Saturday, April 04, 2020
On Saturday, April 04, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி ஏப் 04
பெங்களூர் இருந்து திருச்சி வந்து சுற்றி திரிந்த நபர் அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்பு பிரிவிற்கு கொண்டு செல்லப்பட்டார்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலை காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இந்நோய் பரவாமல் தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக தமிழ்நாட்டிலும் நடைமுறை பின்பற்ற வருகிறது. கொரனா வைரஸை பரவாமல் காக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் வெளி மாநிலத்துக்கு சென்று வந்தவர்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் தங்களை முன் வந்து பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ள வேண்டும் என்றும், தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பல்வேறு உத்தரவுகள் மத்திய . மாநில அரசுகள் பிறப்பித்துள்ளது. ஆனால் இதனை கண்டுகொள்ளாத திருச்சி ஈ.பி.ரோடு பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகன் அருள்ராஜ் (65) டிரைவராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 3நாட்களுக்கு முன்பாக பெங்களூருவில் இருந்து திருச்சி வந்தார். அவரிடம் அப்பகுதியை சேர்ந்த மாநகராட்சி சுகாதார கண்காணிப்பாளர் அலங்கராஜ் அவரிடம் வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம் என்றும், தனிமை படுத்தி கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தினார். ஆனால் அவருடைய அறிவுறுத்தலைக் கேட்காமல் மீறி பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி வந்ததாக தகவல் வந்ததையடுத்து உடனடியாக அலங்கராஜ் சுகாதார ஆய்வாளருக்கு தகவல் கொடுத்தார். இதனை தொடர்ந்து சுகாதார ஆய்வாளர் தலைமையில் போலீசார் உதவியுடன் அந்த நபரை தேடினர். அப்போது அருள்ராஜ் எடத்தெரு - மார்கெட் சாலையில் இருந்த அவரை பிடித்து திருச்சி அரசு மருத்துவமனையில் செயல்படும் சிறப்பு சிகிச்சை பிரிவிற்கு கொண்டு சென்றனர். பின்னர் அப்பகுதி முழுவதும் சுகாதார பணியாளர்கள் உடனடியாக கிருமி நசினி மருந்தை தெளித்தனர்.
பெங்களூர் இருந்து திருச்சி வந்து சுற்றி திரிந்த நபர் அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்பு பிரிவிற்கு கொண்டு செல்லப்பட்டார்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலை காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இந்நோய் பரவாமல் தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
-
*திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.* *திருச்சி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாத...
-
த மிழகத்தில் எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாய் இருக்கிறது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், கோயில் நகரம், கொலை நக...
-
*திருச்சி *உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இனி சீனப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என மாநிலத்தலைவர் ...

0 comments:
Post a Comment