Wednesday, February 09, 2022

On Wednesday, February 09, 2022 by Tamilnewstv in ,    

 திருச்சி 


திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்க துறை,  தமிழாய்வுத் துறை மற்றும் மாவட்ட ரோட்டரி கிளப் ஆகியவை  இணைந்து ஊராட்சி ஒன்றிய பள்ளி களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி செப்பர்டு விரிவாக்கத் துறை இயக்குனர் அருட் தந்தை பெர்க்மான்ஸ் தலைமையில், மேலபச்சக்குடி ஊராட்சி மன்ற தலைவர் செல்வி சுப்ரமணி முன்னிலையில் நடைபெற்றது. 

திருச்சி அடுத்துள்ள குள்ளம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு   மற்றும் திருச்சி மாவட்டம் அளுந்தூர் அடுத்துள்ள கொட்டப்பட்டு புனித லூர்ட்ஸ் தொடக்கப் பள்ளிகளுக்கு கணினி, மேசைகள் பீரோ மற்றும் கற்றல்  உபகரணங்கள்,  வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தமிழாய்வுத் துறை தலைவர் முனைவர் பெஸ்கி, மேலபச்சக்குடி ஊராட்சி மன்ற துணை தலைவர் குமார், பேராசியர்கள் ஜெயக்குமார், ஜெரோம், 

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்துக்குமாரி,  புனித லூர்ட்ஸ் தொடக்கப் பள்ளி உதவி ஆசிரியர் ஆரோக்கியசுந்தர்,

தமிழ்துறை மாணவர்கள்  சந்தோஷ், கஸ்தூரி செபாஸ்டின் மாதேஷ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செப்பர்டு விரிவாக்கத் துறை ஒருங்கிணைப்பாளர் ஜோசப்,  கிறிஸ்துராஜா,செய்திருந்தார்.



Monday, February 07, 2022

On Monday, February 07, 2022 by Tamilnewstv in ,    

 


திருச்சி கம்பரசம்பேட்டை அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி அம்மன் திருக்கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது


திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா கம்பரசம் பேட்டையில் ஸ்ரீ விசாலாட்சி அம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமையன்று விநாயகர் வழிபாடு, மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கி நாலு கால யாக சால பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை 9.45 மணிக்கு கோவில் கோபுர கும்பாபிஷேகம் நடைபெற்றது. 


தொடர்ந்து 10.15 மணிக்கு மூலஸ்தான மகா கும்பாபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. இந்நிகழ்வானது முத்துக் குமார சிவாச்சாரியார், சதீஷ் சிவாச்சாரியார், பிரபு சிவாச்சாரியார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. 

மேலும் இவ்விழாவை சிறப்பாக நடத்திக் கொடுத்த கம்பரசம்பேட்டை பொதுமக்கள், ராதே கிருஷ்ணா வெல்ஃபேர் டிரஸ்ட், மணி ஐயர் ஆகியோருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் கோவில் அறங்காவலர்கள் மணி அய்யர், ராதாகிருஷ்ணன், சீனிவாசன், திருப்பணி குழுவினர் கண்ணன், ரவிசங்கர், கோவிந்தராஜன் உட்பட அப்பகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு விசாலாட்சி அம்மனை தரிசனம் செய்தனர். 


Wednesday, January 12, 2022

On Wednesday, January 12, 2022 by Tamilnewstv in    

 திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் இன்று காலை திரு பிசினஸ் சர்வீஸ் வெல்பர்


அசோஷியேஷன்  நிர்வாக குழு சார்பில் சங்கத்தின் செயலாளர் திரு. ஷோக்கத் அலி தலைமையில் பிரதம மந்திரியின் காப்பீட்டு திட்டம் பணி குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இத்திட்டத்தின் வாயிலாக பயனடைய பொதுமக்களுக்கு, வியாபார பெருமக்களுக்கு வங்கிகளின் கடன் பெரும்  சலுகைகளின் பணி குறித்தும் பணி ஆரம்பக் கூட்டம் நடை பெற்றது   


பொதுமக்களுக்கு இத்திட்டம் சேர்ந்து அடையும் வண்ணமாக ஆலோசகர்கள் நியமனம் செய்து இத்திட்டத்தை பற்றி விளக்கமாக பொது மக்களுக்கு தகவல் கிடைத்திட கூட்டம் நடைபெற்றது 


மேலும் இந்த கூட்டத்தில் பங்குபெற்ற நபர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது நடைபெற்ற கூட்டத்தில் கடன் பெறுவது குறித்தும் இத்திட்டம் பயனாளிகளுக்கு சேர்ந்து அடையும்  விதமாக ஆலோசனைகள் கூறப்பட்டது பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருச்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு முகவர்கள் ஆண்கள் பெண்கள் இருபாலரும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

                             

Saturday, December 11, 2021

On Saturday, December 11, 2021 by Tamilnewstv in ,    

 திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் வெள்ளாளர் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.


திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் வெள்ளாளர் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு சித்தி விநாயகர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் இடும்பன் மதுரைவீரன் கருப்பண்ணசுவாமி சமேத ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிசேக விழா கடந்த 4ஆம் தேதி அன்று முதல் கால யாக பூஜையுடன் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து 5 ஆம் தேதி ஸ்ரீசக்தி மாரியம்மனுக்கு முதல் கால யாக பூஜையும் சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது

ஆறாம் தேதி திங்கட்கிழமை அன்று மூன்றாம் கால யாக பூஜையும் இதனைத் தொடர்ந்து ஏழாம் தேதி யாகசாலையில் மண் நீர் நெருப்பு காற்று ஆகாயம் ஆகிய ஐந்து ரூபமாக விளங்கும் அன்னைக்கு ஐந்தாம் கால யாக பூஜையும் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர் விழாவிற்கான ஏற்பாடுகளை காரியகாரப்பிள்ளை சிவக்குமார் மற்றும் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

On Saturday, December 11, 2021 by Tamilnewstv in ,    
திருச்சி கே.கள்ளிக்குடி பகுதியில் உள்ள என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடமியில் நடந்த விழாவில் சிரித்துக் கொண்டே ஜெயிக்கலாம் என்ற தலைப்பில் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்  சிறப்புரையாற்றினார்.

முன்னதாக என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடமி இயக்குனர் விஜயாலயன் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் குரு.அரங்கநாதன் மற்றும் தொழிலதிபர் காஜா மொய்தீன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மேலும் இந்நிகழ்ச்சியில் கல்வியாளர்கள் பயிற்றுநர்கள் மாணவ-மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இங்கு படித்த 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உட்பட அரசுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அதிகாரிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, November 14, 2021

On Sunday, November 14, 2021 by Tamilnewstv in ,    

 குழந்தைகள் தின விழா ஓவியப்போட்டியில் தங்களது ஓவியத் திறமையை வெளிப்படுத்திய பிஞ்சு குழந்தைகள்.....


குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு பாங்க் ஆஃப் இந்தியா சார்பாக திருச்சி தெப்பக்குளத்தில் உள்ள பேங்க் ஆப் இந்தியா கிளையில் குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி நடைபெற்றது இந்த ஓவிய போட்டியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக ஓவியங்களை வரைந்து வண்ணம் தீட்டினர் இதற்கான ஏற்பாட்டை பேங்க் ஆப் இந்தியா சிலை கிளையின் ஊழியர்கள் செய்திருந்தனர்

கிளை மேலாளர் மணிவண்ணன் பாங்க் ஆப் இந்தியா கூறுகையி்ல் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது


பரிசளிப்பு விழா இன்று நடைபெறுகிறது


குறைந்த வட்டியில் லோன் பற்றிய விழிப்புணர்வாக குழந்தைகள் வீடுகள் மற்றும் கார் படங்கள் வரைந்து காட்டினர் இந்த ஓவியப் போட்டியில் சிறப்பு ஓவியங்களுக்கு சிறந்த பரிசுகள் வழங்கப்படும் என கிளை மேலாளர் மணிவண்ணன் தெரிவித்தார்.

Tuesday, October 05, 2021

On Tuesday, October 05, 2021 by Tamilnewstv in    

 படித்துறை அங்காளம்மன் கோவிலில் ராகு தோஷ நிவர்த்தி பிரதிஷ்டை



திருச்சி குடமுருட்டி பாலம் அருகே அமைந்துள்ள அய்யாளம்மன் கோயிலின் அருகே  காவேரி கரையில் அங்காளம்மன் கோயில் உள்ளது


இந்தக் கோயில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அமைந்துள்ள கோயில் என்பது குறிப்பிடத்தக்கது இந்த கோயிலில் அந்த ஊர் பொதுமக்கள் படித்துறை அருகே அமைந்துள்ளது படித்துறை அங்காளம்மன் என்று கூறுவது வழக்கம் அப்படி சிறப்பு வாய்ந்த கோவிலில் இன்று ராகுவின் திரு உருவம் ஆன பாம்பின் வடிவில் ஹிந்து முறைப்படி மந்திரங்கள் ஜெபிக்கப்பட்டு கல் பிரதிஷ்டை செய்யப்பட்டது

மேலும் இந்தக் கோயிலில் காவல் தெய்வங்கள் மதுரை வீரன் சங்கிலிக்கருப்பு பைரவர் விநாயகர் அம்மனின் திருவுருவங்கள் போன்ற சிறப்பம்சங்களை கொண்ட கோயிலில்

பிரதிஷ்டை செய்யப்பட்ட பாம்பின் உருவம் கொண்ட ராகு தோஷ நிவர்த்தி கல்லுக்கு படையல் போடப்பட்டு பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது

இந்நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் பல ஊர்களில் இருந்து வந்த ஆண்கள் ,பெண்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கப்பட்டு அரசு விதிகளை பின்பற்றி கலந்து கொண்டனர்.

 கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!!


 பொதுநல வழக்கறிஞர் திரு. வேங்கை ராஜா அவர்கள் மாண்புமிகு நீதிபதி அவர்களுக்கு சால்வை அணிவித்து மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.


பின்னர் மாண்புமிகு. நீதிபதி அவர்கள் வழக்கறிஞர் அலுவலகத்திற்கு வருகைபுரிந்து வழக்கறிஞருடன் பொதுநலவழக்குகள் குறித்தும் பொதுநல வழக்குகள் தொடுப்பவர்களுக்கு அவர்களின் பாதுகாப்பு குறித்த என்ன என்ன பாதுகாப்பு உள்ளது என்பதனை வலியுறுத்தியும் ஆலோசனை நடத்தப்பட்டது. பிறகு இயற்கை வளங்களைக் காப்பது குறித்தும் இயற்கை வளங்களை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மூலிகைகளைப் பற்றி பொதுமக்களுக்கு விரிவாக புரியும் வண்ணம் எடுத்துரைப்பது பற்றியும், பொதுமக்களின் பாதுகாப்பு ஆலோசனைகள் நடத்தப்பட்டது.


மேலும்  பொது நலன் பாதுகாப்பு பொதுமக்களின் பாதுகாப்பு இயற்கை வளங்களின் பாதுகாப்பு குறித்த ஆலோசனைகள் மற்றும் விளக்கங்கள் மாண்புமிகு நீதிபதி அவர்களால் ஆலோசனை வழங்கப்பட்டது


Thursday, September 30, 2021

 மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு உற்சாகத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்


மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர்  வைகோ தஞ்சாவூர் செல்வதற்காக திருச்சி வருகை தந்தார்.


ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டக் கழகங்களின் சார்பில், திருச்சி - மதுரைசாலை சாரநாதன் பொறியியல் கல்லூரி  அருகில் வரவேற்பு  கொடுக்கப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப் பின்பு, நம் தலைவரின் திருமுகம் காண ஏராளமானோர் குவிந்தனர்


 இந்நிகழ்வில்,திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தின் சார்பாக, வெல்லமண்டி இரா.சோமு, திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் டி.டி.சி.சேரன்,திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர்மணவை தமிழ்மாணிக்கம்,திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர்,மாநில மகளிர் அணி செயலாளர் மருத்துவர்   ரொஹையா  ஷேக் முகமது தலைவரின் நேர்முக உதவியாளர் அடைக்கலம் , மைக்கேல் ராஜ் அரசியல் ஆய்வு உறுப்பினர் பாலுச்சாமி தெற்கு மாவட்ட அவைத்தலைவர்


மற்றும்திருச்சி மாவட்டத்திற்கு உள்பட்ட மாநில, மாவட்ட ,ஒன்றிய,நகர நிர்வாகிகள்,திருச்சி மாநகர பகுதிக்கழக நிர்வாகிகள் மற்றும் நிர்வாகிகள் - தொண்டர்கள்  அணிகளின் நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்.