Sunday, April 05, 2020

On Sunday, April 05, 2020 by Tamilnewstv in    
CANPAL ACTIHITY

AINBOF  ALL INDIA GENERAL SECRETARY GV.MANINARAN DIRECTED
               
                                       TO


Mangaluru Region has conducted Canpal Activity and all the members of Mangaluru has participated in it.

Due to COVID 19, we have decided to provide food to Wenlock Hospital and Police Stations of Mangaluru City.

Lunch and Dinner has been provided to Wenlock Hospital for consecutive 4 days since Yesterday. Also, we have supplied Butter Milk, Lassi & Water bottles to 3 Police Stations of Mangaluru City for 4 days.  Our General Manager, Sri Yogish Acharya has participated in our Canpal Activity conducted at Bunder Police Station, Mangaluru.

 All the Hostital Staff, Police Authorities and Public have very much appreciated about our Canpal Activity. Myself along with Regional Secretary, Sri. Harish Shetty, other Office Bearers and members have participated in the Canpal Activity. We are forwarding photos taken during the activity.

PRESS RELEASE BY CBOA  PRO R.V.S

Ramesh Naik
DGS & CCO
Mangaluru Region

Saturday, April 04, 2020

On Saturday, April 04, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஏப் 04

திருச்சியில் 17 நபர்களுக்கு கொரனா நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருச்சியில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

தற்போது மருத்துவக்
கல்லூரி
மருத்துவமனையில்
125 நபர்கள்
சேர்க்கப்பட்டுள்ளனர்
இவர்களில் 5நபர்கள் வெளி மாவட்டத்தினை சார்ந்தவர்கள்
(ஈரோடு -1 , கரூர்
திருச்சி மாவட்டத்தினை சார்ந்தவர்கள் 120 நபர்களும், தஞ்சாவூர் - 1 நபரும்)
மேற்குறிப்பிட்ட 120 நபர்களின் இருப்பிடங்களை சுற்றியுள்ள 50 பகுதிகளில்
இதுவரை 25,586 குடியிருப்புகளில் 469 மருத்துவக்குழுவினர் வீடு வீடாக ஆய்வு செய்து
நபர்களை பரிசோதனை செய்துள்ளனர்.
எந்த ஒரு நபருக்கும் கொரோனா
வைரஸ் நோய் அறிகுறி எதுவுமில்லை
ஏற்கனவே கொரோனா வைரஸ் நோய் தாக்கப்பட்ட ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 1 நபருக்கும்,
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 நபர்களுக்கும்
உறுதி செய்யப்பட்டு மேற்கண்ட 3
நபர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது உடல் நிலை சீராக நல்ல
நிலையில் உள்ளது.
இதுவரை 221
நபர்களுக்கு பரிசோதனை
செய்யப்பட்டதில் (மேற்கண்ட
3.
நபர்களை தவிர) இதர 217நபர்களுக்கு  இரத்த மாதிரி பரிசோதனையில்
கொரோனா வைரஸ் நோய் இல்லை என
தெரியவந்துள்ளது.
தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள 120 நபர்களுக்கு இரத்த மாதிரி பரிசோதனை
முடிவு வரவேண்டும். இவர்களில்
53நபர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் இரத்த
மாதிரி பரிசோதனை அறிக்கை முடிவு இன்று பெறப்பட்டு
17நபர்களுக்கு கொரோனா
வைரஸ் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதர 36 நபர்களுக்கு கொரோனா
வைரஸ் நோய் தொற்று இல்லையென அறிக்கை
வரப்பெற்றுள்ளது.
இருப்பினும்
இவர்கள்
அனைவரும் மேலும் 14நாட்கள்
மருத்துவமனையில்
சிகிச்சைப்பெற்று
இறுதியாக பரிசோதனை செய்த
பின்னர்
மருத்துவமனையில்
இருந்து
விடுவிக்கப்படுவார்கள்.
மேற்கண்ட 53
நபர்களை தவிர மீதமுள்ள 67
நபர்களின் பரிசோதனை
நடவடிக்கையில் (Under Processing) உள்ளது என்றார்.
மேலும் தடுப்பு முன்னெச்சரிக்கையாக வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில்
இருந்த வந்த 3,045 பேர் விடுகளில் தனிமைபடுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் நல்ல நிலையில் உள்ளனர் என தெரிவித்தார்.
On Saturday, April 04, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஏப் 04

பெங்களூர் இருந்து திருச்சி வந்து சுற்றி திரிந்த நபர்  அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்பு பிரிவிற்கு கொண்டு செல்லப்பட்டார்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலை காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இந்நோய் பரவாமல் தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக தமிழ்நாட்டிலும் நடைமுறை பின்பற்ற வருகிறது. கொரனா வைரஸை பரவாமல் காக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் வெளி மாநிலத்துக்கு சென்று வந்தவர்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் தங்களை முன் வந்து பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ள வேண்டும் என்றும்,  தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பல்வேறு உத்தரவுகள் மத்திய . மாநில அரசுகள் பிறப்பித்துள்ளது. ஆனால் இதனை கண்டுகொள்ளாத திருச்சி ஈ.பி.ரோடு பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகன் அருள்ராஜ் (65) டிரைவராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 3நாட்களுக்கு முன்பாக பெங்களூருவில் இருந்து திருச்சி வந்தார். அவரிடம் அப்பகுதியை சேர்ந்த மாநகராட்சி சுகாதார கண்காணிப்பாளர் அலங்கராஜ் அவரிடம் வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம் என்றும்,  தனிமை படுத்தி கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தினார்.  ஆனால் அவருடைய அறிவுறுத்தலைக்  கேட்காமல் மீறி பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி வந்ததாக தகவல் வந்ததையடுத்து உடனடியாக அலங்கராஜ் சுகாதார ஆய்வாளருக்கு தகவல் கொடுத்தார். இதனை தொடர்ந்து சுகாதார ஆய்வாளர் தலைமையில் போலீசார் உதவியுடன் அந்த நபரை தேடினர். அப்போது அருள்ராஜ் எடத்தெரு - மார்கெட் சாலையில் இருந்த அவரை பிடித்து திருச்சி அரசு மருத்துவமனையில் செயல்படும் சிறப்பு சிகிச்சை பிரிவிற்கு கொண்டு சென்றனர். பின்னர் அப்பகுதி முழுவதும் சுகாதார பணியாளர்கள்  உடனடியாக கிருமி நசினி மருந்தை தெளித்தனர்.
On Saturday, April 04, 2020 by Tamilnewstv in    
திருச்சி கனரா வங்கி அதிகாரிகள் சங்கம் சார்பில் உணவு சாலையோர மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது


தமிழகத்தில் தொற்றுநோய் பரவாமல் இருக்க சில நாட்களாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது அதேபோன்று சாலையோர மக்கள்  பாதிக்காமல் இருக்க அரசு பல்வேறு சமூகநல அமைப்பினரை உதவி செய்யும்படி கேட்டுக்கொண்டது அதற்கு பல சமூக நல அமைப்பினர் சாலையோர மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்
அதன் தொடர்ச்சியாக இன்று கனரா வங்கி அதிகாரிகள் சங்கம்  சார்பாக திருச்சி அரசு மருத்துவமனை அருகே உள்ள சாலையோர மக்களுக்கு இலவச உணவு வழங்கினர்

இந்நிகழ்வை கனரா வங்கி மண்டல மேலாளர் ஸ்ரீகுமரன் துவக்கி வைத்தார் மண்டலச் செயலாளர் ராஜகோபால் எஸ் ஆர் கிருஷ்ணன் அறிவழகன் விக்னேஷ் இந்நிகழ்வில் கலந்து கொண்டு உணவு வழங்கினார்கள்
என சங்கத்தின் ஊடகத் தொடர்பாளர் *ஆர் வி எஸ்* தெரிவித்தார்
On Saturday, April 04, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஏப் 04

அதிமுக  நிர்வாகி RC கோபி தலைமையில் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.


தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொற்று பரவாமல் இருக்க பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறார் அதன் அடிப்படையில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தற்காலிகமாக காய்கறி சந்தை அமைக்கப்பட்டுள்ளது


 மக்கள் அதிகமாகக் கூடும் இடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்களுக்கு தொற்று பரவாமல் இருக்கவும் அதிமுக  சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

 உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலை காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இந்நோய் பரவாமல் தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக தமிழ்நாட்டிலும் நடைமுறை பின்பற்றி வருகிறது. 

கொரோனா வைரஸை பரவாமல் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி  ஸ்ரீரங்கம் பகுதி அதிமுக  சார்பில் நிர்வாகி R.C. கோபி தலைமையில் பிரியாசிவகுமார், ராமசாமி திருவேங்கடம்  சசிரேக ஜெயந்தி வெங்கடேஷன் ராஜு,ஆகியோர்  ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும்  காய்கறி மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் வகையில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

Friday, April 03, 2020

On Friday, April 03, 2020 by Tamilnewstv in    
*Canara Bank Officer's Association (CBOA) Donated Food Materials to Medical College Community Kitchen*

Canara Bank Officer's Association (CBOA) Kannur Region Donated food materials to Community Kitchen of Kannur Govt Medical College, Pariyaram. Community kitchen is the idea of Kerala state govt to provide Food to all the needy during the lock down period. In the Medical college, the said kitchen provides free food to all the Kovid patients, and the patients in Isolation four times a day. Also, it distributes food to the Health workers, other patients & their companions too during this crisis period. It provides food to more than 450 people a day.

Canara Bank Officer's Association, by principle & action,  bound to help the society in critical situations, extends helping hands of its CANPALs to the society. It proves the commitment of each and every CANPAL to help those in need.


On behalf of CBOA Kannur Region, Suresh Kumar V V, (Regional Chairman), Arunkumar E V (Regional Secretary), Sarin Satheesan (Asst Regional Secretary), Maneesh P (Dist Secretary) & Rahul P P handed over the food materials sufficient for more than 3days. Dr N Roy, Principal, Kannur Govt Medical College, Pariyaram on behalf of the College, received the food items. Medical College Employees Co-op Society President P R Jijesh, Daya charitable society president Seeba Balan, Medical college hospital labour secretary M Y Sunil kumar etc were present.

Medical College Employees Co-op Society  & Daya Charitable Society extended their warm gratitude to each and every members of CBOA for the kind gesture.


Arunkumar
Regional Secretary
CBOA, Kannur Region
On Friday, April 03, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஏப் 03

திருச்சி மாநகராட்சி பகுதிகளுக்கு
மலிவு விலையில் காய்கறி விற்பனை - அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரும் 14ம் தேதி வரையிலான 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளைத் தவிர இதர வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. 

இதையடுத்து தமிழக அரசின் உள்ளாட்சி துறை சார்பில் மலிவு விலையில் காய்கறி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சி பாலக்கரை பகுதியில் உள்ள அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் இன்று இந்த விற்பனையை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன்,  வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதன் பின்னர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஒரு வாரத்திற்கு தேவையான 11 வகையான காய்கறிகள் 150 ரூபாய் என்ற மலிவு விலைக்கு தமிழக அரசால் விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்ற காரணத்திற்காக வீடுகள் தோறும் சென்று இந்த காய்கறி விற்பனை செய்யப்படுகிறது. இந்த காய்கறிகளை மக்கள் வாங்கி பயன் அடைந்து கொள்ள வேண்டும்.  வீட்டைவிட்டு வெளியில் வராமல் உள்ளேயே இருக்க வேண்டும். அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளை உள்ளடக்கிய 4 கோட்ட பகுதிகளில் தினமும் இந்த காய்கறி விற்பனை நடைபெறும். அதனால் கொரோனா தொற்று மேலும் பரவுவதை தடுக்கும் வகையில் மக்கள் வீட்டிலேயே இருந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.


On Friday, April 03, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஏப் 03

திருச்சி மாவட்டத்தில் சுற்றித்திரிந்த 500 வாகனங்கள் பறிமுதல்

திருச்சி மாவட்ட எஸ்.பி ஜியா உல் ஹக் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
திருச்சி மாவட்டத்தில் ஒரு நாள் மட்டும் 600 பேர் மீது 500 வழக்கு பதியப்பட்டு, 500 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஹெல்மெட் அணியாமலும், விதிமீறல் செய்தவர்கள் எனவும் என  2300 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. கடந்த 25ஆம் தேதி முதல் நேற்று
2558 நபர்கள் மீது
2151வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இதுவரை 2228 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காரணமின்றி சுற்றித் இருந்ததாக மார்ச் 25ம் தேதி முதல் ஏப்ரல்
2வரை 19 ஆயிரத்து, 970 வழக்குகள் பதியப்பட்டுள்ளது
என தெரிவித்துள்ளார்.


On Friday, April 03, 2020 by Tamilnewstv in    
திருச்சி மாநகர காவல் துறையினருக்கு சனிடைசர் மற்றும் முக கவசம் மாநகர காவல்துறை ஆணையர்  வழங்கினார்


திருச்சி மாநகரத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்கு சமூக விலகலை கடைபிடிக்க வேண்டிய 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

 அது சம்பந்தமாக காவல்துறையினர் ஊரடங்கு உத்தரவை முறையாக அமல்படுத்தும் பொருட்டும் சமூக விலகலை பொதுமக்கள் கடைபிடிக்கவும் தற்காலிக காய்கறிகள் அரசு மருத்துவமனை மற்றும் திருச்சி மாநகரில் முக்கியமான பகுதிகளில் காவல் துறையில் பணியில் ஈடுபட்டுள்ளனர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மாநகரத்தில் பணிபுரியும் சட்டம் மற்றும் ஒழுங்கு குற்றப்பிரிவு சிறப்பு பிரிவுகள் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு மாநகர ஆயுதப்படை மற்றும் ஊர்க்காவல் படை மற்றும் திருச்சி மாநகரத்தில் பணிக்கு வந்துள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர்கள் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு மற்றும் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரிய அமைச்சுப் பணியாளர்கள் ஆகிய 2500 நபர்களுக்கு தலா 500 மில்லி லிட்டர் பாட்டில் ஒன்று முக கவசம் 2 மற்றும் பொருட்கள் அடங்கிய பையனை மாநகர காவல்துறை ஆணையர் வழங்கினார்