Sunday, August 22, 2021
திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மழைக்காலம் வருவதை முன்னிட்டு மழைநீர் மற்றும் கழிவு நீர் வடிகால் வாய்க்கால்கள் சீரமைக்கும் பணி, சாலை பராமரிப்பு மற்றும் தொகுதியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் இன்று நடந்தது.
நடைபெற்ற கூட்டத்தில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் கலந்து கொண்டு பேசும்போது, தொகுதியில் நான் மேற்கொண்ட ஆய்வுகளின்படியும் பொதுமக்கள் கொடுத்த கோரிக்கைகளின் படியும் தொகுதிக்குட்பட்ட வார்டுகளில் உள்ள குறைகளை போக்கிட வேண்டும் என என்னுடன் ஆய்வுகளின் போது கலந்துகொண்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் வலியுறுத்தி கேட்டு கொண்டும், ஒரு சில பணிகளைத் தவிர பல பணிகள் செய்யாமல் இருப்பதை அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று மக்கள் பணிகளில் அலட்சியம் காட்டாமல் கிழக்கு தொகுதியை தமிழ்நாட்டின் முதன்மை தொகுதியாக மாற்றிட தேவையான சுகாதார நடவடிக்கைகளை துரிதகதியில் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்
இந்த ஆலோசனை கூட்டத்தில் நகர பொறியாளர், செயற்பொறியாளர் உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி கிழக்கு தொகுதி மலைக்கோட்டை பகுதி 9 வது வார்டு ஆய்வின் தொடர்ச்சியாக வார் டுக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும் கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் சுகாதாரப் பணிகளை மேற் கொண்டு மின் வசதி மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை உயர்த்திட வேண்டுமென அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
ஒடத்தெரு காவிரி பாலம் பகுதியில் உள்ள இளைஞர்கள் கைப்பந்து திடல் அமைத்து தருமாறு விடுத்த கோரிக்கையை பரிசீலிப்பதாக கூறினார். அந்தோணியார் கோவில் தெருவில் கழிப்பறை வசதி கேட்டு பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை என்னுடன் ஆய்வுக்கு வந்திருந்த அதிகாரிகளிடம் தெரிவித்து அதற்கு ஆவன செய்யுமாறு கேட்டு கொண்டார். இந்த ஆய்வுகளின் போது பகுதி கழக செயலாளர் திரு.மதிவாணன், வட்ட கழக செயலாளர் திரு. சண்முகம், கழக நிர்வாகிகள் ஜம்புலிங்கம் கணேசன், நவம், செபாஸ்டின், கந்தன், சக்திவேல், பரிமாணம், மோகன், தீனதயாளன், குமார், அணி நிர்வாகிகள் மகேஷ்வரன், ஜெய் ஆகாஷ், முத்து தீபக், தினேஷ் மற்றும் கழக தோழர்கள் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இடம் திருவெறும்பூரில் நடந்த கோவை பெய்ண்டர்கள் மற்றும் ஓவியர்கள் சங்க முதலாமாண்டு துவக்க விழாவில் கோரிக்கை வைத்தனர்.
விழாவிற்கு மாநில தலைவர் சதுரகிரி அலி தலைமை வகித்தார்.மாநிலச் செயலாளர் சித்திக் மாவட்ட துணை தலைவர் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக கொண்ட தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம்
மாநில பெய்ண்டர்களுக்கு,தனி நலவாரியம் அமைத்து தரவேண்டும்.என்று கோரிக்கை மனுவை வழங்கினார்கள் மனுவை பெற்றுக்கொண்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழி இது குறித்து முதல்வரிடம் எடுத்து கூறி நடவடிக்கை எடுக்கப்பதாக உறுதி கூறினார்.
மேலும் பெய்ண்டர்கள் மற்றும் ஓவியர்கள் தான் அரசியல்வாதிகளை அழகாக வரைந்து மக்களிடம் கொண்டு சென்று சேர்ப்பதாகவும் கூறினார்.
இந்த விழாவில் பெயிண்டர் கள் மற்றும் ஓவியர்கள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்
திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி -க. ஆஷாதேவி 20 21 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அவர் மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார் .
இந்நிகழ்வின் போது திருச்சிராப்பள்ளமாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.பாலமுரளி அவர்கள் மற்றும் மணிகண்டம் ஒன்றிய வட்டாரக்கல்வி அலுவலர் திரு. மருதநாயகம் ஆகியோர் உடன் இருந்தனர்
Saturday, August 21, 2021
திருமாவளவனுக்கு மக்கள் சமூக நீதி பேரவை சார்பில் பாராட்டு விழா திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.
பெரியார் மண் மீட்ட தமிழ் மானப் போராளி தொல்.திருமாவளவனுக்கு மக்கள் சமூக நீதி பேரவை சார்பில் பாராட்டு விழா திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று ஆகஸ்ட் 21 நடைபெற்றது. இவ்விழாவில் பெரியார் மண் மீட்ட தமிழ் மானப் போராளி என்ற விருது வழங்கப்பட்டது. மேலும் சிறப்பு விருந்தினராக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சமூக நீதி பேரவை சார்பில் திருமாவளவன் , நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோருக்கு பரிவட்டம் கட்டப்பட்டு மரியாதை செலுத்தினர்.
செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பதற்கு எல்லா ஏற்பாடுகளையும் தொடர்ந்து செய்து வருகிறோம் - சத்திரம் பேருந்து நிலையம் அருகே அமைச்சர் பேட்டி.
திருச்சிமாவட்ட மைய நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக மாவட்ட மைய நூலகத்தில் நூலகர் தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தலைமையில் விழா இன்று ஆகஸ்ட் 21 நடைபெற்றது இவ்விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி நூலகர்களையும், நன்கொடையாளர்களையும் சிறப்பித்து விழாப் பேருரையாற்றினார்.
செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில் ...
தற்போது வரை செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம் - அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
மாஸ்க் அணிவது,கிருமி நாசினி பயன்படுத்துவது,குழந்தைகளை எப்படி இடைவேளை விட்டு அமர வைக்க வேண்டும் போன்ற முன் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம்.
பொது சுகாதர துறையிடமும் ஆலோசனைகள் கேட்டுள்ளோம்,அவர்கள் கூடுதலாக ஆலோசனைகள் வழங்கினார்கள் என்றால் அதையும் நாங்கள் கடைபிடிக்க உள்ளோம்.
9,10,11,12 மாணவர்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பதற்கு எல்லா ஏற்பாடுகளையும் தொடர்ந்து செய்து வருகிறோம்.
ஆசிரியர்கள் எவ்வளவு பேர் தடுப்பூசிகள் செலுத்தி உள்ளனர் என்ற விபரங்களை பெற்று வருகிறோம்.
அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு தகுந்தார் போல் ஆசிரியர்கள் கூடுதலாக நியமனம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
150 மாணவர்கள் அமர்ந்து படித்து வந்த வகுப்பறையில் தற்போது 350 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்கிற செய்தி எல்லாம் வந்து உள்ளது எனவே மாணவர்கள் சேர்க்கைக்கு தகுந்தார்போல் பள்ளியின் கட்டமைப்பை கண்டிப்பாக மேம்படுத்துவோம் என கூறினார்.
திருச்சி இ.ஆர். மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான எழுத்துத் தேர்வை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
திருச்சிராப்பள்ளி இ.ஆர். மேல்நிலைப்பள்ளியில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பில் கணிதம் மற்றும் அறிவியல் பயிலும் மாணவர்கள் திருச்சிராப்பள்ளி என்.ஐ.டி.யில் சேருவதற்கு அடிப்படையான ஜே.இ.இ. தேர்வு எழுதுவதற்கான சிறப்புப் பயிற்சி வழங்கப்படுவதற்காக,தேர்ந்தெடுக்கப்படவுள்ள மாணவர்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு இன்று ஆகஸ்ட் 21 பார்வையிட்டார்.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் 100 நாள் சாதனை விளக்க துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்
திருச்சி தெற்கு மாவட்ட தி மு க வின் சார்பாக திருச்சி கிழக்கு தொகுதி மலைக்கோட்டை பகுதி சத்திரம் பேருந்து நிலைய பகுதியில் தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கக்கூடிய தி.மு.க தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான ஆட்சியின் 100 நாள் சாதனை விளக்கி துண்டுப் பிரசுரத்தை,மாண்புமிகு.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் சத்திரம் பேருந்து நிலையம் முதல் வி. என் நகர் பகுதி வரை நடந்து சென்று பொதுமக்களையும் வியாபாரிகள் மற்றும் பேருந்துக்காக நின்று கொண்டிருந்த பயணிகளை சந்தித்து துண்டுப் பிரசுரங்களை வழங்கினர் நிறைவேற்றப்பட்ட சாதனைகள்
கொரோனா விற்கான நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்பட்டது
மகளிருக்கு விலையில்லா பேருந்து பயண திட்டத்தை அறிவித்தது
பத்திரிக்கை ஊடகவியல்லாளர்களை முன்களப்பணியாளர்கள் அறிவித்தது
அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர்களாக பணி அமர்த்த பட்டது
செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஊடகவியலாளர்களுக்கு நிவாரணத்தொகை அறிவித்தது
இப்படி நூற்றுக்கு மேற்பட்ட நூறுநாள் சாதனைகளை நிறைவேற்றிய திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறி துண்டு பிரசுரங்களை வழங்கினார் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்
இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே என் சேகரன் கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், இனிகோ இருதயராஜ் ,மாவட்ட பொருளாளர்,என் கோவிந்தராஜன்,வண்ணை அரங்கநாதன் ,மலைக்கோட்டை பகுதி கழக செயலாளர் மதிவாணன் பாலக்கரை பகுதி கழக செயலாளர் ராஜசேகர் மற்றும் மாவட்ட பகுதி கிளை கழகங்களின் நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்
திருச்சி தெற்கு,சுதந்திர போராட்ட வீரர் மாவீரர் ஒண்டிவீரரின் 250வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மாவீரன் ஒண்டிவீரன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருச்சி தெற்கு மாவட்டம் சுதந்திர போராட்ட தியாகி ஒண்டிவீரரின் 250 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட கழக அலுவலகத்தில் அவரின் திருவுருவப் படத்திற்கு தெற்கு மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்
இந்த நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே என் சேகரன்
வண்ணைஅரங்கநாதன் மதிவாணன், கே எஸ் எம் கருணாநிதி செந்தில் மாவட்ட ஒன்றிய நகர பகுதி பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
#திருச்சி_அண்ணாநகர் #கஞ்சா_செடிகள்_அழிப்பு தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைவர் ராயல் சித்திக் அவர்களின் பெரும் முயற்சியால் தி...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
உடுமலை அரிமா சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில் இலவச கண்பரிசோதனை முகாம் அரிமா சங்க தொழிற்பயிற்சி மையத்தில் நடந்தது. முக...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
மதுரையில் வீட்டை இடித்து விட்டு பள்ளம் தோண்டும் போது பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மக்க...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...










