Sunday, April 04, 2021
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் யுவராஜன் போட்டியிடுகிறார். இவர் கிராமம் கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த வகையில் இன்று துறையூர் நகரப்பகுதிகளில் திறந்த ஜீப்பில் நின்றவாறு வாக்கு சேகரித்தார். அவருடன் மக்கள் நீதி மய்ய துறையூர் ஒன்றிய செயலாளர்கள் அருள்செல்வன், ஸ்ரீபதி, துறையூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் சுரேஷ், வார்டு செயலாளர் மகேந்திரன், உறுப்பினர்கள் கோபிநாத், ஆனந்த் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் உடன் சென்றனர். அப்போது யுவராஜன் கூறுகையில், துறையூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள சின்னேரி நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமல் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதை சரி செய்து கொடுக்க வேண்டும் என்று பல தேர்தல்களில் வேட்பாளரிடம் மக்கள் கோரிக்கை வைத்தனர்.
அதாவது வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இதுவரை ஏரியை தூர்வார நடவடிக்கை எடுக்கவில்லை. மக்கள் நீதி மய்யம் இந்த தேர்தலில் வெற்றி பெற்றவுடன் முதல் பணியாக இந்த ஏரி தூர்வாரப்படும்.
பின்னர் அதில் தேங்கியிருக்கும் கழிவுநீரை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கடந்த 40 ஆண்டுகளாக வைரி செட்டிபாளையத்தில் உள்ள ஜம்மேரி தூர்வாரப்படாமல் உள்ளது. துறையூரில் உள்ள ஏரிகளுக்கு இது தாய் ஏரியாகும். நான் வெற்றி பெற்றால் இந்த ஏரியையும் சுத்தம் செய்து நீர் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் துறையூர் பகுதியில் 8 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. சுத்தமான குடிநீர் வினியோகம் நடைபெறவில்லை. இவற்றையும் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மருவத்தூர் பகுதியில் குடிநீர் குழாய் கழிவு நீர் கால்வாய் அருகே அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் அசுத்த நீரை மக்கள் பயன்படுத்த வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பெரும்பாலான பகுதிகளில் சாலை வசதி, தெருவிளக்கு வசதி இல்லை. பல கிராமங்கள் 60, 70 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையிலேயே தற்போதும் உள்ளன. அவற்றை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
Tuesday, March 23, 2021
திருவெறும்பூர் தொகுதியில் நடைபெறும் அனைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளின் செலவு தொகை அனைத்தையும் கழக ஆட்சி அமைந்தவுடன் திருவெறும்பூர் தொகுதி சட்ட மன்ற வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏற்பதாக வாக்குறுதி அளித்தார் .
தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி அமைந்தவுடன், திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெறும் அனைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு உண்டான அனைத்து செலவையும் நானே ஏற்று கொள்வேன் எனறும் திராவிட முன்னேற்ற கழக தலைமையில் அமைந்துள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி அளித்துள்ளார்
மேலும் அவர் உரையாற்றும்போது நமது கழக தேர்தல் அறிக்கையில் ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பவர்களுக்கு மாதம் தோறும் ரூபாய் 1000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்பதை எடுத்துரைத்து திருவெறும்பூர் தொகுதியில் வசிக்கும் ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கும் இலவச காப்பீடு திட்டம் செய்து தருவேன், என்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கும் கழக அரசு அமைந்தவுடன் ஊக்க தொகை வழங்க வலியுறுத்துவேன் . என தெரிவித்தார் .
திருச்சி மண்ணச்சநல்லூர் பகுதியை திணற வைத்த திமுக வேட்பாளர் கதிரவன்
திமுக சார்பில் மண்ணசநல்லூர் சட்டமன்ற தொகுதியை தனலட்சுமி குழுமத்தின் கதிரவன் என்பவர் அதிமுக பரஞ்சோதியை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிடுகிறார்.
அவருக்கு மதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் டிடிசி சேரன் தலைமையில் ஏராளமான மதிமுகவினர் கலந்துகொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் பிரச்சாரத்தின்போது திமுக கொடியேற்றி திமுகவினர் உடன் தோழமைக் கட்சியான மதிமுக தொண்டரணி படையுடன் வாக்கு சேகரிப்பில் மதிமுகவினர் ஈடுபட்டுள்ளனர்
திமுக கழக மகளிரணிச் செயலாளரும் திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி அவர்கள்,
திருச்சி தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, பொன்மலைப்பட்டி பகுதியில், திருவெறும்பூர் தெற்கு ஒன்றியத்தில் உள்ள குண்டூர் ஊராட்சியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆதரித்து
பிரச்சாரம் மேற்கொண்டார் . இந்த நிகழ்வில், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என். சேகரன், வண்ணை அரங்கநாதன், பகுதி கழக செயலாளர் இ.எம்.தர்மராஜ், ஒன்றிய கழக செயலாளர் குண்டூர் மாரியப்பன் கூட்டணி கட்சி தலைவர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர் .
Friday, March 19, 2021
திருச்சி ஸ்ரீரங்கம் ஐஜேகே வேட்பாளர் பிரான்சிஸ் மேரி வேட்புமனு தாக்கல் செய்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.
கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி தனி அணியாக போட்டியிடுகிறது.
மக்கள் நீதி மய்யம் தலைமையில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி ஐஜேகே கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் ஐஜேகே கட்சி சார்பில் பிரான்சிஸ் மேரி என்பவர் போட்டியிடுகிறார்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி நாகமங்கலத்தை சேர்ந்த பிரான்சிஸ் மேரியின் கணவர் செல்வராஜ்.
இன்று பிரான்சிஸ் மேரி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்தில் பிரான்சிஸ் மேரி வேட்புமனுவை தாக்கல் செய்தபோது ஐஜேகே மற்றும் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
பிரான்சிஸ் மேரி கூட்டணிக் கட்சியினருடன் ஊர்வலமாக வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி
உடன் மணிகண்டம் ஒன்றிய கழக செயலாளர் S.பாக்யராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்
திமுக மண்ணச்சநல்லூர் சட்டமன்ற வேட்பாளர் கதிரவன் திமுக நலத்திட்டங்களை கூறி பிரச்சாரம்
தமிழகத்தில் வருகின்ற 6ம் தேதி நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் வேட்புமனுவை அளிர்த்து வருகின்றனர். அதன் படி திமுக கட்சி வேட்பாளர்கள் அனைத்து இடங்களிலும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் கதிரவன் போட்டியிடுகிறார். நேற்று மண்ணச்சநல்லூர் தாசில்தார் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி ராமனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இன்று மண்ணச்சநல்லூர் அதன் சுற்றியுள்ள பகுதியான உத்தமர் கோவில் அதன் அருகில் உள்ள பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட நிகழ்வின்போது திமுக பிரமுகர்கள் தொண்டர்கள் ஒன்றிய செயலாளர்கள் பகுதி செயலாளர்கள் கூட்டணிக் கட்சிகள் ஆகியோர் உடன் இருந்தனர்
திருச்சி விமான நிலையம் வந்த ஸ்டாலினுக்கு, நேரு தலைமையில் வரவேற்பு.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அதனைத் தொடர்ந்து இன்று கோவை திரும்பினார். இதற்காக ஒரத்தநாடில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த மு.க.ஸ்டாலினுக்கு, திமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் வரவேற்பு அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன், வழக்கறிஞர் பாஸ்கர் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அதன் பிறகு மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் கோவை புறப்பட்டு சென்றார்.
Wednesday, March 17, 2021
திருவெறும்பூர் தொகுதி, துவாக்குடி நகரத்தில் திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீதிவீதியாக நடந்து தீவிரமாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
திருவெறும்பூர் தொகுதி திமுக கட்சி வேட்பாளராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி போட்டியிடுகின்றார் .
திருவெறும்பூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட துவாக்குடி நகரத்தில் உள்ள வார்டு 1 முதல் 6 வரையுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து "உதயசூரியன் சின்னத்திற்கு" வாக்கு சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டார் .
உடன் நகர செயலாளர் இ. காயாம்பு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாவட்ட தலைவர் கோவிந்தராஜன், மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர், மதிமுகவை சேர்ந்த பாலுசாமி, திருமாவளவன், உப்பட மதசார்பற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
திருச்சிராப்பள்ளியில் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமிதொடங்கிவைத்...
-
திருச்சி மாவட்ட ஆதிசைவர் நலச்சங்கம், அகில பாரத துறவிகள் சங்கம் மற்றும் அந்தணர் முன்னேற்ற கழகம் ஆகியவற்றின் நிர்வாகிகள் இன்று திருச்சி சுப்...










