Monday, April 27, 2020

On Monday, April 27, 2020 by Tamilnewstv in    
சமயபுரம் மக்களே உஷார் ..! குழம்பில் மிதக்கும் புழுக்கள் ..!

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு சேர்ப்பதற்காக ஊராடங்கில் பல தளர்வுகள் அரசு செய்து இருக்கிறது, மளிகை பொருட்கள் தரமானதாகவும், விலை அதிகமாக விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில்,
சமயபுரம் பகுதியில்  விற்கப்படும் மளிகை பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக பொதுமக்கள் கூறிவருகின்றனர் , தற்பொழுது சமயபுரம் கடைவீதியில் இயங்கிவரும் ஸ்ரீ கிருஷ்ணா மளிகைகடை மளிகைகடையில் தரமற்ற மசால் பொருட்கள் விநியோகம் செய்து வருகின்றனர்,  இன்று ஞயாற்று கிழமை என்பதால் அசைவ உணவு சமைப்பதற்காக  வங்கிவரப்பட்ட  மசால் தூள் பக்கெட்டை பயன்படுத்தி வைக்கப்பட்ட குழம்பில் புழுக்கள் மிதந்துள்ளது, அதை பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர், அதை பார்ப்பதற்கு முன்பே அந்த குழம்பை சிலர் சாப்பிட்டதாகவும் புழுக்கள் மித்தப்பதை பார்த்ததும் அதை வாந்தி எடுத்துவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர், பிறகு அந்த குழம்பை சாக்கடையில் ஊற்றி விட்டதாக கூறினர்,  உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் இல்லையென்றால் மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என அப்பகுதி பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
On Monday, April 27, 2020 by Tamilnewstv in    
சர்ச்சையை ஏற்படுத்திய கள்ளிக்குடி நேர்முக கொள்முதல் சந்தை

திருச்சி ஆளும் கட்சிக்கு ஆதரவளித்த எதிர்க்கட்சி சார்ந்தவர்களுக்கு தனியார் அறக்கட்டளை சார்பில் கேள்வி ? விடை கிடைக்குமா?

அதிமுக வில் முன்னாள் அமைச்சர் கு.பா. கிருஷ்ணன் கள்ளிக்குடி தலைமையில் தற்காலிகமாக சந்தை ஏற்பாடு செய்யப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு கள்ளிக்குடி சந்தையில் விமான நிலையத்திலிருந்து தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவர்களை கண்காணிக்க கள்ளிக்குடி சந்தையில் தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டிருந்தது.

 தற்போது விமான போக்குவரத்து இல்லாததால் கள்ளிக்குடி அதிமுக முன்னாள் அமைச்சர் கு.பா. கிருஷ்ணன் தலைமையில் எதிர்க்கட்சியான மதிமுக இணைந்து விவசாயிகளுக்கான நேர்முக கொள்முதல் சந்தை என அதனை பொதுமக்கள் வாங்கி செல்ல சந்தை இன்று ஆரம்பிக்கப்பட்டது.

அதனைப்பற்றி தனியார் அறக்கட்டளை சார்பாக கூறுகையில்


*தமிழக அரசின் முன்னாள் வேளாண்மைத் துறை அமைச்சர் மாண்புமிகு. கு.ப.கிருஷ்ணன் அய்யா அவர்களுக்கு வணக்கம். கொரானோவைக் காரணம் காட்டி தாங்கள் 27.04.2020 காலை 7 மணிக்கு கள்ளிக்குடி மார்க்கெட்டை சத்தமில்லாமல் துவங்குவதற்கு முன்னாள் வேளாண்மைத்துறை அமைச்சர் என்கிற முறையில் ஏற்பாடுகள் செய்ததற்கு நன்றி.*

*மழையில்லை விளைச்சலில்லை விலையில்லை. இதுதான் தமிழக விவசாயிகளின் நிலை.*




*கொரானோ நோயின் காரணமாக லாக்டவுன், ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு அரசு போடப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் விவசாயிகள் தங்களது விலை பொருளை கள்ளிக்குடி மார்க்கெட்டுக்கு கொண்டு போய் நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய முடியுமா? நுகர்வோர் போய் காய்கறிகள் வாங்கி வர போக்குவரத்து வசதி இல்லை. மீறி அவர்களுடைய வாகனத்தில் செல்வது என்றால் எவ்வளவு கூடுதலாக பெட்ரோல் செலவாகும் என்று நுகர்வோர் யாரும் அவ்வளவு தூரம் போக மாட்டார்கள். அதனால் மீண்டும் ஏதோ ஒரு வியாபாரிக்குத் தான் வியாபாரி கேட்கும் விலைக்கு விவசாயிகள் உற்பத்தி பொருளை விற்பனை செய்ய முடியும். அதனால் விவசாயிக்கு போக்குவரத்து செலவு, அலைச்சல், கூடுதல் வேலை நேரம் ஆகும். இதனால் விலை தான் கூடுமே தவிர நுகர்வோருக்கோ மற்றும் விவசாயிக்கோ எவ்வித இலாபமுமில்லை.*


*விவசாயிகளும் ஒரு மனிதர் அவருக்கும் உயிர் இருக்கிறது அவருக்கு நோய் தொற்று ஏற்படாது என்று நினைக்க வேண்டாம்.*
*எனவே விவசாயிகளிடம் அவரவர் பகுதியில் உள்ள வேளாண்மை துறை மூலமாக ஒரு நியாயமான விலையில் அரசே கொள்முதல் செய்து டாஸ்மாக் ஊழியர்களை கொண்டு ஒரே விலைக்கு நுகர்வோருக்கு விற்பனை செய்வதன் மூலம் விலைவாசியை கட்டுக்குள் வைக்கலாம்.*

*திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயப் பொருளுக்கு ஒரே மாதிரியான நியாயமான கொள்முதல் விலை விவசாயிக்கு கிடைக்கச் செய்யலாம்.*

*திருச்சி மாவட்டம் முழுவதும் ஒரே விலைக்கு நுகர்வோருக்கு விற்பனை செய்யலாம். இதனால் அவரவர் பகுதியிலேயே நுகர்வோர் வாங்கி கொள்வார்கள். விலை வித்தியாசம் இருக்காது*

*கொரானோ காரணமாக தற்போது தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளதால் குடிமகன்கள் பலர் குடியை மறந்து உள்ள சூழ்நிலையில் நிரந்தரமாக மதுவிலக்கை அமுல்படுத்தி டாஸ்மாக் ஊழியர்களைக் கொண்டு காய்கறிகள் கடையைத் திறக்கலாம்.*

*இவற்றைக் கருத்தில் கொண்டு முன்னாள் தமிழக வேளாண்மை துறை அமைச்சர் என்கிற முறையில் நமது தமிழக முதலமைச்சர் மாண்புமிகு. எடப்பாடி. கே. பழனிச்சாமி அய்யா அவர்களிடம் பரிந்துரை செய்து அமுல்படுத்த ஆவண செய்யுமாறு பணிவடன் தங்களை கேட்டுக் கொள்வது* *கே.கே.மாரிமுத்து*
*மேனேஜிங் டிரஸ்டி*
*ஷாலோம் பவுண்டேஷன்ஸ் தொண்டு நிறுவனம்.* *துறையூர், திருச்சி.*
*செல் :90805 33539 / 99940 12601.*

*எனது கருத்து தங்களுக்கு ஏற்புடையதாக இருந்தால் படித்துவிட்டு உடனே நமது தமிழக அரசின் முன்னாள் வேளாண்மை துறை அமைச்சர் மாண்புமிகு. கு.ப.கிருஷ்ணன் அவர்களின் வாட்ஸ்அப் நம்பர் 99941 45555 என்கிற நம்பருக்கு இக் கோரிக்கையை அனுப்பி வைக்கவும்.*
என தனியார் அறக்கட்டளை சார்பில் கள்ளிக்குடி நேர்முக கொள்முதல் என ஏற்பாடு செய்த ஆளுங்கட்சி எதிர்க்கட்சி ஆகியோருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது

Saturday, April 25, 2020

On Saturday, April 25, 2020 by Tamilnewstv in    
கபசுரக் குடிநீர் பருகினால் கொரோனாவைத் தடுக்கலாம்!

திருச்சி அரசு சித்த மருத்துவர் காமராஜ் விளக்கம்

திருச்சி

 சித்தர்கள் கண்டறிந்த கபசுரக் குடிநீரை தினமும் பருகினால் கரோனா நோய்த் தொற்றால் பாதிப்பிற்குள்ளாவதைத் தடுக்கலாம் என சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் கரோனா வைரஸின் பரவல் அதிகரித்துவரும் நிலையில், திருச்சி டாக்டர் அப்துல்கலாம் பொதுமக்கள் நலன் சங்கம் சார்பாக, வயலூர் ரோடு, குமரன் நகர், சிவன் கோவில் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் கபசுரக் குடிநீர், முகக் கவசம், கிருமி நாசினி உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கபசுரக் குடிநீர் குறித்து பேசிய திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் காமராஜ், கபசுரக் குடிநீர் என்பது சாதாரண மருந்து. அது பல ஆண்டுகளுக்கு முன்பாக சித்தர்கள் கூறிய அருமருந்துகளில் ஒன்று. ஓலைச்சுவடியில் எழுதிவைக்கப்பட்டிருந்த இந்த மருந்தின் மகத்துவம் புரிந்து தற்போது பல புத்தகங்களில் அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இதனை கரோனா வைரஸிலிருந்து மக்களை காக்கும் அருமருந்தாக தற்போது தமிழ்நாடு அரசும் அங்கீகரித்து, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக வழங்கி வருகிறது. நுரையீரல் தொடர்பான நோய்களான, சளி, இருமல், மூச்சுத்திணறல், ஆஸ்துமா போன்றவைக்கு இந்த மருந்து மிகவும் முக்கியமானது. இந்த கபசுரக் குடிநீரில் 15 வகையான மூலிகைகள் அடங்கியுள்ளன. டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் உதவியது போன்று, கபசுரக் குடிநீர் அனைத்து நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்ள உதவும். ஒன்று முதல் இரண்டு கிராம் கபசுரக் குடிநீர் பொடியை இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் காய்ச்சி, வடிகட்டி பெரியவர்கள் 60 மிலி, குழந்தைகள் 30 மிலி காலை வேளைகளில் பருகலாம்.கரோனா வைரஸ் பரவும் சூழ்நிலையில் சளி,காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் 8 மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த குடிநீரை பருகலாம். இதனால் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாது. குறிப்பாக சர்க்கரை நோய்க்கு இது சிறந்த மருந்தாகும். இந்தக் குடிநீர் உடலுக்கு நோய்த் தடுக்கும் மருந்தாக உள்ளது. இந்தக் குடிநீரினை ஆங்கில மருந்து உண்பவர்களும் எவ்வித தயக்கமுமின்றி எடுத்துக்கொள்ளலாம் என்றார். இந்த மருந்து வெளிச்சந்தையில் 100 கிராம் 370 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இவற்றில் பல போலியானவையாக உள்ளதால் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக அளிக்கப்படும் மருந்தினை பயன்படுத்தலாம் எனக் கூறினார்.கபசுர குடிநீர் பருகினால் கொரோனாவைத் தடுக்கலாம்இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட அரசு சித்த மருத்துவர்கள், அப்துல் கலாம் பொதுமக்கள் நலன் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட அரசு சித்த மருத்துவர்கள் தலைமை சித்த மருத்துவர் காமராஜ்  டாக்டர்.தமிழ்க்கனி, டாக்டர்.மெர்லின்  டோரோ,  டாக்டர்.இசையமுது  அப்துல் கலாம் பொது நலச் சங்கத் தலைவர் சச்சிதானந்தம்,செயலர்.சப்தரிஷி முருகானந்தம்,ஆலோசகர் சுந்தரம் செட்டி யார் ,பொருளாளர்.ராஜேந்திரன் பொதுமக்கள் நலன் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
   
On Saturday, April 25, 2020 by Tamilnewstv in    

திருச்சி மாநகராட்சி சார்பாக தூய்மை பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் சமூக இடைவெளியை பின்பற்றி வழங்கப்பட்டது.

திருச்சி தமிழக அரசு ஆரோக்கியம் திட்டத்தின் கீழ்  தொற்று பரவாமல் இருக்க  எதிர்ப்பு சக்தியை தூண்டும் வகையில்  கபசுர குடிநீர் தமிழக அரசால் வலியுறுத்தப்பட்டு  பொதுமக்களுக்கு  பணியாளர்களுக்கு  வழங்கப்பட்டு வருகிறது 

அதனடிப்படையில்  இன்று திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் கபசுர மூலிகை பாக்கெட் வழங்கப்பட்டது திருச்சி மாநகராட்சியில் கரோனா வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தியாக சித்தாவில் பயன்படுத்தப்படும் கபசுர மூலிகை பாக்கெட்டுகளை மாநகராட்சி ஆனையர் சிவசுப்பிரமணியன,பொன்மலை கோட்டம் உதவி ஆணையர் தயாநிதி, திருச்சி பீமநகர் சித்த மருத்துவமனை மருத்துவர் ரத்தினம், ஆகியோர் கலந்துகொண்டு மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு கபசுர மூலீகை பாக்கெட் வழங்கினார் இதில் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு வாங்கி பயனடைந்தனர்
On Saturday, April 25, 2020 by Tamilnewstv in    
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் ஆதரவாளர்கள் மீது வழக்கா?

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் சார்பில் ஊரடங்கால் பாதித்துள்ள ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி உறையூரில் இன்று நடைபெற்றது. 

உறையூர் வாத்துக்காரத்  தெருவில் உள்ள அந்தோணியார் தேவாலயத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சுமார் 200 பேருக்கு அரிசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.
காங்கிரஸ் கட்சியின் மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் பெட்ரிக் ராஜ்குமார் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் சந்திரன், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரின் நேர்முக உதவியாளர் முத்துகிருஷ்ணன், கலைப் பிரிவு துணைத் தலைவர் பெஞ்சமின் இளங்கோ, அந்தோணியார் தேவாலய பங்குத் தந்தை தாமஸ் ஞானதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

முன்னதாக இந்த பொருட்களை பெற சுமார் 200க்கும் மேற்பட்ட மக்கள் தேவாலயத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஒருவருக்கொருவர் நெருக்கிக் கொண்டும், முண்டியடித்துக்கொண்டும் வரிசையில் நின்றனர். ஏற்கனவே அரசு அலுவலர்கள் முன்னிலையில் தான் தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் நிவாரண பொருட்களை மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் எந்த அரசு அலுவலர்களும் கலந்து கொள்ளவில்லை. அதேபோல் கூட்டம் கூடியிருக்கும் தகவல் கிடைத்து உறையூர் காவல்துறையினர் அங்கு விரைந்து வந்து கூட்டத்தை கட்டுப்படுத்த முயற்சித்தனர். எனினும் பொது மக்கள் பலர் முக கவசம் கூட  அணியாமலும், சமூக இடைவெளியை பின் பற்றாமலும் வரிசையில் நின்று பொருட்களை பெற்று சென்றதால் பரபரப்பை ஏற்படுத்தியது
On Saturday, April 25, 2020 by Tamilnewstv in    
கருப்புகொடியேற்றும்_போராட்டம்!
அனைத்து விவசாய கடனை ரத்து செய்தும்,  கொரோனா நிவாரண தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தியும்.. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக மாநிலம் முழுவதும் இன்று (25-04-2020) கருப்புகொடி  ஏற்றும் போராட்டம்...

 திருச்சி, திருவெறும்பூரில் 
விவசாய சங்க மாநில து.தலைவர் முகமதலி மற்றும் விவசாய சங்க திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் K.C. பாண்டியன் ஆகியோரது வீட்டில் கருப்பு கொடியேற்றி அரசிற்கு எதிப்பு தெரிவிக்கப்பட்டது.

 விவசாயிகளுக்கு ஆதரவாக வீட்டிலிருந்து கருப்புகொடி போராட்டம்...

விவசாயிகளுக்கும் கொரானா பாதிப்பு நிவாரணமாக ரூ.10,000/- நிதி வழங்கிடு

கறுப்புக் கொடியேந்தி போராட்டம்

சிறு, குறு, நடுத்தர விவசாயிகள் அனைவருக்கும் கொரானா பாதிப்பு நிவாரணமாக ரூ10,000 வழங்கிடுக

கொரானா நிவாரணப் பணிகளில் மத்திய மாநில அரசுகளின் அலட்சிய போக்கைக் கைவிடுக

அனைத்து விவசாயிகளின் கடன் தவனை வசூலையும்  ஒரு வருடத்திற்கு தள்ளிவைத்திடுக  

ஏழைக்குடும்பங்கள் அனைவருக்கும் ரூ.5,000/- வழங்கிட வேண்டும்
 என கோரிக்கைகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

இந்தப் போராட்டம் தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க AIKS சார்பில் கறுப்புக் கொடி ஏந்தி வீட்டிலிருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
On Saturday, April 25, 2020 by Tamilnewstv in    
திருச்சி மாவட்டம் துறையூர் பெருமாள் மலை அடிவாரத்தில் குரங்குகளுக்கு உணவளிக்கும் சமூக ஆர்வலர்கள்.


    இந்தியா முழுவதும் கொரோனோ வைரஸ் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது இதனால் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பெருமாள்மலை பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில் மூடப்பட்டதால் பக்தர்கள் வருகை ஏதும் இல்லாததால் குரங்குகள் உணவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் மலையில் இருந்து கீழே இறங்கி வந்த  300க்கும் மேற்பட்ட குரங்குகள்  உணவுக்காக குடியிருப்பு பகுதிகளை நோக்கி படை எடுத்து வந்துள்ளன. 

இந்நிலையைக் கண்ட துறையூர் பகுதியைச் சேர்ந்த சில சமூக ஆர்வலர்கள் தற்போது குரங்குகளுக்கு தினமும் உணவு அளித்து வருகின்றனர். வாழைப்பழம் உள்ளிட்ட பல வகைகள் மிக்ஸர் பொறி மற்றும் பல உணவுப் பொருட்களை தினமும் சமூக ஆர்வலர்கள் குரங்குகளுக்கு வழங்கி வருகின்றனர் அதோடு சேர்த்து   தண்ணீரின்றி தவிக்கும் குரங்களுக்கு தண்ணீர் எடுத்துச் சென்று அங்கு உள்ள குரங்குகளுக்கு வழங்குகின்றனர்.
On Saturday, April 25, 2020 by Tamilnewstv in    


*தொடர் மக்கள் சேவையில் அரசு சித்த மருத்துவர்கள்* 


  • தமிழ்நாடு அரசின் "ஆரோக்கியம்" திட்டத்தின் கீழ் கபசுர குடிநீர்  இன்று மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மருத்துவர்.சா.காமராஜ் அவர்கள் தலைமையில் திருச்சி , வயலூர் சாலை, குமரன் நகர்,சிவன் கோவில்  பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு வழங்கபட்டது.இதில் மருத்துவர்கள் டாக்டர்.தமிழ்க்கனி, டாக்டர்.மெர்லின்  டோரோ,  டாக்டர்.இசையமுது  ஆகியோர் பங்கு பெற்றனர். நிகழ்வில் டாக்டர் அப்துல் கலாம் பொது நலச் சங்கத் தலைவர் சச்சிதானந்தம்,செயலர்.சப்தரிஷி முருகானந்தம்,ஆலோசகர் சுந்தரம் செட்டி யார் ,பொருளாளர்.ராஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.




இன்று மாலை திருச்சி ,கீழபுலிவார் ரோடு ,ஆனந்தா அவென்யூ பூங்காவில் இதே போன்று கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Friday, April 24, 2020

On Friday, April 24, 2020 by Tamilnewstv in    
திருச்சி 

மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - 


திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் நடவடிக்கை

கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர் சைமன் உடலை புதைக்க சென்னையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் பலர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இதைத் தொடர்ந்து மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க காவல் துறையினருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிய மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன்அதன்படி, மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த திருச்சி சரகத்திற்கு உட்பட்ட ஐந்து மாவட்டங்களில் உள்ள 19 காவல் உட்கோட்டங்களில் அந்தந்த காவல் துணைக் கண்காணிப்பாளர்களை 'குழு நிர்வாகியாக' நியமித்து மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த துணைப் பணியாளர்கள் அடங்கிய ஒரு ’வாட்ஸ் அப்’ குழு தொடங்கப்பட்டுள்ளது. இதில் அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளரும் ஒரு உறுப்பினராவர்.தூய்மைப் பணியாளர்களுக்கென 66 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களில் அந்தந்த ஆய்வாளர்களைக் 'குழு நிர்வாகியாக' நியமித்து வாட்ஸ் அப் குழு தொடங்கப்பட்டுள்ளது.மேற்கண்டவர்களுக்கு ஏதாவது பிரச்னைகள் இருந்தால் இந்தக் குழுவில் உள்ள காவல் அலுவலர்கள் மூலம் பிரச்னைகள் உடனுக்குடன் தீர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த துணை பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் வசிக்கும் இடங்களை டிஜிட்டல் வரைபடம் மூலம் ஒன்றிணைத்து அவர்களை இ.பீட் (E.Beat) முறையின் மூலம் காவலர்களை கொண்டு பாதுகாப்பு அளிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.