்வந்தனர்.ஒரு சிறுநீரகம், தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிக்கும், மற்றொரு சிறுநீரகம், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கல்லீரல், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், இதயம் மற்றும் நுரையீரல், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கண்கள், தஞ்சை அரசு பொதுமருத்துவமனைக்கும் என மொத்தம் 7 பேருக்கு தானமாக அளிக்கப்பட்டுள்ளன.

மேலும் கல்லீரல், இதயம், நுரையீரல் ஆகியவற்றை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சிக்குக் கொண்டுசென்று, அங்கிருந்து விமானத்தில் மதுரை மற்றும் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டன அவர்கள் குடும்பத்தினர் கூறும்போது

எங்களுக்கு மட்டுமல்ல எங்க ஊருக்கே பெருமை தேடித் தந்தவர். சின்ன வயசிலேயே தொல்பொருள் அறிஞராக வர வேண்டும் என நினைத்தார். அதன்படி, தான் நினைத்ததைத் தன் கடின உழைப்பால் சாதித்தார். இன்னும் சாதிக்கவேண்டிய பொண்ணு. அதற்குள் இந்த விபத்து, அவர் கனவில் மட்டுமல்ல எங்கள் எல்லோர் மனத்திலும் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டது. வாழ்கையில் பெரும் உயரத்திற்குச் செல்லக்கூடியவளை, இவ்வளவு சீக்கிரமே இறைவன் அழைத்துக்கொண்டு, எங்களுக்கு பேரதிர்ச்சியைத் தந்துள்ளான். இதை எப்படி நாங்க தாங்கப் போகிறோம் எனத் தெரியவில்லை.சிறு வயசிலிருந்தே எல்லோருக்கும் முன்னுதாரணமாக இருந்தவள், தன் உடல் உறுப்புகளைப் பலருக்குத் தானமாகக் கொடுத்து, அவர்கள் வாழ்வில் ஒளியேற்றிருக்கிறாள்  என்று அவர்கள் குடும்பத்தினர் கூறினார்கள்
On Wednesday, March 04, 2020 by Tamilnewstv in    
திருச்சி:

குடியிருப்பு பகுதியை போலி ஆவணம் மூலம் காலி செய்ய முயற்சிப்பதாக ஆட்சியர் சிவராசுவிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.


திருச்சி மேலசிந்தாமணி, பழைய கரூர் சாலையில்  நங்கவரம் பண்ணைக்கு சொந்தமான இடம் உள்ளது. இதில் நாடார் தெருவை உள்ள ஒரு ஏக்கர் நிலத்தை நங்கவரம் பண்ணையில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு குடியிருப்பதற்காகபிரித்து வழங்கப்பட்டது.
 பல தலைமுறைகளாக சுமார் 100 குடும்பத்தினர் அங்கே வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த இடத்தை சேலத்தைச் சேர்ந்த சின்னசாமி என்பவர் போலி ஆவணத்தை வைத்து நீதிமன்றம் மூலம் உத்தரவு பெற்று அந்த இடத்தை விற்பனை செய்ய முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதன் ஒரு கட்டமாக அந்த இடத்தில் குடியிருப்பவர்களை அகற்றும் பணிக்கு ஆயத்தமாகி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகத்திற்கு சிந்தாமணி கூட்டுறவு சிறப்பங்காடி தலைவர் சகாதேவ பாண்டியன் தலைமையில் திரண்டு வந்தனர். ஆட்சியர் சிவராசுவை நேரில் சந்தித்து மனு அளித்தனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி அளித்தார்.
 பேட்டி: ரவி
On Wednesday, March 04, 2020 by Tamilnewstv in    
ஒன்றாக பயணித்து
ஒன்றாக மரணித்த நண்பர்கள்...



தமிழகத்தில் வேலூரைச் சேர்ந்த செந்தில் குமார் (36), திருச்சியை சேர்ந்த ராம் குமார் (30), முத்துப்பேட்டை சேர்ந்த சுபாஷ் குமார் (29). அபுதாபியில் ஒரே நிறுவனத்தில் வேலை செய்யும் உற்ற நண்பர்கள்..
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை வேலை விஷயமாக ஒமான் சென்ற நண்பர்கள் மூவரும் எல்லையில் சான்றிதழ் பிரச்சினையால் ஒமானுக்குள் நுழைய முடியாது திரும்பவும் அபுதாபி திரும்பி வரும் வழியில் அல் அய்ன் எனுமிடத்தில் இவர்கள் வந்த வாகனம் விபத்துக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்தனர்...

மருத்துவமனை நடவடிக்கை , தூதரக சான்றிதழ்கள் விரைந்து பெற்று #அஷ்ரப்_தாமரசேரி தவைமையிலான தன்னார்வ தொண்டர்கள் மூன்று பேரின் உடல்களையும் ஒரே விமானத்தில் சென்னை அனுப்பி வைத்தனர்..

எதிர்கால கனவுகளோடு குடும்பத்தை பிரிந்து அரபுலகில் வேலைக்கு சென்று விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார்கள்
On Wednesday, March 04, 2020 by Tamilnewstv in    
குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த சட்டத்தை ஆதரித்து பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் பொதுக்கூட்டம், பேரணி நடைபெற்று வருகிறது.


 இந்த வகையில் இந்து முன்னணி சார்பில் இன்று திருச்சி உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோவில் எதிரே குடியுரிமை சட்டத்தை  ஆதரித்து ஒருநாள் தொடர் நாமாவளி கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது. இதற்கு இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆறுமுகம், உறையூர் பகுதி செயலாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில், இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியுள்ள பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் இஸ்லாமியர்களை தேசத்தை விட்டு உடனடியாக வெளியேற்ற வேண்டும். குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்து தேசத்தை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இந்து முன்னணியினர், இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

பேட்டி: முருகானந்தம், இந்து முன்னணி, மாநில பொதுச் செயலாளர்.
On Wednesday, March 04, 2020 by Tamilnewstv in    
திருச்சி வைணவ திவ்ய ஸ்தலங்களில் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில் தெப்பத்திருவிழா

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மாசி தெப்பத்திருவிழா
தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மாசி தெப்பதிருவிழா வரும் 5-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி மேலவாசலில் உள்ள தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா வரும் 27-ந் தேதி தொடங்கி வருகிற 6ம் தேதி வரை நடைபெறும்.
தெப்பத்திருவிழாவின் முதல் நாள் ஹம்ச வாகனத்திலும், 2ம் நாள் ஹனுமந்த வாகனத்திலும், 3ம் நாள் கற்பகவிருட்ச வாகனத்திலும், 4ம் நாள் வெள்ளி கருட வாகனத்திலும், 5ம் நாள் இரட்டை பிரபை வாகனத்திலும், 6ம் நாள் யானை வாகனத்திலும் நம்பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தெப்பத்திருவிழாவின் 7ம் நாள் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளுகிறார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் விழாவின் 8ம் நாளான 5-ந்தேதி மாலை நடைபெறுகிறது. இதையொட்டி அன்று மாலை 3 மணியளவில்; நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து  சேருகிறார். இரவு 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணிவரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். இரவு 9.15 மணிக்கு தெப்பக்குளத்தின் மைய மண்டபம் சென்றடைகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
9ம் திருநாளான 6-ந் தேதி பந்தக்காட்சி நடைபெறுகிறது. இதையொட்டி காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி பகல் 1.30 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். பகல் 2 மணி முதல் மாலை 4 மணிவரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் மாலை 7 மணிக்கு மண்டபத்திலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு பந்த காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இத்துடன் தெப்பத்திருவிழா நிறைவடைகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன்,  ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் கோவில்  ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

தண்ணீர் நிரப்பும் பணி
ஸ்ரீரங்கம் மேலவாசலில் உள்ள தெப்பக்குளம் ஐந்தரை ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு வரும் 5-ந்தேதி மாசி தெப்ப உற்சவம் நடைபெறுவதால் தெப்பக்குளத்திற்கு காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் இருந்து வாய்க்கால் மூலமாக தண்ணீர் நிரப்பப்பட்டு பணிகள் முடிவடைந்த நிலையில் ஜொலிக்கும்  தெப்பம்