Friday, March 19, 2021
திமுக மண்ணச்சநல்லூர் சட்டமன்ற வேட்பாளர் கதிரவன் திமுக நலத்திட்டங்களை கூறி பிரச்சாரம்
தமிழகத்தில் வருகின்ற 6ம் தேதி நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் வேட்புமனுவை அளிர்த்து வருகின்றனர். அதன் படி திமுக கட்சி வேட்பாளர்கள் அனைத்து இடங்களிலும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் கதிரவன் போட்டியிடுகிறார். நேற்று மண்ணச்சநல்லூர் தாசில்தார் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி ராமனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இன்று மண்ணச்சநல்லூர் அதன் சுற்றியுள்ள பகுதியான உத்தமர் கோவில் அதன் அருகில் உள்ள பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட நிகழ்வின்போது திமுக பிரமுகர்கள் தொண்டர்கள் ஒன்றிய செயலாளர்கள் பகுதி செயலாளர்கள் கூட்டணிக் கட்சிகள் ஆகியோர் உடன் இருந்தனர்
திருச்சி விமான நிலையம் வந்த ஸ்டாலினுக்கு, நேரு தலைமையில் வரவேற்பு.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அதனைத் தொடர்ந்து இன்று கோவை திரும்பினார். இதற்காக ஒரத்தநாடில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த மு.க.ஸ்டாலினுக்கு, திமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் வரவேற்பு அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன், வழக்கறிஞர் பாஸ்கர் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அதன் பிறகு மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் கோவை புறப்பட்டு சென்றார்.
Wednesday, March 17, 2021
திருவெறும்பூர் தொகுதி, துவாக்குடி நகரத்தில் திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீதிவீதியாக நடந்து தீவிரமாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
திருவெறும்பூர் தொகுதி திமுக கட்சி வேட்பாளராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி போட்டியிடுகின்றார் .
திருவெறும்பூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட துவாக்குடி நகரத்தில் உள்ள வார்டு 1 முதல் 6 வரையுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து "உதயசூரியன் சின்னத்திற்கு" வாக்கு சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டார் .
உடன் நகர செயலாளர் இ. காயாம்பு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாவட்ட தலைவர் கோவிந்தராஜன், மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர், மதிமுகவை சேர்ந்த பாலுசாமி, திருமாவளவன், உப்பட மதசார்பற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Tuesday, March 16, 2021
திருச்சி மண்ணச்சநல்லூர் திமுக செயல்வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது
இக்கூட்டத்தில் திமுக முதன்மைச் செயலாளர் கே என் நேரு கலந்து கொண்டு பேசினார்.அவர் பேசும்போது இனிவரும் காலங்களில் திமுக ஆட்சி அமைப்பதில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதலில் பதவியேற்றுள்ளது. இக்கூட்டத்தின் வாயிலாக என்னால் உணர முடிகின்றது.எனவே மண்ணச்சநல்லூர் தொகுதி மக்கள் வேட்பாளர் கதிரவனை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய திமுகவினர் கடுமையாக உழைக்க வேண்டும். வாக்காளர்கள் கதிரவனை ஆதரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.இந்நிகழ்ச்சியில் வேட்பாளர் கதிரவன், வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மற்றும் அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர்.நிகழ்வின் முடிவில் நேரு தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பின்னர் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
திருச்சியில் மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவன் வாக்கு சேகரிப்பு
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தொகுதியில் திமுக சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தினை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத் தலைவர் சீனிவாசனின் மகன் கதிரவன் மண்ணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிடுவதாக திமுக தலைமை அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து வேட்பாளர் கதிரவனின் சென்னை அறிவாலயத்தில் முக்கிய தலைவர்களை சந்தித்து விட்டு, மண்ணச்சநல்லூர் தொகுதியில் உட்பட்ட குணசீலம் கோவிலில் தெய்வ தரிசனம் செய்தார். கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிர்வாகிகளை சந்தித்து திமுக மண்ணச்சநல்லூர் வேட்பாளர் கதிரவன் மற்றும் முதன்மை செயலாளர் நேருவின் மகனுமான அருண் நேருவுடன் உடன் திமுக நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்நிகழ்ச்சியில் மற்ற கட்சிகளில் இருந்து ஐம்பதுக்கு மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்
Monday, March 15, 2021
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் திருச்சி மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள்,
தமிழ்நாடு முத்தரையர் சங்க தலைவர் ஐயா ஆர் விஸ்வநாதன் அவர்களை,
திருச்சி கிழக்கு சட்டமன் ற தொகுதி வேட்பாளர் திரு.ஆர்.மனோகரன் அவர்கள்,
மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திரு.M. ராஜசேகரன் அவர்கள், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திருமதி சாருபாலா R தொண்டைமான் அவர்கள்,
துறையூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திரு. பீரங்கி சுப்பிரமணியம் அவர்கள்,
லால்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திரு.விஜய் மூர்த்தி ஆகியோர் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டனர் உடன் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
குழுமணி பகுதியில் சாருபாலா ஓட்டு வேட்டை
திருச்சி ஸ்ரீரங்கம் அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் அந்தநல்லூர் ஒன்றியத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், சமத்துவ மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம், இந்திய ஜனநாயக கட்சி, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் திருச்சி மாநகராட்சி மேயர் சாருபாலா தொண்டைமான் போட்டியிடுகிறார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் கட்சி பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். மேலும் திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அந்தநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட குழுமணி எம்ஜிஆர் சிலை அருகே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு கட்சியினரும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பளித்தனர்.
திருச்சி மண்ணச்சநல்லூர் திமுக வேட்பாளர் கதிரவன் முக்கிய நிர்வாகிகள் சந்திப்பு
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தொகுதியில் திமுக சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தினை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத் தலைவர் சீனிவாசனின் மகன் கதிரவன் மண்ணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிடுவதாக திமுக தலைமை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து வேட்பாளர் கதிரவனின் சென்னை அறிவாலயத்தில் முக்கிய தலைவர்களை சந்தித்து விட்டு, மண்ணச்சநல்லூர் தொகுதியில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில் சுற்றியுள்ள பகுதிகளில் முக்கிய திமுக நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்
Friday, March 12, 2021
ஸ்ரீரங்கம் திமுக வேட்பாளர் MP.பழனியாண்டி ஆதரவாளர்கள் வெடி வெடித்துக் பிரம்மாண்டமாக கொண்டாடினர்
திருச்சி ஸ்ரீரங்கம் திமுக வேட்பாளர் பழனியாண்டி ஆதரவாளர்கள் வெடி வெடித்து கொண்டாடினர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதற்கான திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
இதில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனியாண்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
திமுக வேட்பாளர் M.P பழனியாண்டி அவரது ஆதரவாளர்கள் சோமரசம்பேட்டை அம்பலகாரர் தெருவில் ஒன்றுகூடி வெடி வெடித்து கொண்டாடினர்.
பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியின் போது மேக்குடி பெரியசாமி, சோமரசம்பேட்டை சாந்தகுமார், இனியானூர் சாமிதுரை, பள்ளக்காடு கண்ணன், போதாவூர் கவுன்சிலர் சர்வேயர் பழனியாண்டி மற்றும் எம்பி குரூப்ஸை தேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
மே தின விழாவை திமுகவினர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என அக்கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் கேட்டுக்கொண்டுள...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...










