Monday, August 29, 2016
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
மாகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் சட்டக்கூலி ரூ203-ஐ வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்   இன்று (29-9-2016) காலை 11 மணியளவில் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தாலுக்கா வி.தொ.ச.தலைவர் ஆர்.மணியன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வி.தொ.ச.தலைவர் எஸ்.லோகநாதன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் ஆர்.குமார், தமிழ்நாடு விவசாய சங்க தாலுக்கா செயலாளர் எஸ்.கே.கொளந்தசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இப்போராட்டத்தில் வி.தொ.ச. தாலுக்கா செயலாளர் க.பிரகாஷ், துணைத்தலைவர் ராமசாமி, சிஐடியு நிர்வாகிகள் பன்னீர்செலவம், வி.கே.பழனிசாமி உட்பட                 40 பெண்கள் உட்பட 100 பேர் கலந்து கொண்டனர்.   (இணைப்பு: போட்டோ)
கோரிக்கைகள்;
-மாகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் சட்டக்கூலி ரூ203-ஐ வழங்க வேண்டும். சம்பளம் வழங்க காலதாமதம் செய்ய கூடாது. 100 நாள் வேலையை 85 நாளாக குறைக்காதே! 150 நாளாக உயர்த்திடுக!
-ஊத்துக்குளி தாலூக்கவில் முதியோர், விதவை, ஊனமுற்றோர் உதவி தொகை கேட்டு விண்ணப்பித்தவர்களை பரீசிலித்து உத்திரவுகள் வழங்க வேண்டும். உதவி தொகை நிறுத்தியோர்களுக்கு மீண்டும் வழங்க வேண்டும்.
-ஊத்துக்குளி தாலூக்கவில் புதிய குடும்ப அட்டை கேட்டு 2013 ஆண்டு முதல் விண்ணப்பித்தவர்களுக்கு இன்னும் குடும்ப அட்டை வழங்கப்படவில்லை. அவர்கள் மீண்டும்  மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியுள்ளது. பெறப்பட்டுள்ள அனைத்து விண்ணப்பங்களுக்கும் உடனடியாக குடும்ப அட்டை வழங்க வேண்டும்.
Total Pageviews
News
Pages
Popular Posts
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
 - 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
 - 
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
 - 
திருச்சி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதை மதுரையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்ப...
 - 
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
 - 
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
 - 
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
 
 
0 comments:
Post a Comment