Friday, March 27, 2020

On Friday, March 27, 2020 by Tamilnewstv in    
திருச்சி மார்ச் 27

ஊரடங்கு சட்டத்தை மதிக்காமல்  நடமாடிய, வைத்திருந்த 1289பேர் கைது - 802ஆட்டோக்கள் மற்றும் டூவீலர்கள், 22நான்கு வாகனங்கள் பறிமுதல்.

கொரானாவில் இருந்து காத்துக்கொள்ள யாரும் வீட்டிற்கு வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள பிரதமர் மோடி 21 நாள் ஊரடங்கு பிறபிக்கப்படுவததாக அறிவித்துள்ளார்.

பல இடங்களிலும் காரணமின்றி சுற்றிதிரிந்த நபர்கள் திருப்பி அனுபப்பட்டனர். சில இடங்களில் ‘தட்டி’ அனுப்பப்பட்டனர். எனினும் நண்பர்களாக சேர்ந்து கொண்டு சுற்றித்திரிந்த நபர்களை கைது செய்த போலீசார் சில இடங்களில் வாகனங்களை பறிமுதல் செய்தினர். அந்த வகையில் திருச்சி, தஞ்சை, நாகை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர், திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த மத்தியமண்டலத்தில்  ஊரடங்கு சட்டத்தை மதிக்காமல் அவசியமின்றி சாலைகளில் நடமாடிய  1289பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 802ஆட்டோக்கள் மற்றும் டூவீலர்  வாகனங்கள் மற்றும் 22 நான்கு சக்கர வாகனங்கல பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
On Friday, March 27, 2020 by Tamilnewstv in    
கரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வகையில் இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


இந்த வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த கடந்த 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் பொது இடங்களில் மக்கள் கூடுவது தவிர்க்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மக்கள் அதிகம் கூடிய  பேருந்து நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வகையில் திருச்சியில் மத்திய பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, காந்தி சந்தை ஆகிய இடங்களில் உள்ள கட்டடங்கள், தரை உள்ளிட்டவற்றில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

உயரமான கட்டடங்களுக்கு தீயணைப்புத்துறை வாகனம் மூலம் கிருமி நாசினி கலந்த தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு தூய்மை படுத்தப்படுகிறது.
 இந்த வகையில் இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ராஜகோபுரம் கிருமி நாசினி கலந்த தண்ணீர் தீயணைப்புத்துறை வீரர்களால் பீய்ச்சி அடிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.  இதேபோல்  ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை, அம்மா உணவகம் உள்ளிட்ட இடங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
On Friday, March 27, 2020 by Tamilnewstv in    
திருச்சி மார்ச் 27


திருச்சி மத்திய சிறையில்  சிறைவாசி பின்  உறவினர்கள் நேர்காணல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது - சிறைவாசிகள் தங்கள்  உறவினர்களுடன் காணொளி காட்சி மூலம் நேர்காணல் நடத்தலாம்.



திருச்சி மத்திய சிறையில்
விசாரணைக் கைதிகள், ஆயுள் கைதிகள் மற்றும் குண்டாசில் உள்ள கைதிகள்  என
1600 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில்
சிறைவாசிகள் இன்று முதல் வரும் 14.4.2020 வரை தங்களது  குடும்பத்தினருடன் நேர்காணல் செய்வது நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 கூட்டமாக நேர்காணல் புரிவது சிறைவாசிகள்  உடல்நலம் மற்றும் நேர்காணல் காணவரும உறவினர்களின் உடல்நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இதனை மேற்கொண்டுள்ளதாக கூறும் சிறை நிர்வாகம் காணொளி காட்சி மூலம் சிறைவாசிகள் தங்கள்  உறவினர்களுடன் நேர்காணல் நடத்தலாம் எனவும் அறிவித்துள்ளது.

Thursday, March 26, 2020

On Thursday, March 26, 2020 by Tamilnewstv in    
திருச்சி மார்ச் 26

 மருத்துவமனையில் வாலிபருக்கு கொரனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 22ஆம் தேதி துபாயில் இருந்து  விமானம் மூலம் திருச்சி வந்த ஈரோட்டை சேர்ந்த ராஜ்குமார் (24) என்பவர் வைரஸ் காய்ச்சல் அறிகுறி இருப்பதாக திருச்சி அரசு   மருத்துவமனையின்  சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டது.

அதில் அவருக்கு கொரனா நோய் தொற்று  இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  தற்போது அவருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மேலும்  ஒருவருக்கு கொரன் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 26 பேர் கண்டறியப்பட்ட நிலையில் மேலும் ஒருவருக்கு பாதிப்பை தொடர்ந்து கொரனா பாதிப்பு எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.


On Thursday, March 26, 2020 by Tamilnewstv in    
திருச்சி பெரிய கம்மாளத் தெருவில்  கன்னிகா பரமேஸ்வரி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் திருவிழா நடைபெறும்.

 தற்போது ஊரடங்கு சட்டம் அமலில் உள்ள நிலையில் இந்த ஆண்டு விழா நடத்த திருச்சி மாநகர போலீசில்  அனுமதி கேட்டனர். அப்போது நிர்வாகத்தினர் 30 பேருக்கும் குறைவான உபயதாரர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து போலீசார் அனுமதி அளிததனர்.

 ஆனால் அம்மன் வீதி உலா நடைபெற்ற போது 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர். இப்போது இந்த விவகாரம்  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கோட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
On Thursday, March 26, 2020 by Tamilnewstv in    
திருச்சி:

திருச்சி அருகே உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளில் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் அனைத்து விதமான வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், ஆம்புலன்ஸ் போன்றவை மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டண வசூல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள சுங்கச்சாவடிகளில் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

திருச்சி சமயபுரம் அருகே உள்ள சுங்கச்சாவடி, திருச்சி- புதுக்கோட்டை சாலையில் மண்டையூர் அருகில் உள்ள சுங்கச்சாவடி, திருச்சி -தஞ்சை சாலையில் துவாக்குடி சுங்கச்சாவடி, திருச்சி- மதுரை ரோட்டில் விராலிமலை அருகே உள்ள சுங்கச்சாவடி, திருச்சி -கரூர் ரோட்டில் முக்கொம்பு அருகே உள்ள சுங்கச்சாவடி ஆகியவை வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
On Thursday, March 26, 2020 by Tamilnewstv in    
திருச்சி மார்ச் 26
 அதிகமாக
உலகையே அச்சுறுத்தும் கரோனா வைரஸை தடுக்கும் நடவடிக்கையாக  ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

 இந்த வகையில் திருச்சியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கூடிய பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நிர்வாகத்தால் நடைபெற்று வருகிறது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் இந்த கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த வகையில் இன்று திருச்சியில் முக்கிய சந்தையாக விளங்கும் காந்தி சந்தையில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக இரவு 9 மணி முதல் மறுநாள் அதிகாலை 7 மணி வரை மட்டுமே காந்தி சந்தை இயங்கும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவிட்டுள்ளார். மொத்த வியாபாரம் மட்டுமே இங்கு நடைபெறும். பொது மக்கள் யாரும் காய்கறி வாங்க வரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று இரவு 9 மணிக்கு தொடங்கிய சந்தை இன்று காலை ஏழு மணிக்கு முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் கூடிய பொதுமக்களை காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.
On Thursday, March 26, 2020 by Tamilnewstv in    
திருச்சி மார்ச் 26

மத்தியமண்டலத்தில்  ஊரடங்கு சட்டத்தை மதிக்காமல்
சாலைகளில் நடமாடிய மற்றும் கடைகளை திறந்து வைத்திருந்த 539 பேர் கைது -  செய்யப்பட்டனர்.  ஆட்டோக்கள் மற்றும் டூவீலர் என 325 வாகனங்கள் பறிமுதல்
- மாவட்ட காவல் துறை  கண்காணிப்பாளர்  அலுவலகம் தகவல்.

கொரானாவில் இருந்து காத்துக்கொள்ள யாரும் வீட்டிற்கு வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள பிரதமர் மோடி 21 நாள் ஊரடங்கு பிறபிக்கப்படுவததாக அறிவித்துள்ளார். இதன் முதல்நாளான நேற்று பல இடங்களிலும் காரணமின்றி சுற்றிதிரிந்த நபர்கள் திருப்பி அனுபப்பட்டனர். சில இடங்களில் ‘தட்டி’ அனுப்பப்பட்டனர். எனினும் நண்பர்களாக சேர்ந்து கொண்டு சுற்றித்திரிந்த நபர்களை கைது செய்த போலீசார் சில இடங்களில் வாகனங்களை பறிமுதல் செய்தினர். அந்த வகையில் திருச்சி, தஞ்சை, நாகை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர், திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த மத்தியமண்டலத்தில்  ஊரடங்கு சட்டத்தை மதிக்காமல் அவசியமின்றி சாலைகளில் நடமாடிய மற்றும் கடைகளை திறந்து வைத்திருந்த 539 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆட்டோக்கள் மற்றும் டூவீலர் என 325 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்  அலுவலகம் தெரிவித்துள்ளது.

Wednesday, March 25, 2020

On Wednesday, March 25, 2020 by Tamilnewstv in    
திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு இன்று இரவு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், திருச்சி காந்தி சந்தையில் அதிக அளவில் கூட்டம் கூடுவதாக புகார் எழுந்ததையடுத்து காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்கங்களுடன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.


 நாளை 26 ஆம் தேதி முதல் காந்தி சந்தையில் மொத்த வியாபாரம் மட்டுமே இயங்கும். இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை மட்டுமே இந்த வியாபாரம் நடைபெறும். சில்லரை வியாபாரிகளான மளிகைக் கடைகாரர்கள் மட்டுமே வந்து காய்கறிகளை வாங்க வேண்டும். பொதுமக்கள் யாரும் காந்தி சந்தையினுள் செல்லக்கூடாது.




மளிகை  கடைகளில் மட்டுமே பொதுமக்கள் காய்கறிகளை வாங்க வேண்டும். காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை காந்தி சந்தை இயங்காது. யாரும் உள்ளே செல்ல முடியாது. வியாபாரிகள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து தான் காந்தி சந்தைக்கு வரவேண்டும். மாஸ்க் அணியாத வியாபாரிகள் சந்தைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். அதைப்போல் சந்தையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளும் மாஸ்க் அணிய வேண்டும். வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காந்தி சந்தைக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.   ஏற்கனவே 13 பேர் கரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்தனர். இன்று மட்டும் இரண்டு பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் ஏழு நோயாளிகளின் ரத்த பரிசோதனை முடிவில் கரோனா தாக்குதல் இல்லை என்று முடிவு வந்துவிட்டது. மீதமுள்ள 6 நோயாளிகளுக்கு பரிசோதனை வரவேண்டியுள்ளது.
ஊரடங்கு உத்தரவின் போது இருசக்கர வாகனங்கள் மட்டும் அதிக அளவில் போக்குவரத்து இருந்தது காவல் துறை மூலம் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது நோயாளிகள் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவமனை செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.
இவர்களைத் தவிர இரு சக்கர வாகனத்தில் இரண்டு பேர் அல்லது மூன்று பேர் சென்றால் இனி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என்றார்.