Saturday, July 19, 2014
ஈரோடு சூரம்பட்டியில் உள்ள குமரன் வீதியை சேர்ந்தவர் சாந்தி. இவரது குடிசை வீட்டின் அருகே வரிசையாக குடிசை வீடுகள் உள்ளன. இவர்கள் அனைவரும் கூலித்தொழிலாளர்கள். இன்று காலை அனைவரும் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டனர். இதில் சாந்தி வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது.
அவரது வீட்டில் பிடித்த தீ மள... மள...வென பக்கத்து வீடுகளுக்கும் பரவியது.
இந்த தீ விபத்தில் 7 வீடுகள் எரிந்து சேதம் ஆனது. வீட்டில் இருந்த கட்டில், பீரோ, டேபிள் மற்றும் துணிமணிகள் உள்பட அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாகி விட்டது. அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.
தீ விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு ஈரோடு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர்.
மேலும் தீ பரவாமல் அணைத்தனர். இந்த தீ விபத்தில் சேதமதிப்பு உடனடியாக தெரிய வில்லை.
இந்த தீ விபத்து குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாவட்டம், முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை சுற்றுவட்டார விவசாயிகளின் தேங்காய், கொப்பரை தேங்காய், எ...
-
தமிழ் சினிமாவில் 90களில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற பூவே பூச்சூடவா படத்தின் உல்டா தான் இந்த மஞ்சப்பை. இன்றைய காலகட்டத்தி...
-
இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி திருப்பூரில் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். ஊத்துக்குளி செட்டிதோட்டம் அண்ணமார்நகர் பகுதியிலுள்ள ...
-
திருப்பூர்,செப்.25- திருப்பூர் கோ-ஆப்டெக்ஸ் குமரன் விற்பனை நிலையத்தில் மகாராணி பட்டுச் சேலையை கலெக்டர் கோவிந்தராஜ் அறிமுகம் செய்து வைத்...
-
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதா வது:– வருவாய்க்கு மீறி சொத்துக் குவித்த வழக்கில் அ.தி.மு.க. பொத...
-
சேவூர் அருகே பொங்கலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் டிராக்டர் ஓட்டுநர் உயிரிழந்ததாகக் கூறி, அவரது உறவினர்கள் திங்கள்க...
-
சிவகங்கை: மணல் கடத்திய லாரியை பிடிக்கச் சென்ற எஸ்.ஐ.க்கு அடி, உதை விழுந்தது. இந்த சம்பவத்தால், மானாமதுரை அருகே பரபரப்பு தொற்றிக்கொண்டது. ...
-
உரம் விற்பனை தொடர்பாக விவசாயிகள் பல புகார்களை தெரிவித்து வந்தனர். இதைத்தொடர்ந்து கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் உத்தரவின் பேரில் திருப்பூர் வேளாண...
0 comments:
Post a Comment