Monday, July 06, 2015

On Monday, July 06, 2015 by Unknown in ,    
மதுரையில் 7–ந்தேதி வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம்: தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள அழைப்பு
மதுரை புறநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் டாக்டர் சரவணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரமான முல்லைப் பெரியாறு அணையை மீட்டு தந்தது வைகோ என்பதை உலகம் அறிந்ததே. இந்த அணையை உடைக்க கேரள அரசும், அங்குள்ள அரசியல் கட்சிகளும் அராஜக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இதனை தடுத்து நிறுத்த, கட்சியின் தலைவர் வைகோ தலைமையில் கடும் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
தற்போது அணைக்கு, மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று ம.தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் மோடி அரசு, வழக்கம் போல் தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் செய்து மத்திய படை பாதுகாப்பை வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
கேரளத்தின் சதி செயலுக்கு துணை போகும் விதத்தில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில், விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கங்களால் அபாயம் ஏற்படும் என்று அபாண்டமாக பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. இதனை கண்டித்து வருகிற 7–ந்தேதி, மதுரை காளவாசல் சந்திப்பில் வைகோ தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதில் மதுரை புறநகர் மாவட்ட நிர்வாகிகள், செயல்வீரர்கள், பொது அமைப்புகளை சேர்ந்தவர்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்

0 comments: