Monday, July 06, 2015

On Monday, July 06, 2015 by Unknown   

தமிழகத்தில் ஏழைகளின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் முதல்வர் ஜெயலலிதா என நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.
ஜெயலலிதா மீண்டும் முதல்வரானதை முன்னிட்டு, அதற்காக சிறப்பு வழிபாடு மற்றும் வேண்டுதல் செய்தவர்களுக்கு மதுரை பாண்டி கோயிலில் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பரிசளிப்பு மற்றும் அன்னதானம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது: அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராவதற்காக மதுரை மக்கள் அனைவரும் அலகு குத்தியும், காவடி சுமந்தும் பல்வேறு வேண்டுதல்களை செய்தனர். அதன் மூலம் தமிழக மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா மீதிருக்கும் அன்பும், பற்றும் வெளிப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் எந்த அரசியல் தலைவரும் படைக்காத சாதனையை அவர் படைத்துள்ளார். ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசமில்லாமல் அனைத்துத் தரப்பு மக்களுக்குமான நல்லாட்சியை அவர் வழங்கிவருகிறார். முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியால், ஏழை எளிய மக்களின் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில், முதல்வர் ஜெயலலிதாவிற்காக வேண்டுதல் நிறைவேற்றியவர்கள் கெளரவிக்கப்பட்டனர். இதில், மதுரை மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். வெளிமாநிலத்தைச் சேர்ந்த நடனக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நத்தம் ஆர்.விஸ்வநாதன், ஆர்.பி. உதயக்குமார், எஸ். சுந்தர்ராஜன், மேயர் வி.வி. ராஜன் செல்லப்பா, துணை மேயர் கு. திரவியம், தில்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே. ஜக்கையன், ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

0 comments: