Saturday, April 18, 2020

On Saturday, April 18, 2020 by Tamilnewstv in    

*சமயபுரம் கோவிலில் தமிழக அரசு ஆணையை மீறி உள்ளே நுழைந்து தரிசனம்*

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்திலிருந்து அனைத்து திருக்கோவில்களிலும் ஆலய தரிசனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.  இந்நிலையில் உலக புகழ் பெற்ற அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலும் கடந்த 20.3.2020 முதல் பக்தர்களின் தரிசனம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பல லட்சம் மக்களால் கொண்டாடப்படும் தேர்த்திருவிழாவும் கொரோனா தாக்கத்தினால் ரத்து செய்யப்பட்டது.


 இந்நிலையில் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் கடந்த 4.4.2020 சனிக்கிழமை அன்று மாலை 4 மணி முதல் 5.30 மணிக்கு நடைபெற்ற அபிஷேகத்தில் சிறப்பு பூஜைகளும் மின்சாதனம் தொடர்புடைய பெண் தொழிலதிபரும் திருக்கோவில் உதவி கண்காணிப்பாளர்  பழனிவேல் என்பவரின் மனைவியும் அரசின் உத்தரவை மதிக்காமல் தடையை மீறி திருக்கோவில் உள்ளே நடைபெற்ற பூஜைகளில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது,

 சமயபுரம் சுறியுள்ள  கிராமத்தினரும், உள்ளூர் ஆன்மீகவாதிகளும் மிகுந்த வேதனையும் பெரும் மன வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் பூஜையில் கலந்து கொண்ட அன்று திருக்கோவிலில் உள்ள தனியார் முதன்மை காவலர்களும் கோவில் அர்ச்சகர்களும் எவ்வளவு தடுத்தும் கூட கோவில் உதவி கண்காணிப்பாளர் பழனிவேல் அவர்கள் அனைவரையும் மிரட்டி தகாத வார்த்தைகள் கூறி திருக்கோயிலின் பின்வாசல் வழியாக அழைத்து சென்று தரிசனம் செய்ய வைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு திருக்கோவிலில் உள்ள பின்வாசல் கண்காணிப்பு கேமரா மற்றும் ஆலய கருவறை அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களில் வீடியோ பதிவுகளை ஆராய்ந்தால் உண்மை தெரிந்துவிடும் என்று கூறப்படுகிறது.

திருக்கோவிலில் நடந்த இத்தகைய சம்பவங்கள் பற்றி கோவில் இணை ஆணையர் அசோக்குமார் அவர்களுக்கும்  தெரியும் எனவும் அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

 அரசின் உத்தரவை மதிக்காமல் தனிநபரின் விருப்பத்தின் பேரில் ஆலய விதிகளை மீறி செயல்பட்ட சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் உதவி கண்காணிப்பாளர்  பழனிவேல் அவர்கள் மீது துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
On Saturday, April 18, 2020 by Tamilnewstv in    
திருச்சி 

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் ஆங்காங்கே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வகையில் முக்கிய சாலைகள், மக்கள் நெருக்கடி மிகுந்த சாலைகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

இந்த வகையில் 

திருச்சி ஜெயில் பேட்டை பாலக்கரை சிவாஜி சிலை சுற்றியுள்ள ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. இதில் மாநகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டு கை தெளிப்பான் மற்றும் சிறிய அளவிலான கருவிகள் மூலம் சாலைகளின் இருபுறங்களிலும் கிருமிநாசினி தெளித்தனர். பல இடங்களில் அமைச்சரே நேரடியாக கிருமி நாசினி  தெளித்தார். 

பின்னர் நம்பர் ஒன் டோல்கேட் அருகே தங்கியுள்ள திருநங்கைகளை சந்தித்து அவர்களுக்கு இலவசமாக உணவு சமைக்கும் பொருட்கள் மற்றும் ரொட்டி போன்றவைகளை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திருநங்கைகளுக்கு வழங்கினார் 


மேலும் அவர்களின்  குறைகளை கேட்டு அறிந்தார் பின்னர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அவர்களை திருநங்கைகள் வாழ்த்தி அனுப்பினார்
On Saturday, April 18, 2020 by Tamilnewstv in    
திருச்சி

(சமூக இடைவெளி இல்லாமல்  அரசு உத்தரவை மீறி  புகைப்படத்தில் கிராமியப் பாடகர் ஆக்காட்டி ஆறுமுகம் புதுக்கோட்டை பட்டிமன்ற பேச்சாளர் சரவணன் இலுப்பூர் ராசப்பா டாப் 5  லீடர்கள் என்று இவர்களால் அழைக்கப்படும் இளங்கோவன் அறிவுமணி பால்ராஜ் பாபு சாகுல் மற்றும் இவர்களுடன் எல்பின் உரிமையாளர்கள் அழகர்சாமி என்கிற ராஜா அவரது சகோதரர் ரமேஷ் குமார் என்கிற எஸ்ஆர்கே ரமேஷ்)



இந்தியாவிலும் தமிழகத்திலும் மத்திய மாநில அரசுகள் தொற்று பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன எடுத்துவரும் நடவடிக்கைகளில் தனித்திருக்க வேண்டும் சமூக இடைவெளி வேண்டும் வீட்டில் இருந்து வெளியில் அவசியமில்லாமல் வரக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது

ஆனால் தொடர்ச்சியாக பொதுமக்களை ஏமாற்றி வரும் எல் பின் நிறுவனம் பல ஊர்களில் தன்னுடைய கை வரிசை களை காட்டிவிட்டு தற்போது திருச்சியில் மையமாக போலி நிறுவனத்தை நடத்தி வருகிறது பல்வேறு கவர்ச்சி திட்டங்களை அறிவித்து இவர்கள் அறிவித்ததை பூர்த்தி செய்யாமல் இருந்ததால் இவர்களுடன் ஏமாற்றத்தில் ஈடுபட்டிருந்த நபர்கள் இவர்களை விட்டு பலர் வெளியில் விலகி சென்றுள்ளனர் 

இந்நிலையில் புதுக்கோட்டையிலிருந்து கிராமியப் பாடகர் ஆக்காட்டி ஆறுமுகம் என்ற நபரை புதுக்கோட்டை பட்டிமன்ற பேச்சாளர் சரவணன் இலுப்பூர் ஐ சேர்ந்த ராசப்பா இவர்களில் டாப் லீடர் களான இளங்கோவன் அறிவுமணி பால்ராஜ் பாபு சாகுல் மற்றும் பல நபர்களுடன் சமூக இடைவெளி இல்லாமல் அரசு கூறிய விதிமுறைகளை மீறி ஊரை விட்டு ஊர் வந்து ராஜா என்கிற அழகர்சாமி சகோதரர் ரமேஷ் குமார் என்கிற எஸ்ஆர்கே ரமேஷ் கையை குலுக்கி சால்வை அணிவித்தும் புகைப்படம் எடுத்து குரூப்பில் பதிவிட கின்றனர் 

மேலும் இவர்கள் துபாய் சென்று வந்த போது சமூக இடைவெளி பின்பற்றாமல் ஏழை எளிய மக்களுக்கு கையுறை அணியாமல் மாஸ்க் அணியாமல் அன்னதானத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அதை நாம் செய்தியாக வெளியிட்டு இருந்தோம் நம் செய்தியின் வெளிப்பாடாக இவர்கள் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு தனிமைப்படுத்தப் பட்டிருந்தனர்.

அதன் பின்னர் மேலும் சில நாட்கள் கழித்து  தனது வீட்டில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் தருவதாக கூறி பொது மக்களை கூட்டம் கூட்டி உள்ளனர் 

தங்களுடைய நிதி நிறுவனத்தில் வேலை செய்யும் நபர்களுடன் ஆட்கள் கூட்டமாக காணப்பட்டது அங்கு வசிக்கும் நபர்களால்  சரக காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு காவல்துறையால் விரட்டப்பட்டனர் சுற்றியிருந்த நபர்கள் அனைவரும் கொரோனா அச்சத்துக்கு உள்ளாகினர். 

மேலும் இவர்களை  தினமும் பல மாவட்டங்களிலிருந்து இவர்களை சந்திக்க பல நபர்கள் வந்து கொண்டே இருக்கின்றனர்.

அரசு பல விதிமுறைகளை விதித்து இருந்தும் இவர்கள் வழிமுறையை பின்பற்றாமல் இவர்கள் நடப்பது அரசை அவமானப்படுத்துகிறார்களா  இல்லை அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் நடக்க வேண்டும் என்று அரசை எதிர்க்கிறார்களா?  என்பது கேள்விக்குறியாக உள்ளது?
  
 மேலும் இத்தகைய செயல்களினால் தொற்று உள்ள நபர் யாராவது பல ஊர்களில்  இருந்து வரும்பொழுது வந்து செல்லும் பொழுது தொற்று பரவினால்
 அரசுக்கு இது ஒரு பெரிய தலைவலியாக அமையக்கூடும். 

இவர்களுக்கு மட்டும் தனி சட்டமா இவர்களுக்கு யார் இந்த உரிமையை சலுகையை அளித்தனர் அரசா அரசு அதிகாரிகளா? எந்த அரசு எந்த அதிகாரிகள்? என்று தெரியவில்லை? ஒருவேளை மக்கள் அரசரா??🤔

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடந்தபோது தொற்று பரவாமல் இருக்க வீடியோ கான்பரன்சில் கூட்டம் நடத்தப்பட்டது.

அப்படி இருக்கும்போது எல் பின் சகோதரர்கள் மற்றும் அவர்களுடைய கூட்டாளிகளுக்கு எப்படி இந்த தைரியம் என்று தெரியவில்லை?

இவர்கள் செயல் தொடருமா தமிழக அரசால் இவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா பொறுத்திருந்து பார்ப்போம் ?






தொடர் மக்கள் சேவையில் ஈடுபடும் மாண்புமிகு அமைச்சர்கள் விதிமுறைகளை பின்பற்றும் படம்


மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி திருச்சியை சேர்ந்த மாண்புமிகு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அவர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொழுது சமூக இடைவெளிவிட்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது







On Saturday, April 18, 2020 by Tamilnewstv in    
திருச்சி

அச்சகங்களில் பணிபுரியும்  ஊழியர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் - பிரிண்டர்ஸ் அசோசியேஷன் கோரிக்கை

திருச்சி மாவட்ட பிரின்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் பிரசாத், செயலாளர் மோகன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தமிழக அரசுக்கும், மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், சுகாதார அலுவலர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் மத்திய, மாநில அரசு அறிவித்திருந்த 21  நாள் ஊரடங்கில் நாங்களும் பங்கேற்று, தற்போது வரை அச்சங்களை திறக்காமல் உள்ளம். ஊழியர்கள் பணிக்கு வராமல் இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது மீண்டும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
 திருச்சி மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட அச்சகங்கள் உள்ளன.
 அதில் பணியாற்றும் ஊழியர்கள் வருமானமின்றி பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.. அச்சகங்களில் ஊழியர்கள் தினக்கூலியாகவும், வார கூலியாகவும் பணிபுரிந்து வருகிறார்கள். அமைப்புசாரா நல வாரியங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கியது போல் அச்சகங்களில் பணிபுரியும்  ஊழியர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் அச்சகங்களுக்கு வாங்கப்பட்ட ஆர்டர்கள் வருடாந்திர வேலைகள் மற்றும் வரும் ஆண்டிற்கான பள்ளி, கல்லூரி பிரிண்டிங் ஆர்டர்கள் என அனைத்து பணிகளும் பாதியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளது.
 அரசு சிறு குறு நிறுவனங்களுக்கு ஏப்ரல் 20ஆம் தேதி முதல் தடை நீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் குறைந்த தொழிலாளர்களைக் கொண்டு இயங்கும் அச்சகம் செயல்பட ஆவணம் செய்ய வேண்டும். அச்சகங்களில் அரசு அறிவித்தபடி முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன்  பணியாற்றுவோம் என்றனர்.


On Saturday, April 18, 2020 by Tamilnewstv in    
திருச்சி

திருச்சி அருகே மக்கள் நீதி மய்யம் சார்பில் பொதுமக்கள் கைகளை சுத்தம் செய்ய குழாய்கள் அமைப்பு.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் மக்கள் நீதி மய்யம் சார்பில், மஞ்சம்பட்டி தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்று வரும் தற்காலிக காய்கறி சந்தையில் மாவட்ட செயலாளர் மருத்துவர். ஹரிஹரன் தலைமையில் பொதுமக்கள் கைகளை சுத்தும் செய்துக்கொள்ளும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட்டு சோப்பு, தண்ணீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரோட்டரி சங்கம் இணைந்து மேற்கொண்ட இந்த பணியினை மணப்பாறை வருவாய் வட்டாட்சியர் தமிழ்கனி துவக்கி வைத்து கைகளை சோப்பு போட்டு குழாயில் சுத்தம் செய்துகொண்டார். அதனைத்தொடர்ந்து அம்மா உணவக ஊழியர்கள், நகராட்சி தூய்மை காவலர்கள், காவல்துறையினருக்கு கபசுர குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. மக்கள் நீதி மய்யம், ரோட்டரி சங்கம் ஆகியோர் செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையும் இணைந்து பொதுமக்களுக்கு நிலவேம்பு பொடியினை அளித்தனர்.

On Saturday, April 18, 2020 by Tamilnewstv in    
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர் மணல் சரிந்து சம்பவ இடத்திலேயே பலி.


 திருச்சி மாவட்டம் துறையூர் அருகே சின்னசேலம் பட்டியை சேர்ந்த தியாகராஜன் என்பவரது  விவசாய நிலத்தில்  ஆள் வைத்து பிரபு என்பவர் கடந்த சில மாதங்களாக மணல் திருட்டில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் இரவு அந்நிலத்தில்  பொன்னம்பலம் பட்டியைச் சேர்ந்த   சிங்காரவேலன் என்பவரை  கொண்டு மணல் திருடும் பணியில் பிரபு ஈடுபட்டு இருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மணல் சரிந்து அதில் சிக்கிய சிங்காரவேலன் சம்பவ இடத்திலேயே பலியானார். புதை மணலில் சிக்கி உயிரிழந்த சிங்காரவேலனின் பிரேத உடலை இருசக்கர வாகனத்தில் அமரவைத்து அவருடைய வீட்டில் போட்டுவிட்டு சென்றுள்ளனர். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் ஜம்புநாதபுரம் போலீஸாருக்கு தகவல் தர சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் உடலை கைப்பற்றி துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆட்கள் வைத்து மணல் கொள்ளையில் ஈடுபட்ட பிரபு என்பவரை கைது செய்து ஜம்புநாதபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
On Saturday, April 18, 2020 by Tamilnewstv in    

முசிறி அருகே விழுப்புரத்திற்கு நடந்து சென்ற கூலித் தொழிலாளர்களுக்கு உதவிய சமூக ஆர்வலர்கள்.
 நாமக்கல் மாவட்டம், பவுத்திரம் கிராமத்தில் இருந்து விவசாயக் கூலித் தொழிலாளர்கள் ஐந்து பேர் விழுப்புரத்திற்கு நடந்து சென்றனர்.
இவர்களை கண்ட சமூக ஆர்வலர்கள் உணவு வாங்கிக் கொடுத்து விழுப்புரத்துக்கு அழைத்து சென்று உதவிய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 விழுப்புரம் அருகே உள்ள திருக்கோயிலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லதம்பி (65) ,விவசாயக் கூலித் தொழிலாளியான இவர் மனைவி மற்றும் மகளுடன் நாமக்கல் மாவட்டம் ,பவுத்திரம் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளனர் .தற்போது வைரஸ் பாதிப்பு காரணமாக 144 தடை உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்  நல்லதம்பி வேலை வாய்ப்பின்றி சிரமப்பட்டு உள்ளார். போக்குவரத்து தடை செய்யபட்ட நிலையில் விழுப்புரம் அருகே உள்ள சொந்த ஊரான திருக்கோயிலூர் சென்றுவிட கூலித் தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து 5 பேரும் நடை பயணமாகவே விழுப்புரத்திற்கு  செல்ல தீர்மானித்து பயணத்தை தொடங்கினர். சுமார் 150 கிலோ மீட்டர் நடை பயணத்திற்கு தயாரான தொழிலாளர்கள் மனதில் இருந்த நம்பிக்கை அளவிற்கு உடலில் தெம்பில்லாமல் மிகுந்த சோர்வுடன் திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா தா.பேட்டையில் நடந்து சென்றுள்ளனர். இவர்களை பார்த்த போலீசார் அதே பகுதியில் செயல்பட்டு வரும் வாசவி கிளப் சமுக தொண்டு நிறுவணத்தின்  உதவியுடன் உணவு வாங்கிக் கொடுத்து ஆம்னி வேனை வாடகைக்கு எடுத்து விழுப்புரம் அருகே உள்ள திருக் கோவிலூர் கிராமத்தில் கொண்டு விடுவதற்கு ஏற்பாடு செய்தனர். கூலித் தொழிலாளர்கள் வாழ்வதற்கு வழி இல்லாத நிலையில் சொந்த ஊர் திரும்புவதற்கு உதவிய தா.பேட்டை போலீசார் மற்றும் வாசவி கிளப் குழுவினர்களுக்கு கூலித்தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

Friday, April 17, 2020

On Friday, April 17, 2020 by Tamilnewstv in    
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி
மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவில் பணியாற்றி வருகின்ற மருத்துவர் ரோஹைய கூறுகையில்

மேலும் ஒரு ஊரடங்கு உத்தரவை மக்கள் சந்தித்து விடக்கூடாது என்பதே எங்கள் நோக்கம்

ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை பிரதமர் மோடி நீடிப்பு செய்துள்ளார்
மே 3ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு முடிந்தபின்பு மக்கள் வெளி உலகத்திற்கு வரும்பொழுது ஊரடங்கு உத்தரவில் வீட்டிலிருந்து தங்களுடைய எதிர்ப்பு சக்தியை உணவுகள் மூலமாக மேம்படுத்திக் கொண்டால் மட்டுமே மக்கள் வெளி நடமாட்டத்திற்கு வரும் பொழுது கொரோனா நோய்தொற்று அவர்களை தாக்காமல் இருக்கும் என்பதற்காக மிகவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் மேலும் நியாயவிலைக்கடை அடையாள அட்டை இல்லாத நபர்களுக்கும் தற்போது வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு இலவசமாக ஒருவார காலத்திற்கு உரிய உணவுகள் இதனால் வரை வழங்கியுள்ளோம் மேலும் தொடர்ச்சியாக வரும் 20 ஆம் தேதி அன்று ஆயிரம் நபர்களுக்கு இலவசமாக ஒரு வார காலத்திற்கு தேவையான உணவுப்பொருட்கள் வழங்க உள்ளோம் என்றும்

தலைவர் வைகோ அவர்களின் புதல்வர் துரை வைகோ அவர்கள் தொடங்கிய இந்த குழு தமிழகமெங்கும் தொடர்ச்சியாக நாங்கள் சேவை செய்து வருகிறோம் மக்கள் இந்த ஊரடங்கு உத்தரவிற்கு பின்பு மேலும் ஒரு ஊரடங்கு உத்தரவை சந்திக்கக்கூடாது என்பதே எங்கள் நோக்கம் என்று மதிமுகமாநில மகளிர் அணி செயலாளர் மருத்துவர் ரொஹைய தெரிவித்தார்
On Friday, April 17, 2020 by Tamilnewstv in    
முசிறி அருகே தொட்டியத்தில் கொரோனோ விழிப்புணர்வு ஓவியம்

 திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியத்தில் கரோனா வைரஸ் ஓவியம் வரைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 முசிறி அருகே தொட்டியத்தில் வாணப்பட்டறை மைதானம், காவல் நிலையம் அருகே கொரோனா வைரஸ் ஓவியம் வரையப்பட்டுள்ளது. வீட்டில் தனித்திருப்போம், விழித்திருப்போம் உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸ் ஓவியம் வரைந்து தொட்டியம் காவல்துறையும், பேரூராட்சி நிர்வாகம் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது