Tuesday, July 22, 2014
On Tuesday, July 22, 2014 by Anonymous in Sports
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 28 ஆண்டுக்கு பின் வரலாற்று சாதனையை படைத்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி.
கடந்த 17 ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச தீர்மானித்தது. இத்னைத்தொடர்ந்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 295 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. முதல் இன்னிங்சில் ரகானே சிறப்பாக ஆடிய 103 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 319 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இங்கிலாந்து தரப்பில் ஜிஎஸ் பல்லன்ஸ் 110 ரன்களும், பிளன்கட் 55 ரன்களும் குவித்தனர். இதனைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 342 ரன்களுக் ஆட்டம் இழந்தது.
முரளி விஜய் 95 ரன்களும், ரவீந்தர் ஜடேஜா68 ரன்களும், புவனேஸ்வர் குமார் 52 ரன்களும், குவித்தனர். இதனையடுத்து 319 ரன்கள் எடுத்தால் வெற்றிய என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியில் துவக்க வீரர்கள் கூக் 22 ரன்களுடனும், ரோம்சன் 7 ரன்களுடனும், பல்லான்ஸ் 27 ரன்களுடனும், பெல் ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
இதனையடுத்து நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்திருந்தது. இதனைத்தொடர்ந்து கடைசி நாளான இன்று களம் இறங்கியது. 5 ஆவது விக்கெட்டுக்கு களம் இறங்கிய ரூட், எம்எம் அலி ஜோடி100 ரன்கள் குவித்தது. இந்நிலையில் ரூட் 66 ரன்களுடனும், அலி 39 ரன்களுடனும் அவுட் ஆகினர். இதனையடுத்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
இதனால் இங்கிலாந்து அணி 88.3 ஓவரில் 224 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதனால் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக பந்து வீசிய இஷாந்த் சர்மா 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
முன்னதாக முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை வீழத்திய புவனேஸ்குமார், 36 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 52 ரன்களும் எடுத்து சிறப்பாக ஆடினார்.
28 ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்து அணியை லார்ட்ஸ் மைதானத்தில் வென்றுள்ள இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
J.J. College of Engineering and Technology, Tiruchirappalli Graduation Day – 26.08.2018 J.J. College of Engineering and Technolog...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
-
த மிழகத்தில் எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாய் இருக்கிறது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், கோயில் நகரம், கொலை நக...
-
மாணவியர்க்கு வனத்துறை .எம்.எஸ்.எம்.ஆனந்தன் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் திருப்பூர் கலெக்...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
சபரிநாதன் 9443086297 தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பாக திருச்சியில் வேலை...
0 comments:
Post a Comment