Sunday, August 22, 2021

  நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்


              திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி -க. ஆஷாதேவி  20 21 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அவர் மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார் ‌.


இந்நிகழ்வின் போது திருச்சிராப்பள்ளமாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.பாலமுரளி அவர்கள் மற்றும் மணிகண்டம் ஒன்றிய வட்டாரக்கல்வி அலுவலர் திரு. மருதநாயகம் ஆகியோர் உடன் இருந்தனர்

Saturday, August 21, 2021

 திருமாவளவனுக்கு மக்கள் சமூக நீதி பேரவை சார்பில் பாராட்டு விழா திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.


பெரியார் மண் மீட்ட தமிழ் மானப் போராளி தொல்.திருமாவளவனுக்கு மக்கள் சமூக நீதி பேரவை சார்பில் பாராட்டு விழா திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று ஆகஸ்ட் 21 நடைபெற்றது. இவ்விழாவில்  பெரியார் மண் மீட்ட தமிழ் மானப் போராளி என்ற விருது வழங்கப்பட்டது. மேலும் சிறப்பு விருந்தினராக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சமூக நீதி பேரவை சார்பில் திருமாவளவன் , நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோருக்கு  பரிவட்டம் கட்டப்பட்டு மரியாதை செலுத்தினர். 



 செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பதற்கு எல்லா ஏற்பாடுகளையும் தொடர்ந்து செய்து வருகிறோம் - சத்திரம் பேருந்து நிலையம் அருகே அமைச்சர் பேட்டி.


திருச்சிமாவட்ட மைய நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக   மாவட்ட மைய நூலகத்தில்  நூலகர் தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தலைமையில் விழா இன்று ஆகஸ்ட் 21 நடைபெற்றது இவ்விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  மகேஸ்  பொய்யாமொழி  நூலகர்களையும்,  நன்கொடையாளர்களையும் சிறப்பித்து விழாப் பேருரையாற்றினார்.   

செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில் ...

தற்போது வரை செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம் - அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு பணிகளை  மேற்கொண்டு வருகிறோம்.

மாஸ்க் அணிவது,கிருமி நாசினி பயன்படுத்துவது,குழந்தைகளை எப்படி இடைவேளை விட்டு அமர வைக்க வேண்டும் போன்ற முன் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம்.

பொது சுகாதர துறையிடமும் ஆலோசனைகள் கேட்டுள்ளோம்,அவர்கள் கூடுதலாக ஆலோசனைகள் வழங்கினார்கள் என்றால் அதையும் நாங்கள் கடைபிடிக்க உள்ளோம்.

9,10,11,12 மாணவர்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பதற்கு எல்லா ஏற்பாடுகளையும் தொடர்ந்து செய்து வருகிறோம்.

ஆசிரியர்கள் எவ்வளவு பேர் தடுப்பூசிகள் செலுத்தி உள்ளனர் என்ற விபரங்களை பெற்று வருகிறோம்.

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு தகுந்தார் போல் ஆசிரியர்கள் கூடுதலாக நியமனம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

150 மாணவர்கள் அமர்ந்து படித்து வந்த வகுப்பறையில் தற்போது 350 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்கிற செய்தி எல்லாம் வந்து உள்ளது எனவே மாணவர்கள் சேர்க்கைக்கு தகுந்தார்போல் பள்ளியின் கட்டமைப்பை கண்டிப்பாக மேம்படுத்துவோம் என கூறினார்.

 திருச்சி இ.ஆர். மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான எழுத்துத் தேர்வை ஆட்சியர் ஆய்வு செய்தார்.


திருச்சிராப்பள்ளி இ.ஆர். மேல்நிலைப்பள்ளியில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பில் கணிதம் மற்றும் அறிவியல் பயிலும் மாணவர்கள் திருச்சிராப்பள்ளி என்.ஐ.டி.யில்  சேருவதற்கு அடிப்படையான  ஜே.இ.இ. தேர்வு எழுதுவதற்கான சிறப்புப் பயிற்சி  வழங்கப்படுவதற்காக,தேர்ந்தெடுக்கப்படவுள்ள  மாணவர்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு இன்று ஆகஸ்ட் 21 பார்வையிட்டார்.

  திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் 100 நாள் சாதனை விளக்க துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்


               திருச்சி தெற்கு மாவட்ட தி மு க வின் சார்பாக திருச்சி கிழக்கு தொகுதி மலைக்கோட்டை பகுதி சத்திரம் பேருந்து நிலைய பகுதியில் தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கக்கூடிய தி.மு.க  தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான ஆட்சியின் 100 நாள் சாதனை விளக்கி  துண்டுப் பிரசுரத்தை,மாண்புமிகு.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்  சத்திரம் பேருந்து நிலையம் முதல் வி. என் நகர் பகுதி வரை நடந்து சென்று பொதுமக்களையும் வியாபாரிகள் மற்றும் பேருந்துக்காக நின்று கொண்டிருந்த பயணிகளை  சந்தித்து துண்டுப் பிரசுரங்களை வழங்கினர் நிறைவேற்றப்பட்ட சாதனைகள்

கொரோனா விற்கான நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்பட்டது

மகளிருக்கு விலையில்லா பேருந்து பயண திட்டத்தை அறிவித்தது

பத்திரிக்கை ஊடகவியல்லாளர்களை முன்களப்பணியாளர்கள் அறிவித்தது

அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர்களாக பணி அமர்த்த பட்டது

செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள்  ஊடகவியலாளர்களுக்கு நிவாரணத்தொகை அறிவித்தது

 இப்படி நூற்றுக்கு மேற்பட்ட நூறுநாள் சாதனைகளை நிறைவேற்றிய திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறி துண்டு பிரசுரங்களை வழங்கினார்   மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்

  இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே என் சேகரன் கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், இனிகோ இருதயராஜ் ,மாவட்ட பொருளாளர்,என் கோவிந்தராஜன்,வண்ணை அரங்கநாதன் ,மலைக்கோட்டை பகுதி கழக செயலாளர் மதிவாணன் பாலக்கரை பகுதி கழக செயலாளர் ராஜசேகர் மற்றும் மாவட்ட  பகுதி  கிளை கழகங்களின் நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்

திருச்சி தெற்கு,சுதந்திர போராட்ட வீரர் மாவீரர் ஒண்டிவீரரின் 250வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருச்சி தெற்கு மாவட்ட கழக  அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த  மாவீரன் ஒண்டிவீரன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


 திருச்சி தெற்கு மாவட்டம்    சுதந்திர போராட்ட தியாகி ஒண்டிவீரரின் 250 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட கழக அலுவலகத்தில் அவரின் திருவுருவப் படத்திற்கு தெற்கு மாவட்ட கழக  செயலாளர் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்


இந்த நிகழ்வில்  தலைமை செயற்குழு உறுப்பினர்  கே என் சேகரன்

வண்ணைஅரங்கநாதன் மதிவாணன், கே எஸ் எம் கருணாநிதி  செந்தில் மாவட்ட ஒன்றிய நகர பகுதி பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள்   உட்பட பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


Friday, August 20, 2021

 கணவரை மீட்டு தரக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் புகார்


ஸ்ரீரங்கம் வடக்குவாசல் கொள்ளிடம் ரோடு பகுதியைச் சேர்ந்த நவீன் நிஷா,என்பவர் காவல் ஆணையர் அவர்களிடம் மனு அளிக்க வந்தனர்


அதில் தனக்கு திருமணமாகி ஐந்து வருடம்ஆகின்றது நானும் கணவரும் சில மாதங்களே ஒன்றாக வாழ்ந்து வந்தோம் எனது கணவரின் சித்தப்பா ராம்ராஜ், என்பவர் பேச்சைக் கேட்டு பல ஆண்டுகளாக என்னைப் பார்க்க வரவில்லை மேலும் எனது கணவரின் சித்தப்பா ராம்ராஜ்யிடம் எனது கணவரை பார்க்க வேண்டுமென்று கேட்டாலும் அவர்கள் எனது கணவரை காட்டவில்லை எனது கணவர் எங்கு இருக்கிறார் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற நிலையில் உள்ளது எனது வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய ராம்ராஜ் ,என்பவர் மீது நடவடிக்கை எடுத்து எனது கணவரை கண்டுபிடித்து என்னுடன் சேர்த்து வைக்குமாறு மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்ததாகவும் அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததாகவும் நவீன் உஷா கூறினார்

Tuesday, August 17, 2021

 முன்னாள் மத்திய அமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் மனசாட்சியாக விளங்கிய முன்னாள் மத்திய அமைச்சர்


 முரசொலி மாறனின் 88 வது பிறந்த நாளையொட்டி  திருச்சி தெற்கு மாவட்ட திமுக  அலுவலகத்தில் திமுவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

 முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் 88வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது

  தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அமைச்சரும்மான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க திருச்சி தெற்கு மாவட்ட கழக  திமுக  அலுவலகத்தில் முரசொலிமாறன் பிறந்தநாள் விழா நடைபெற்றது.   

தலைமை செயற்குழு உறுப்பினர் கே என் சேகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முரசொலிமாறன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது 

நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன்,  செந்தில்  மலைக்கோட்டை பகுதி கழக செயலாளர் மதிவாணன் உட்பட கட்சியின் மாவட்ட ஒன்றிய நகர பகுதி  பேரூர் கழக செயலாளர்கள் அணிகளின் அமைப்பாளர்கள்  நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்

Monday, August 16, 2021

On Monday, August 16, 2021 by Tamilnewstv in    

 


மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, மான்பிடிமங்கலம் சக்திவேல் அவர்களின் மனைவி நித்யா(25) மற்றும் அவர்களது  8 மாத கைக்குழந்தை பவ்யஸ்ரீ, ஆகியோர் வீட்டு சுவர் இடிந்து  விழுந்ததில் சம்பவ இடத்திலேயே  பலியானார்கள் என்பதை அறிந்து மனம் வேதனையுற்ற மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன்

மீளாத்துயரில் இருக்கும் சக்திவேல் மற்றும் அவர்களது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மேலும், தமிழக அரசின் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒருவருக்கு ரூ.4 லட்சம் வீதம் இரண்டு பேருக்கும் ரூ. 8 லட்சம் நிவாரண நிதியையும் நேரில் வழங்கினார்