Saturday, May 16, 2020

On Saturday, May 16, 2020 by Tamilnewstv in    
மணப்பாறையில்
தூய்மைப் பணியாளர்களை ஊக்குவித்து பொருட்கள் வழங்கிய எம்.பி.ஜோதிமணி.
தூய்மைப் பணியாளர்களுடன் அமர்ந்து சிறிது நேரம் பேசினார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேருந்து நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் சமூக  நிற்க வைக்கப்பட்டு பின்னர் பொருட்களை கரூர் எம்.பி.ஜோதிமணி வழங்கினார். முன்னதாக தூய்மைப் பணியாளர்களின் பணி குறித்து பெருமையடைந்த ஜோதிமணி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ஊக்குவித்தார்.


மேலும் பெண் தூய்மைப் பணியாளர்களுடன் அமர்ந்து அவர்களின் பணிகால அனுபவங்கள் குறித்தும் கேட்டறிந்து பேசினார்.
On Saturday, May 16, 2020 by Tamilnewstv in    
திருச்சி மே 16

 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார்



கொரோனா தொற்று பாதிப்பை அடுத்து தமிழகத்தில் பல்வேறு கட்சியினரும் தனியார் அமைப்பினரும் உணவு மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகின்றனர். தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகத்தில் காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று வேளைகளிலும் இலவச உணவு வழங்கி வருகின்றனர். 



இதன் ஒரு பகுதியாக திருச்சியில்  வாழ்வாதாரத்தை இழந்து இருக்கும்  ஸ்ரீரங்கம் பகுதியை சார்ந்த பொதுமக்களுக்கு அப்பகுதியில் உள்ள அம்மா மண்டப சாலையில், மற்றும் 
ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை அருகில் உள்ள அம்மா உணவகங்களில் மூன்று வேளைகளும் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உணவுகளில் இன்று தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்,  
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான வளர்மதி ஆய்வு மேற்கொண்டார்.

அம்மா உணவகத்தில்  உள்ள சமையல் கூடம் மற்றும் பொதுமக்கள் அருந்தும் குடிநீர் ஆகியவை ஆய்வு செய்து அங்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுகளையும் அவர் சாப்பிட்டார். மேலும் பொதுமக்களிடம் அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவின் தரத்தை குறித்தும் கேட்டறிந்தார். மேலும் இவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களிடம் சிறந்த முறையில் உரிய நேரத்தில்  தரமான உணவுகளை வழங்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.
 அமைச்சர் ஆய்வு செய்த போது‌ ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் டைமண்டு திருப்பதி பணயபுரம் கர்ணன் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.


On Saturday, May 16, 2020 by Tamilnewstv in    
மணப்பாறை அருகே
குளத்தில் நீரிழ் மூழ்கி 9 வயது இரட்டை சகோதரிகள் உயிரிழப்பு.
கிராமமே சோகத்தில் மூழ்கியது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வேம்பனூர் அருகே உள்ள சங்கம்பட்டியைச் சேர்ந்தவர் வீரமலை. இவரது மனைவி கண்ணம்மாள். இந்த தம்பதியினருக்கு 4 மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். கடைசியாக உள்ள ராமுபிரியா, லெட்சுமி பிரியா என்ற 9 வயது நிரம்பிய இரண்டு மகள்களும் இரட்டைப் பிறவிகள். வெள்ளபிச்சம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 4 ம் வகுப்பு படித்து வந்த இரட்டை சகோதரிகள்  இன்று அதே பகுதியில் உள்ள கும்மடிக்குளத்தில் துணி துவைத்து விட்டு குளிக்கச் சென்ற நிலையில் இரண்டு சிறுமிகளும் நீரில் மூழ்கினர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இரண்டு சிறுமிகளையும் மீட்டு மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிறுமிகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த வளநாடு போலீசார் சிறுமிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரட்டை சகோதரிகள் உயிரிழந்த சம்பவம் அந்த கிராம மக்கள் கடும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
On Saturday, May 16, 2020 by Tamilnewstv in    
திருச்சி மே 15

திருச்சியில் 
அரிசி மளிகை மற்றும் காய்கறிகள் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்குவதற்கு முன்பு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களை வரிசையில் அமரச் செய்து சமூக இடைவெளியை பின்பற்ற வலியுறுத்தி அவர்களுக்கு ஆலோசனை வழங்கிய  பின்னர் பொருட்களை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பொதுமக்களுக்கு வழங்கினார். 

கொரோனா  தாக்குதல் காரணமாக 
தமிழகத்திலும் 
ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏழை - எளிய பொதுமக்கள்  உணவுக்கு  கஷ்டப்பட்ட வருகின்றனர். 

தமிழக அரசு சார்பிலும், பல்வேறு அரசியல் கட்சியினரும், தன்னார்வலர்களும்  நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்த வகையில் திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 45 நாட்களுக்கு மேலாக வார்டு வாரியாக 
நிவாரண பொருட்களை தொடர்ந்து வழங்கி வருகிறார்.
இன்று மலைக்கேட்டை  பகுதிக்குட்பட்ட 13வார்டு பொதுமக்களுக்கு அப்பகுதியில் 
உள்ள லூர்துசாமி பிள்ளை பூங்காவில் 
அரிசி, மளிகை மற்றும் காய்கறிகள் அடங்கிய 
தொகுப்பை 250 குடும்பத்தினருக்கு  வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள்  சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு நாற்காலி போட்டு அமர வைக்கப்பட்டனர்.
மேலும் முக கவசம் அணிந்து பொருட்களைப் வாங்கி சென்றனர்.
முன்னதாக அங்கு வந்த அமைச்சர் பொதுமக்களிடம் தனி மனித இடைவெளி மற்றும் முக கவசம் குறித்து கூறினார்.


Friday, May 15, 2020

On Friday, May 15, 2020 by Tamilnewstv in    
முசிறி அருகே  குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி

              

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கிராமம் அமைந்துள்ளது . இந்த கிராமத்தில் சுமார் 3000 குடும்பத்தினர் பல்வேறு ஊர்களில் குறி சொல்லி ஜோதிடம் சொல்லும் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

                
 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் குறி சொல்லி வாழ்க்கையை நடத்தும் காட்டு நாயக்கர் இன மக்கள் வெளியில் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதித்தது .உணவுக்கு வழியில்லாமல் குழந்தைகளுடன் இம்மக்கள் வாடினர்.
இது குறித்து அறிந்த தமிழக  முன்னாள் முதன்மை செயலாளர் ராம் மோகன் ராவ் அவர்களால் நடத்தப்படும் ஆர் எம் ஆர் பாசறை மூலமாக குடுகுடுப்பை அடித்து குறி சொல்லும் இந்த மக்களுக்கு 5 கிலோ அரிசி நிவாரண பொருளாக வழங்கினார் .நிவாரண பொருட்களை பாசறை நிர்வாகிகள் அரங்கூர் கிராமத்திற்கு வந்து நேரில் பாதிக்கப்பட்ட மக்களிடம் வழங்கினர். வாழ்வாதாரத்திற்கு சிரமப்பட்டு வந்த தங்களுக்கு நிவாரணப் பொருள் வழங்கியதற்கு குறிசொல்லும் மக்கள் நன்றி தெரிவித்து வாழ்த்தினர் .
On Friday, May 15, 2020 by Tamilnewstv in ,    
ரூ.20 லட்சம் கோடி உதவியில் 85 கோடி விவசாயிகளுக்கு எந்த உதவியும் (பலனும்) கிடையாது விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு அறிவிப்பு
                

     இந்திய மக்கள்தொகையில் சுமார் 130 கோடியில் விவசாயிகள் 85 கோடி பேர் உள்ளனர். இவர்கள் கொரோனா ஊராடங்கள் பாதிக்கப்பட்டது கொஞ்சம், நஞ்சமில்ல, வேலை இல்லை, கூலி, சம்பளம் கிடைக்க இல்லை என்பது நிதர்சன உண்மை. அவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் உதவிட வேண்டும் என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது தான்.
     ஆனால், கடன் வாங்கி சாகுபடி செய்த வாழைவிவசாயிகள் வாழைதார்களை வெளியே கொண்டுசென்று விற்பனை செய்ய முடியவில்லை. ஏக்கருக்கு 1 லட்சம் முதல் 1.5 இலட்சம் வரை கடன் வாங்கி செலவு செய்து உள்ளார்கள். அத்துடன் சூறாவளி காற்றினால் வாழை மரம் எல்லாம் முறிந்து விழுந்துவிட்டது.
     வெற்றிலை பயிர் விவசாயம் செய்த விவசாயிகள் ஏக்கருக்கு ரூ. 2 லட்சம் முதல் 3 லட்சம் வரை செலவு செய்து வெற்றிலை பறித்து விற்பனை செய்ய முடியாமல் பெரும் நஷ்டத்தில் உள்ளார்கள். இதனால் வெற்றிலை எல்லாம் வயலிலேயே காய்ந்துவிட்டது.
      பூக்கள் வாங்க ஆட்கள் இல்லாததாலும், விற்பனை கடைகள் இல்லாததாலும், பூக்களை செடியில் பறிக்க ஆட்கள் இல்லாததாலும் பூக்கள் செடியிலேயே காய்ந்து உதிர்ந்து கொட்டிவிட்டது.
      தர்பூசணி, முலாம், திராட்சை பழங்களை கொண்டு சென்று விற்க முடியாததால் வயலிலேயே அழுகி அழிந்துவிட்டது.
      எலுமிச்சை பழம் விற்க வெளியே கொண்டு செல்ல முடியாமல் மரத்திலேயே பழுத்து கொட்டி அழுவிவிட்டது.
      நெல் சாகுபடி செய்த விவசாயிகளின் நிலையோ மிக மிக பரிதாபம், வெளி சந்தையில் நெல்லை விற்க முடியாததால், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு சென்று நெல்லை விற்றத்தில் 40 கிலோ நெல் மூட்டை ஒன்றிக்கு ரூ.60 முதல் 80 வரை கமிஷன் எடுத்ததால் தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் நெல்லுக்கு கொடுத்த கமிஷன்(லஞ்சம்) தொகை சுமார் ரூ.281 கோடி, விவசாயிகள் வாழ்வதா..? சாவதா..?  DPC - நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கொட்டி வைத்த இலட்ச கணக்கான நெல் மூட்டைகள் மழை நீரில் நனைத்து அழிந்துவிட்டது.
     முதலீடு செய்த பணம்  எல்லாம் கைக்கு கிடைக்காமல் அழிந்துவிட்டது.
     இதனால் மத்திய அரசு ரூ.20 இலட்சம் கோடிகள் உதவித்தொகையில் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.20,000/- கொடுக்கும் என்று எதிர்பாத்தோம், விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்வார்கள் என்று எதிர்பார்த்து ஏமாந்துவிட்டோம்.
     கொரோனா பாதித்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் விவசாயிகள் 63 லட்சம் பேர் வங்கிகளுக்கு சென்று ரூ.86,600 கோடிகள் கடன் பெற்றார்கள் என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்களே நியாயமா..?
     ஜூஸ் கரும்பு உற்பத்தி செய்த விவசாயிகள் ஜூஸ் கடைகள் இல்லாததால் விற்பனை செய்ய முடியாமல் கரும்பெல்லாம் வயலிலேயே காய்ந்துவிட்டது. விசேஷங்கள் இல்லாததால் வாழை இலைகள் கிழிந்தும், காய்ந்ததும் விட்டது. வெள்ளரிக்காய் பறித்து விற்க முடியாமல் அழிந்து வீணாகி விட்டது.
     தொழில்சாலைகள் இயங்காததால் மரவள்ளி(குச்சிவள்ளி) கிழங்குகள் வயளிலேயே அழிந்துவிட்டது.
     மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் அவர்களின் அறிவிப்பு விவசாயிகளுக்கு பயன் இல்லாததால், மாண்புமிகு. உச்ச நீதிமன்றத்திலும், மாண்புமிகு உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்துள்ளத்தில் நஷ்டஈடும், கொரோனா தொற்றில் அழிவதைவிட, அதிகமாக விவசாயிகள் கடனில் அழிந்துவிடுவார்கள்,போராட அனுமதி கொடுங்கள் என்று நீதி மன்றத்தில் நீதி கேட்க உள்ளோம் என்று இவ்வாறு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர்  அய்யாக்கண்ணு அறிவித்துள்ளார்.
On Friday, May 15, 2020 by Tamilnewstv in    
 பல நூறு கோடிகளுக்கு காசோலை  நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன?


 தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களிலும் பொதுமக்களை ஏமாற்றி வந்த நிறுவனம்தான் எல்பின் இந்த நிறுவனம் தமிழக மக்களை தொடர்ச்சியாக பல்வேறு கவர்ச்சி திட்டங்களை அறிவித்து தமிழகம் முழுவதும் மக்களை ஏமாற்றி திருச்சி, தஞ்சை, மதுரை போன்று பல்வேறு மாவட்டங்களிலும் பல்வேறு ஊர்களிலும் புகார்கள் மற்றும் பல வழக்குகள் (பணம் ஏமாற்றியதற்கு பல கோடி ரூபாய்  பொதுமக்களுக்கு தரவேண்டும் என பணமோசடி வழக்கு) இதுநாள் வரை நிலுவையில் உள்ளது.


 இந்த போலி நிறுவனத்தின் இயக்குனர்களான ராஜா என்கிற அழகர்சாமி பொதுச் செயலாளர் எஸ்ஆர்கே ரமேஷ் என்கிற ரமேஷ்குமார் சில நாட்களுக்கு முன்பு தங்கள் முறைகேடான முறையில் சம்பாதிப்பதை மறைப்பதற்காக மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து தமிழக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதியாக ரூ.50 லட்ச ரூபாய் கொடுத்தனர். 

  தற்போது இவர்களின் புதிய திட்டம், இவர்கள் ஆரம்பிக்கும் (?) அனைத்து விதமான தொழில்களிலும்  2000 பேர் மட்டும் ரூ.36,000கட்டி உறுப்பினராக சேர வேண்டும் (Share Holder) அவர்களுக்கு இவர்களின் நிறுவனத்தில் கிடைக்கும் லாபத்தில் வாழ்நாள் ( யார் வாழ்நாள் முழுவதும் என தெரியவில்லை) முழுவதும் ஷேர் வழங்கப்படும் எனக்கூறி பணம் வசூல் செய்து வருகின்றனர். இதில் முதலில் பணம் தங்க மோதிரம் போன்ற பரிசுகள் வழங்க உள்ளதாக எல்பின் இயக்குனர் ராஜா அறிவித்துள்ளார்.

   மேலும் இவர்கள் 5 லட்சம் கொடுத்தால் மூன்று வருடம் கழித்து 15லட்சம் ரூபாய், 10 லட்சம் கட்டினால் 30 லட்சம் ரூபாய் என்ற ஸிகீமில் வாங்கிய பல நூறு கோடிகளுக்கு காசோலைகள் இவர்களுடைய வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துள்ளனர் இந்த மூன்று வருட காலம் முடிவதற்கு சில நாட்கள் உள்ளன . இவர்கள் கொடுத்த காசோலைகள் தேதிகள் நெருங்கி வருகின்றன. பல நூறு கோடிகளுக்கு நிறுவனத்தில் பணம் உள்ளதா என்று கேட்டால் நகைப்பாக தான் உள்ளது. அத்தனை கோடிகளுக்கு காசோலை  இவர்கள் கம்பெனி விதிமுறைப்படி கையில் கொடுத்து தான் பணத்தை வாங்க வேண்டும். வங்கியிலும் போட இயலாது எல்பின் கம்பெனி பொருளாதாரம் விழி பிதுங்கி உள்ளநிலையில் பல நபர்கள் இவர்களை விட்டு புத்திசாலித்தனமாக பணத்தை வசூல் செய்து கொண்டு வெளியேறிவிட்டனர்.

 ஆனால் இவர்கள் தருவார்கள் என்று பலர் காசோலைகளை பத்திரமாக கையில் வைத்துக்கொண்டு காசோலைகள் காலம் முடிவதற்கு முன் இவர்கள் பணத்தை கொடுத்து விடுவார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். பல நூறு கோடிகளுக்கு இவர்களிடம் எங்கு பணம் உள்ளது, என்று தெரியவில்லை. பல நூறு கோடிகள் இவர்களால் திருப்பி அவர்களுக்கு அளிக்க முடியுமா என்பது  கேள்விக்குறியாக உள்ளது.

  இந்நிலையில் பணத்தை கட்டியவர்கள் பணத்தை திரும்ப பெறுவார்களா என்று கேள்வி எழுகிறது. பணத்தை கேட்க வந்தால் ராஜா என்கிற அழகர்சாமி எஸ் ஆர் கே என்கிற ரமேஷ் குமார் பணத்தை பெற வரும் நபர்களை சந்திப்பது இல்லையாம். பணத்தை முதலீடு செய்ய வந்தால் உடனடியாக வந்து அவர்களை சந்தித்து மூளைச்சலவை செய்து பணத்தை பெற்றுக் கொள்கின்றனர் என அவருடைய வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது. 

  இப்படி இந்தச் சூழ்நிலையில் எவருடைய பணத்தையோ வாங்கி இவர்கள் தானம் செய்து வருகிறோம் என்பது மிகவும் நகைச்சுவையாக உள்ளது. இதில்  நிறுவனத் தலைவர் ராஜா என்னும் அழகர்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஊரடங்கால்  பாதிக்கப்பட்ட 2 லட்சம் பேருக்கு நலத் திட்டங்கள்  வழங்க உள்ளனராம்.

 முதிர்வு காலம் முடிந்துவிட்டது பணம் கொடுங்கள் என்று காசோலை உடன் வந்து கேட்டால் பிறந்தநாளுக்கு ஏழைகளுக்கு செலவு செய்து விட்டோம் என கூறுவதற்காக இந்த நடிப்பா  என தெரியவில்லை?




 ஏதோ ஒரு பழமொழி சொல்வதுபோல இதெல்லாம் எத்தனை நாளைக்கு என்பது விரைவில் தெரிந்துவிடும்.



 இந்நிலையில் இவர்கள் தமிழகம் முழுவதும் பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அதேபோன்று பல நூறு கோடிகள் செக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் டாக்டர் பட்டம் விலைக்கு வாங்கிக் கொண்டு தங்கள் பெயருக்கு முன்னால் டாக்டர் டாக்டர் என்று கூறுவது சட்டத்திற்குப் புறம்பாகவும் சட்டத்தை ஏமாற்றுவதாக உள்ளது. இதற்கும் கூடிய விரைவில் முடிவு தெரியும் என எதிர்பார்க்கிறோம்.



 மேலும் மதுரை மற்றும் தஞ்சையில் அதிகாரிகளை இவர்கள் யாரையும் விலைக்கு வாங்க முடியவில்லை, அதனால் அங்கு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

 அதை போல் அனைத்து மாவட்டங்களிலும் நேர்மையான அதிகாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.  விரைவில் இவர்கள் மீது அரசு சார்பில் சட்ட பூர்வமான நடவடிக்கை எடுத்து பொது மக்கள் இவர்களிடம் ஏமாறாமல் இருக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு உள்ளது.

(மக்களை மூளைச்சலவை செய்து ஏமாற்றுவது எப்படி)


(மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு RMWC  ஓரியண்ட் ஹைபர் மார்க்கெட் பார்ட்னர்கள் பாதுஷா மற்றும் இரண்டு நபர்கள் டின் நம்பர் 0002927268 அடுத்தது  வராக மணி பார்ட்னர்கள் ரமேஷ்குமார் விஸ்வநாதன் செட்டியார் டின்  நம்பர் 0003161010 & 0006833411 இதுநாள்வரை  பல கோடிகள் சுருட்டியது போதவில்லை என்று அடுத்தது தற்போது 2017 எல்ஃபின் பார்ட்னர்கள் ரமேஷ்குமார்  & பாதுஷா    டின் நம்பர் 0003161010 & 0002927268 அடுத்தது 2019 ஸ்பேரோ  குளோபல் டிரேடிங் பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு ஜிஎஸ்டி பின் நம்பர் 33ADSFS9169BIZN
 என்ற நிறுவனம் நடத்தி மக்களை தற்போது வரை ஏமாற்றி வருகின்றனர்)

 இதுநாள் வரை நிறுவனத்தின் மீது திருச்சி
( 1 /19) தஞ்சை (1/20), புதுகை, கோவை, மதுரை போன்ற தமிழகத்தில் மட்டுமின்றி பல மாவட்டங்களிலும் பல ஊர்களிலும் மாவட்ட குற்ற பிரிவில் பண மோசடி வழக்குகள் மற்றும் பல்வேறு வழக்குகள் மற்றும் புகார்கள் இன்று வரை நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


மேலும் பல உண்மை தகவல்கள் மற்றும் ஆதாரங்களுடன் விரைவில் சந்திப்போம்.......

 பொது மக்களை பாதுகாப்போம்........

Thursday, May 14, 2020

On Thursday, May 14, 2020 by Tamilnewstv in    
திருச்சிராப்பள்ளி வனக்கோட்டம் திருச்சிராப்பள்ளி வனச்சரகம் கண்ணனூர் 

பிரிவுக்கு உட்பட்ட வீரமச்சான்பட்டி காப்புகாட்டில் - துறையூர் கண்ணனூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் வயது-37. என்பவர் 4 கண்ணிகளுடன் தனது இருசக்கர வாகனத்தில் வீரமச்சான்பட்டி காப்புகாட்டில் அத்துமீறி உள்ளே நுழைந்து வேட்டையாட முயற்சித்தபோது அங்கு ரோந்து பணியிலிருந்த வனக்காப்பாளர் ஜான் ஜோசப் மற்றும் வனக்காவலர் கலைப்பிரியா ஆகியோர் கைது செய்து விசாரணை செய்ததில் மேற்படி மணிகண்டன் முயல் வேட்டைக்காக வந்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் வன உயிரினப்பாதுகாப்பு சட்டப்பரிவுகளின் கீழ் வன உயிரினப் குற்ற வழக்கு பதிவு செய்து. மாவட்ட வன அலுவலர்  சுஜாதா  உத்தரவுபடி ரூ.15000 இனக்கட்டணம் அபராதமாக விதித்து விடுவிக்கப்பட்டார்.
திருச்சிராப்பள்ளி வனக்கோட்டம் திருச்சிராப்பள்ளி வனச்சரகம் கண்ணனூர் பிரிவுக்கு உட்பட்ட மாவிலிப்பட்டி காப்புகாட்டின் எல்லைக்குட்பட்ட பகுதியில் - ஏவ10ர் ஐய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்த 1.கார்த்திக். 2.சந்துரு 3. சந்தோஷ் 4.குணசேகர் 5.பாலமுருகன் 6.கலைக்செல்வன் மற்றும் 7.பிரகாஷ் ஆகியோர்கள் கடந்த மாதம் முயல் வேட்டையாடியதை வுஐமு வுழுமு யுPP-ல் பதிவேற்றம் செய்துள்ளதை அறிந்த திருச்சி வனப்பாதுகாப்பு படையினர் கைது செய்து விசாரணை செய்ததில் மேற்படி மணிகண்டன் முயல் வேட்டையாடியதை ஒப்புக்கொண்டார். பின்னர் வன உயிரினப்பாதுகாப்பு சட்டப்பரிவுகளின் கீழ் வன உயிரினப் குற்ற வழக்கு பதிவு செய்து. மாவட்ட வன அலுவலர்  சுஜாதா  உத்தரவுபடி ரூ.20000 இனக்கட்டணம் அபராதமாக விதித்து விடுவிக்கப்பட்டாhர். 
இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 7 நபர்கள் மற்றும் அவர்களை ஜாமீனில் எடுக்கவந்த ஊர் தலைவர் மற்றும் பொது மக்களுக்கு வன விலங்குகளை வேட்டையாடுதல் குற்றம் எனவும் விழிப்புணர்பு ஏற்படுத்தியும் மறைந்த வனக்காவலர் சந்துரு நினைவாக திருச்சி மாவட்ட வனக்கோட்டம் அலுவலகம் முன்பு மரக்கன்று நடவு செய்த பின்னர் அவர்கள் பிரிந்து சென்றனர்.
On Thursday, May 14, 2020 by Tamilnewstv in    
திருச்சி மே 13

காவிரி நீர் மேலாண்மை வாரியத்தின் அதிகாரம் பறிக்கப்பட்டு மத்திய நீர்வளத் துறையின் கீழ் ஒரு பிரிவாக மாற்றியதை கண்டித்தும்,  மாநில மின்வாரியங்களையும், உரிமைகளையும் பறித்து தமிகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம்

                  

விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், மற்றும் பொதுநல அமைப்புகள் மனு அளித்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்கள் அதிகாரம் , தமிழக விவசாய சங்கம் உட்பட 13 அமைப்புக்கள்  இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

 அம்மனுவில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என கோரி வந்தனர். தமிழக அரசு இதனை ஏற்றுது. இந்நிலையில் இதற்கு பெரும் கேடு விளைவிக்கும் விதமாக காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வளத் துறையின் கீழ் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது இந்த அமைப்பை நீர்வளத்துறை ஒரு பிரிவாக மாற்றி இருப்பதே வன்மையாக கண்டித்தும், மேதும், மத்திய மின்சார சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்த மின் உற்பத்தி  வினியோகம், விலை நிர்ணயம் அனைத்தையும் தனியார் மயமாக்குவதோடு, விவசாயிகள், நெசவாளர்கள், வீட்டு உபயோக ஆகியவற்றிற்கு வழங்கப்படும் சலுகைகள் இலவச மின்சாரம் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கம் கொண்டதாக இருக்கிறது மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், தமிழக அரசு இதனை முற்றாக நிராகரிக்க 
வேண்டுமென தெரிவித்துள்ளனர்.
இம்மனுவை பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வடிவேல்பிரபு அரசுக்கு கோரிக்கை மனுக்கள் குறித்து அறிவுறுத்தப்படும் என தெரிவித்தார்.