Monday, August 09, 2021
பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடக்க விழா இன்று (09.08.2021) அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை, திருச்சியில் நடைபெற்றது.
பெரு நிறுவனங்களின் சிஎஸ்ஆர் நிதியின் மூலம் பொதுமக்களுக்கான இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் சென்னையில் துவக்கி வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்டத்தில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு. கே. என். நேரு, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு. ம. சுப்ரமணியன் மற்றும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரால் இன்று (09.08.2021) அப்பல்லோ சிறப்பு மருத்துவமனையில் தொடங்கி வைக்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் திரு. எஸ். சிவராசு அவர்கள் திருச்சி மாவட்டத்திலுள்ள பல்வேறு பெரு நிறுவனங்கள் தங்களது சிஎஸ்ஆர் நிதியை இது போன்ற பொன்னான காரணத்திற்காக கொரோனா தடுப்பூசியினை இலவசமாக பொதுமக்களுக்கு வழங்க தங்கள் சிஎஸ்ஆர் நிதியை தாராளமாக முன்வந்து கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
நிறுவனங்கள் அளிக்கும் நிதியை திருச்சி மாவட்ட ஆட்சியர் திரு எஸ் சிவராசு அவர்கள் பெற்றுக்கொண்டு அவர் மூலமாக அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை, திருச்சியில் செலுத்தப்பட்டு பயனாளிகளுக்கு இம்மருத்துவமனையின் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் உதவியுடன் தடுப்பூசி செலுத்தப்படும் என மருத்துவமனை பொது மேலாளர் திரு. சாமுவேல் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.
Friday, August 06, 2021
திருச்சியில் கட்டிட தொழிலாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி முகாம் துவக்கிய அப்பல்லோ மருத்துவமனை குழுமம்
திருச்சி, தமிழ்நாடு அமைப்புசாரா கட்டிட தொழிலாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ் முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் படி அப்போலோ குழுமத்தின் தலைவர் மருத்துவர் பிரதாப் ரெட்டி அவர்களால், அனைத்து அப்போலோ மருத்துவமனைகளும் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்துடன் இணைந்து 2 லட்சம் அமைப்புசாரா கட்டிட தொழிலாளர்களுக்கு கோவிட் தடுப்பூசியானது தமிழ்நாடு முழுவதும் அளிக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக வியாழன் அன்று (05.08.2021) திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தொழிலாளர் நலத்துறையுடன் இணைந்து திருச்சி அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை, டெல்டா மாவட்டங்களில் உள்ள அமைப்புசாரா கட்டிட தொழிலாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி 30,000 தொழிலாளர்களுக்கு வழங்கவுள்ளது. இந்நிகழ்ச்சியை, அமைச்சர்கள் திரு. கே. என். நேரு மற்றும் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் திரு.எஸ் சிவராசு, தொழிலாளர் துறை கூடுதல் ஆணையர் திரு.பாலசுப்ரமணியன் உடன் இருந்தனர்.
அப்போலோ மருத்துவமனை சார்பில் அப்போலோ குழுமத்தின் முதுநிலை தலைமை மருத்துவ அதிகாரி மற்றும் அப்போலோ குழுமத்தில் கோவிட் தடுப்பூசிக்கான நடவடிக்கைகளை நாடு முழுவதும் நடத்தி வருகிறது. இது தொடர்பாக மருத்துவர் ரோகினி ஸ்ரீதர் கூறுகையில் இத்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலார்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கப்படுவதாக கூறினார். திருச்சி மருத்துவமனை தலைவர் சாமுவேல், விற்பனைப் பிரிவு பொது மேலாளர் மணிகண்டன், நிலைய மருத்துவ அதிகாரி மருத்துவர் சிவம், மற்றும் மருத்துவமனை துணை பொது மேலாளர் சங்கீத் உடனிருந்தனர்.
Sunday, July 25, 2021
உலக தமிழ் பல்கலைக்கழகம் அமெரிக்கா சார்பாக திருச்சியில் கௌரவ டாக்டர் பட்டம்
அமெரிக்க உலக தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் திருச்சியில் பல்வேறு தரப்பட்ட சாதனையாளர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்தது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி வி.ஐ.பி. ஏஜென்சி சேர்மென் A.மனோகரன் மற்றும் சேலம் ஜஸ்ட் வின் பிரைவேட் லிமிடெட் சேர்மேன் Dr.A. பாலசுப்பிரமணியம் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும், அமெரிக்க உலக தமிழ் பல்கலைக்கழக சேர்மன் Dr.A.M.ராய் பெர்னான்டோ அவர்கள் தலைமையில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கபட்டது.
இந்நிகழ்ச்சியில் சேலம் தர்ஷிகா (10) சிறுவயதில் இருந்தே யோகா, தியானம் மீது ஆர்வம் கொண்ட இவர் ஊரடங்கு காலத்தில் தொடர்ந்து யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.
கொரோனா மூன்றாம் அலையில் குழந்தைகளை பாதிக்கும் என்ற அச்சம் உள்ள நிலையில் யோகா மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும் என்பது தொடர்பாக விழிப்புணர்வு செய்ய தர்ஷிகா முடிவு செய்து சேலம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் மாணவி தர்ஷிகா பத்மாசனமிட்டு தலையில் தக்காளி பழத்தை வைத்து முப்பத்தி ஒரு நிமிடம் (31) யோகாசனம் செய்து பதஞ்சலி புக் ஆப் வேர்ல்டு ரெக்காட்ஸ் இடம்பெற்று கேடயம் வழங்கப்பட்டது. மற்றும் திருச்சி மேலப்புதூர் ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலை பள்ளியில் படிக்கும் சுகித்தா. இவர் கடந்த மூன்று வருடங்களாக தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பத்தை தனது சிலம்ப ஆசான் கலைசுடர்மணி திரு.எம்.ஜெயக்குமார் அவர்களிடம் முறைபடி சிலம்பத்தை கற்று தேர்ந்து சிலம்பத்தில் 5 புதிய உலக சாதனைகளும், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்ப போட்டிகளில் பங்கற்று தங்கம் வென்று, மேலும் தேசிய, மாநில மற்றும் மாவட்ட சிலம்ப போட்டிகளில் பங்குபெற்று இதுவரை 25 தங்கம் 12 வெள்ளி மற்றும் 4 வெண்கல பதக்கங்களும் வென்றுள்ளார்.
இவரை நமது இந்திய நாட்டின் துணை ஜனாதிபதி உயர்திரு. வெங்கையா நாயுடு அவர்கள் நேரில் அழைத்து பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கி பிஸ்டல் சுடும் போட்டியில் பங்கு பெற்றும் தங்கம் வென்றுள்ளார். மேலும் யோகா குருஜீ கிருஷ்ணகுமார் அவர்களின் பயிற்சியில் யோகாவில் புதிய உலக சாதனையும் செய்துள்ளார். மேலும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் இவருக்கு முன்னோடி பெண்மனி விருதும் கொடுத்து கௌரவ படுத்தியுள்ளார்கள்.
இவர் தான் கற்ற சிலம்ப கலையை தனது மூத்த ஆசான் ஜெயக்குமார் அவர்களின் அறிவுரை படி இலவசமாக பல அரசு பள்ளிகளுக்கும் சென்று கற்று கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
தனது 13 வயதிலேயே இத்தனை சாதனைகளை புரிந்த மோ.பி.சுகித்தா அவர்களுக்கு உலக தமிழ் பல்கலைக்கழகம் அமெரிக்கா சார்பாக இளம் கௌரவ டாக்டர் பட்டமும், மேலும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட மலேசியாவில் மூன்று தலைமுறையாக வசித்து வரும் கலைமாமணி அன்பழகன் குப்புசாமி அவர்கள் தமிழரின் பாரம்பரிய கலையான சிலம்பத்தை நன்கு கற்றறிந்து தான் கற்ற சிலம்ப கலையை மலேசியாவில் 8 மாநிலத்திலும் சிங்கப்பூரிலும் சிலம்பக் கோர்வை கழகம் என்கிற அமைப்பைத் துவங்கி இதுவரை 500க்கும் மேற்பட்ட மாணவர்களையும் 100க்கும் மேற்பட்ட சிலம்ப ஆசான்களையும் உருவாக்கியதோடு மட்டுமல்லாது பல சிலம்ப போட்டிகளில் தனது மாணவர்களைப் பங்கெடுக்கச் செய்தும் சர்வதேச போட்டிகளை நடத்தியும் அதில் வெற்றி பெற வைத்ததைப் பாராட்டி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கபட்டது.
மேலும் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட அயோத்தி அவர்களின் மகன் ராஜலிங்கம் அவர்கள் மலேசியாவில் குடியுரிமை பெற்று மலேசியாவில் கடந்த 20 வருடங்களாக கம்யூனிகேஷன் துறையில் 40க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் மலேசியாவில் தனது தொழிலை திறம்பட நடத்தி வருகின்றார். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இவர் மலேசியாவில் திறம்பட தொழில் செய்வதை பாராட்டி கௌரவ டாக்டர் பட்டம் பெறனர். இந்த பட்டமளிப்பு விழாவை திருச்சி ருத்ர சாந்தி யோகாலையா குருஜீ கிருஷ்ணகுமார் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
Friday, June 18, 2021
திருச்சி
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திடீர் ஆய்வு
இன்று 18/ 6 /2021 வெள்ளிக்கிழமை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்
காலை 10 மணியளவில் திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தார் பள்ளியில் மாணவர்களுக்கு செயற்கை விண்ணப்பம் வழங்கி என்ன பாடப்பிரிவு வேண்டும் வேண்டுகிற பாடப்பிரிவு கிடைக்கிறதா எவ்வளவு கட்டணம் என்பது போன்ற விவரங்களை கேட்டறிந்தார் தலைமையாசிரியரிடம் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதா மாணவர்களுக்கு பாடப் பிரிவு எவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படுகிறது சுயநிதி பாட பிரிவுகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது போன்ற விபரங்களை கேட்டறிந்தார் பின்னர் ஆசிரியர்களிடம் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர் என கேட்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்
அடுத்து திருச்சி மரக்கடை சையதுமுதர்ஷா மேல்நிலைப் பள்ளிக்கு சென்று அங்கு மாணவர்கள் சேர்க்கை நடைமுறையை கேட்டறிந்தார் பள்ளியில் உள்கட்டமைப்பு கழிவறை போன்றவற்றை நேரில் ஆய்வு செய்தார் மேலும் அங்கு நடைபெற்ற தடுப்பூசி முகாமை ஆய்வு செய்து அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தினார் அதன்பின்னர் திருச்சி ஏர்போர்ட் ஆபர்ட் மார்சல் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களின் செயற்கை குறித்தும் எத்தனை ஆசிரியர்கள் பணி செய்கின்றனர் என்பதையும் ஆய்வு செய்தார்
இந்நிகழ்வில் மாவட்ட கல்வி அதிகாரி பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்
Wednesday, June 16, 2021
திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற அலுவலக திறப்பு விழா
மெயின்கார்டு கேட் காமராஜர் விளைவு அருகில் அமைந்துள்ள கிழக்கு சட்டமன்ற தொகுதி அலுவலக திறப்பு விழா கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் முன்னிலையில்பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு அலுவலகத்தை திறந்து வைத்தார்
அதனைத் தொடர்ந்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அலுவலகத்திற்கு அருகில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார் இந்நிகழ்வில் பகுதி கழக செயலாளர்கள் மதிவாணன் ராஜசேகர் பாலமுருகன் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள் வட்ட கிளை கழக செயலாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Saturday, June 05, 2021
தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் இந்த சமய அறநிலையத் துறை அமைச்சர் அவர்களின் ஆலோசனை படியும் , இந்து சமய ஆணையர் அவர்களின் அறிவுரைப்படியும் , இன்று ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் இணையவழியில் குழந்தைகளுக்கான ஆன்மிக வகுப்புகள் அர்ச்சகர் சுந்தர் பட்டர் வழிகாட்டுதலுடன் தொடங்கப்பட்டது .
முதல் நாளான இன்று ஸ்ரீரங்கநாதர் ஸ்ரீரங்கம் வந்த கதையை எளிய முறையில் ஸ்ரீரங்கம் கோயில் ஆழ்வார்கள் ஆசார்யர்கள் வைணவ ஆய்வு மையம் ஒருங்கிணைப்பாளர்கள் புலவர் கிருஷ்ணா மற்றும் Dr ஜெயவித்யா ஆகியோர் குழந்தைகளுக்கு விளக்கினார் ,
முதல் வகுப்பான இன்று தமிழ்நாடு , வெளி மாநிலம் , மற்றும் வெளிநாடுகளில் இருந்து குழந்தைகளும் பக்தர்களும் கலந்து கொண்டனர்
, ஆன்மிக வகுப்பை துவக்கி வைத்த இணை ஆணையர் திரு செ .மாரிமுத்து ஆன்மிக வகுப்புகள் வாரந்தோறும் சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் 6.00 வரை நடைபெறும் என்று கூறினார் .*
திருச்சியில் நகல் எரிப்பு போராட்டம்
ஜீன் 5−ந் தேதி 2020 ஆண்டு மத்திய அரசு கொன்டு வந்த 3−வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெற கோாி கடந்த 6−மாத காலமாக டெல்லியில் பனி,வெயில்,மழை என பாராது தொடா் போராட்டம் நடத்தி வரும் அகில இந்திய போராட்ட ஒருங்கிணைப்பு குழு சட்டம் இயற்றி ஓராண்டான
இன்று நாடு முழுவதும் 3−வேளாண் சட்ட நகல் எாிப்பு போராட்டத்திற்க்கு அறைகூவல் விட்டு இருந்தது .அதன் அடிப்படையில் இன்று திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் வட்டம் அயிலாப்பேட்டையில் திருச்சி மாவட்ட அகில இந்தியவிவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளா்
அயிலை சிவசூாியன் தலைமையில் நகல் எாிப்பு போராட்டம் நடைபெற்றது, நடைபெற்ற போராட்டத்தில் சி.பி.ஐ ஒன்றிய செயலாளா் வீரமுத்து,சி.பி.எம் ஒன்றிய செயலாளா் வினோத்மணி,தமிழ் நாடு விவசாயிகள் சங்க நிா்வாகிகள்,பிரகாசமூா்த்தி,நடராஜன்,துரை ,கோப்பு அன்பழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Friday, June 04, 2021
திருச்சி முன்னாள் முதல்வர் திமுக தலைவர் டாக்டர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 8,9அ வார்டுகளில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
திருச்சி ஈபி ரோடு தாரநல்லூர் அருகே உள்ள ஒரு பள்ளியில் டாக்டர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் 200 மேற்பட்ட நபர்களுக்கு மேல் கொரானா பேரிடர் கால நிவாரணப் பொருட்களை திமுக கிழக்கு சட்டமன்ற வழங்கினார்.
அப்போது அங்கிருந்த முதியோர் ஒருவர் உயர் அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு கண் பார்வை மங்கிய நிலையில் இருந்த ஒரு முதியவருக்கு இனிகோ இருதயராஜ் திமுக கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஆறுதல் கூறி மேல் சிகிச்சை செய்வதற்கான ஆலோசனைகளை கூறி மேல் சிகிச்சை நடவடிக்கை உதவிகளை தான் செய்வதாக முதியவருக்கு மனிதநேயத்துடன் இனிகோ இருதயராஜ் தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியின் போது தலைமை கழகம் அறிவிப்பின்படி சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு நிவாரண பொருட்கள் பொதுமக்கள் பெற்றுச் சென்றனர்
இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் அனைத்தும் மலைக்கோட்டை பகுதியைச் சார்ந்த மலைக்கோட்டை பகுதி செயலாளர் மதிவாணன் அவர்களின் ஏற்பாட்டிலும் தலைமையிலும் நடைபெற்றது
நடைபெற்ற நிகழ்ச்சியில் 14 வட்டச் செயலாளர் சிலம்பரசன் 8 வட்ட செயலாளர் தசரதன் மற்றும் நிர்வாகிகள் 9அ வட்டச் செயலாளர் சண்முகம் நிர்வாகிகள் ஜம்புலிங்கம் கணேசன் நவம் கந்தன் மோகன் தீனதயாளன் சக்திவேல் குமார் பரிமனம் மருத்துவர்விஜயலட்சுமி, ராஜ்குமார் பிரபாகரன் பரமசிவம் பெரியசாமி தேவராயன் பிரதீப் திராவிட பண்ணை முத்து தீபக் செல்வராஜ் அருண் ஸ்ரீதர் தினேஷ் உள்ளிட்ட திமுக கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்
திருச்சி தெற்கு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 98 ஆவது பிறந்த நாள் விழா
திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு தொகுதி கலைஞர்நகர் பாலக்கரை மலைக்கோட்டை பகுதிகளில் ஏழை எளியவர்களுக்கு உணவு மற்றும் கொரோனாவல் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் விழா கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் அவர்களின் ஏற்பாட்டில்நடைபெற்றது.
தெற்கு மாவட்டகழக பொறுப்பாளரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு உணவுப் பொருட்களையும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.
இந்நிகழ்வில் கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் பகுதி கழக செயலாளர்கள் மதிவாணன், ராஜசேகர், பாலமுருகன், அரங்கநாதன், செந்தில், மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் பொதுமக்கள் என பெரும் திரளாக கலந்துகொண்டனர்
Total Pageviews
News
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
மதுரையில் வீட்டை இடித்து விட்டு பள்ளம் தோண்டும் போது பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மக்க...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
















