Tuesday, May 26, 2020
On Tuesday, May 26, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி
காணொலிக் காட்சி மூலம் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறியும் பணியில் திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் ஈடுபட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் பாதிக்கப்பட்ட முதியவர்கள், திருநங்கைகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்ட செவிலியர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்புக்காக திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
குறிப்பாக வாட்ஸ்அப், இணையதளம் உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் வழிகளில் அவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், ஊரடங்கு காரணமாக திருச்சி சரக காவல் எல்லைக்கு உட்பட்ட திருச்சி மாவட்டம், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கரூர் ஆகிய ஐந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை கண்காணிப்பாளர்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்களிடமிருந்து மனுக்கள் வரப் பெற்றது.ஊரடங்கு காரணமாக பொதுமக்களால் திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணனை நேரில் சந்தித்து தங்களது குறைகளைத் தெரிவிக்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.
ஐந்து மாவட்ட மக்களின் சிரமத்தைப் போக்கும் வகையில், வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பகல் 12 மணி முதல் 1 மணி வரை ‘கூகுள் மீட்’ செயலி மூலம் காணொலிக் காட்சி வாயிலாக பொதுமக்களிடம் குறைகளைக் கேட்க டிஐஜி பாலகிருஷ்ணன் முடிவு செய்தார்.இந்தக் காணொளி காட்சியில் பங்கேற்க 0431 2333909 என்ற தொலைபேசி எண்ணில் தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களைத் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அவ்வாறு பதிவு செய்த நபர்களைக் குறிப்பிட்ட நேரத்தில் காணொலிக் காட்சி மூலம் டிஐஜி தொடர்புகொண்டு குறைகளைக் கேட்டறிந்து வருகிறார்.
Monday, May 25, 2020
On Monday, May 25, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மத்திய சிறையில் பணியிட மாறுதலை கொண்டாடிய சில சிறை பாதுகாவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மத்திய சிறையில் பணியாற்றும் சிறைக் காவலர், சிறை பாதுகாவலர்களுக்கு சிறைச்சாலை வளாகத்திலேயே குடியிருப்பு உள்ளது.
இந்தக் குடியிருப்பில் சிறை பாதுகாவலர்கள், கண்காணிப்பாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சிறையில் பணியாற்றும் சிறை பாதுகாவலர்கள் சிலருக்குபணியிட மாறுதல் கிடைத்துள்ளது.
அந்த நபர்கள் பேரும் இருசக்கர வாகனத்தில் சிறை குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி வந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதனை சிறை குடியிருப்புவாசிகள் செல்போனில் பதிவு செய்து வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அந்தக் கணொலியின் அடிப்படையில் கே.கே.நகர் காவல்நிலைய ஆய்வாளர், சிறை பாதுகாவலர்கள் 20 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
On Monday, May 25, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
*திருச்சிக்கு சிறப்பு விமானம் மூலம் வந்த பயணிகளுக்கு தொற்று பரிசோதனை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு*
கர்நாடகா மாநிலம் பெங்களூரிலிருந்து இண்டிகோ சிறப்பு விமானம் மூலம் திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு வருகை புரிந்த 58 பயணிகளை கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு பணி முன்னெச்சரிக்கையாக சுகாதாரத் துறையின் மூலம் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அறிகுறி உள்ளதா என திருச்சிராப்பள்ளி விமானநிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு இன்று 25.5. 2020 நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் சுப்பிரமணி மற்றும் பல அதிகாரிகள் உடனிருந்தனர்.
On Monday, May 25, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மன்னார்புரத்தில் அமைந்துள்ள எல்பின் நிறுவனம் பற்றியும் நிறுவனத் தலைவர் அழகர்சாமி என்னும் ராஜா மற்றும் நிர்வாக இயக்குனர் எஸ்.ஆர். கே என்னும் ரமேஷ் குமார் பற்றியும் அறம் மக்கள் நல சங்கம் பொது சேவை என்ற பெயரில் கருப்பு பணத்தை வெள்ளையாக்குவது குறித்தும் பொதுமக்கள் விழிப்புணர்வுக்காக பொதுமக்கள் ஏமாறுவதை தடுக்கும் விதமாக விரிவான செய்திகள் வெளியிட்டு இருந்தோம்.
மேலும் இந்நிறுவனத்தின் பல கோடிகள் முதலீடு செய்து அதனை திருப்பி கேட்ட பொழுது இவர்கள் பணம் தர மறுத்ததால் திருப்பூரில் சிவகுமார் என்பவர் தற்கொலை செய்து கொண்டார்
On Monday, May 25, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி ரமலான் சிறப்பு தொழுகை பல்வேறு இடங்களில் பல்வேறு முஸ்லிம்அமைப்புகள் சார்பாக நடைபெறும்
ஆனால் இன்று தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காரணத்தால் முஸ்லிம் சமுதாய மக்கள் தொழுகைகளை தங்களது இல்லத்திலேயே சிறப்பாக நடத்தி வருகின்றனர்
அப்படி சிறப்பாக நடத்திவரும் தொழுகைகளில் ஒன்றாக திருச்சியில் முஸ்லிம் சமுதாய மக்கள் அவர்களுடைய வீட்டில் சிறப்பு தொழுகை அவர்களது குடும்பத்துடன் ஈடுபட்டனர் மேலும் மக்களை தொற்றிலிருந்து காக்க வேண்டும் என்று அல்லாஹ்விடம் வேண்டியதாக தெரிவித்தனர்
Saturday, May 23, 2020
On Saturday, May 23, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி
மக்கள் சேவையில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்
சமூக இடை வெளியில் நலத்திட்ட உதவிகள் - ஊரடங்கு உத்தரவு ஆரம்பித்ததிலிருந்து தனது தொகுதி மக்கள் கஷ்டப்படாமல் இருக்க திருச்சியில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான அமைச்சர்வெல்லமண்டி நடராஜன் மனிதநேயத்துடன் தனது தொகுதிவார்டு வாரியாக இலவசமாக சமையலுக்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கி வருகிறார்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பை அடுத்து தமிழகத்தில் அமைச்சர்கள் அனைவரும் தங்களது பகுதிகளில் நலத்திட்டங்களை வழங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி கிழக்கு பகுதிக்குட்பட்ட பகுதிகளில் வரும் பொது மக்களுக்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கடந்த 50 நாட்களுக்கு மேலாக வாழ்வாதாரத்தை இழந்து இருக்கும் பொதுமக்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கும் வகையில் தொடர்ந்து தொகுதிக்கு உட்பட்ட வார்டு வாரியாக நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
தற்போது முஸ்லிம் சமுதாய மக்களுக்கு ரம்ஜான் பண்டிகை வருகிறது அதற்காக ஏழை எளிய முஸ்லிம் சமுதாய மக்களுக்கு இலவச பொருட்கள்
திருச்சி மரக்கடை பழைய பாஸ்போர்ட் அலுவலகம் இருந்த இடத்தில் மக்களை வரிசையாக சமூக இடைவெளி விட்டு நாற்காலியில் அமரச்செய்து ஒருவர் பின் ஒருவராக சமூக இடைவெளி பின்பற்றி நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது
நிவாரண தொகுப்பு பைகளில் அரிசி, காய்கறி மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் ஜவஹர்லால் நேரு, மலைக்கோட்டை பகுதி செயலாளர் அன்பழகன்,வெல்லமண்டி சண்முகம், மகளிர் அணியைச் சேர்ந்த ஜாக்லின், மற்றும் சந்திரு, கணேஷ் உட்பட சார்ந்த அதிமுகவை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பகுதி தொகுதி செயலாளர்கள் வட்டச் செயலாளர்கள் உட்பட பலர் கலந்த கொண்டனர்.
On Saturday, May 23, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
தமிழக காவல்துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனம் காரணமாகவும் அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா்.
மாநிலம் முழுவதும் 10 டிஎஸ்பிக்களை பணியிடமாற்றம் செய்து தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
திருச்சி நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராக கபிலன் பதவி வகித்து வந்தார். தற்போது அவர் ஓய்வு பெற்று விட்டார். திருச்சி நுண்ணறிவு பிரிவு பதவி காலியாக இருந்தது.
இதில் முக்கியமாக க்யூ பிரிவின் திருச்சி டிஎஸ்பியாக இருந்த ஜி.மணிகண்டன், ஸ்ரீரங்கம் உதவி ஆணையராகவும்,
ஸ்ரீரங்கம் உதவி ஆணையா் கே.ராமச்சந்திரன் திருச்சி மாநகர காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையராகவும், மதுரை காவலா் பயிற்சி மைய டிஎஸ்பி ஏ.முகம்மது நாசா் சென்னை காவல்துறையின் பாதுகாப்புப் பிரிவு உதவி ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இவ்வாறு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள 10 டிஎஸ்பிக்களும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
On Saturday, May 23, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
*திருச்சி தமிழ்நாடு அரசு டாஸ்மார்க் பணியாளர் சங்கம் சார்பில் பணி நேரத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்*
தமிழகத்தின் 144 தடை உத்தரவு காரணமாக மார்ச் 24ஆம் தேதி மாலை 6 மணிக்கு மதுபான கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டது இந்த சூழ்நிலையில் டாஸ்மாக் பணியாளர்கள் கூட்ட நெரிசலால் சொல்ல முடியாது பல நெருக்கடிகளைச் சந்தித்தனர்.
தமிழகத்திலுள்ள அனைத்து கடைகளிலும் மார்ச் 24 தேதி மாலை 4 மணிக்கு விற்பனை புள்ளி எடுத்துவிட்டனர் நான்கு மணியிலிருந்து ஆறு மணிவரை விற்பனையான பாட்டில் காண விற்பனைத் தொகை கடையிலேயே இருப்பு இருந்தது கடை பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் திருமண மண்டபம் மாவட்ட மேலாளர் குடோன் அலுவலகத்துக்கு சரக்கு பாட்டில்களை மாற்றும் பொழுது ஆடிட்டர் மூலமாக கணக்கு பார்க்கப்பட்டது அப்பொழுது இரண்டு மணி நேரத்திற்கான சரக்கு விற்பனையான தொகைக்கு 2% வட்டி ஜிஎஸ்டி 18% கட்டி முடிக்கப்பட்டு விட்டது.
*தற்பொழுது டாஸ்மார்க் நிர்வாகம் ஏற்கனவே ஏற்பட்ட வித்தியாசத்துக்கு 50% அபராதத் தொகை 24% வட்டி தொகை ஜிஎஸ்டி 18% கட்ட வேண்டும் என்று டாஸ்மார்க் நிர்வாகம் மே 25ஆம் தேதிக்குள் கட்டி முடிக்க வேண்டும், என்று ஆணை பிறப்பித்துள்ளது.*
மிகப்பெரிய முறைகேடுகள் செய்தவர்களை மாவட்ட மேலாளர் தப்பிக்க விட்டுவிட்டு நேர்மையான பணியாளர்களை வஞ்சிப்பது கைவிட வேண்டும் வங்கி மூலம் விற்பனை தொகையை தமிழகம் முழுவதும் வசூல் செய்யப்படவேண்டும்.
மேலும் திருட்டுப்போன மதுபானத்திற்கு ஆன தொகையை பணியாளர்களை கட்ட சொல்லாமல் காப்பீடு மூலமாக பெற வழிவகை செய்ய வேண்டும் அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும்.
இதைக் கருத்தில் கொண்டு 23.5.2020 சனிக்கிழமை இன்று அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து மற்றும் கருப்பு சட்டை அணிந்து டாஸ்மார்க் நிர்வாகத்திற்கு கடையில் பணிபுரிந்து கண்டனத்தை தெரிவித்தார்கள்
பேட்டி...... மாநிலச் செயலாளர் முருகானந்தம்
On Saturday, May 23, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருட்டுத்தனமாக மணல் அள்ளிய ஜேசிபி மற்றும் டிப்பர் லாரி பறிமுதல். அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 9 பேர் கைது
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மருங்காபுரி பகுதியான வேம்பனூர் ஆற்றில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெறுவதாக வந்த புகாரையடுத்து திருச்சி சரக டி.ஐ.ஜி உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் நேற்று இரவு மருங்காபுரி பகுதிகளில் அதிரடி ரெய்டில் ஈடுபட்டனர்.
அப்போது மினிக்கியூர் அருகே மணல் அள்ளிக்கொண்டு வந்த ஒரு ஜேசிபி மற்றும் ஒரு டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். ஜேசிபி ஓட்டுனர் திருப்பதி (33), லாரி ஓட்டுனர் குமரேசன் (32) ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் மணல் திருட்டில் தொடர்புடைய மினிக்கியூரைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் அருணாச்சலம் என்ற பெருமாள் (55) மற்றும் (33), தனபால் (45), சதீஷ் (25), சங்கர் (38), சதாசிவம் (30), ராசு (30) ஆகிய 9 பேரையும் கைது செய்து வளநாடு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனை அடுத்து அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 9 பேரையும் கைது செய்த வளநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அனைவரையும் மணப்பாறை அரசு மருத்துவமனையில் மருத்துவபரிசோதனை செய்து பின்னர் மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
கைது செய்யப்பட்ட அருணாச்சலம் என்ற பெருமாள் மருங்காபுரி ஒன்றியத்தின் அமமுக முன்னாள் ஒன்றிய செயலாளராக இருந்தவர் உள்ளாட்சி தேர்தலின்போது அதிமுகவில் இணைந்து தற்போது இவரது மனைவி பராசக்தி மருங்காபுரி ஒன்றிய 2 வது வார்டு அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினராக உள்ளார். தொடர்ந்து பினாமிகள் மூலம் மணல் திருட்டில் ஈடுபட்டுவந்த இவரை தற்போது முதன் முறையாக போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நீண்ட நாட்களாக மணல் திருட்டில் ஈடுபட்டு வந்த ஆளும் கட்சி முக்கிய பிரமுகர் உள்ளிட்ட 9 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளது மணப்பாறை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to:
Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...








